அத்தியாயம் 4
செய்வதை எல்லாம் செய்துவிட்டு ஒன்றும் அறியா பிள்ளை போல வெளியே போக இருந்தவளை வலுக்கட்டாயமாகத் திருப்பி தன் கையில் இருந்த காபியை அவளது வாயில் ஊற்றிக் குடிக்கவைத்தான். அதுவும் கப் முழுவதுமிருந்த கொஞ்சம் காபி நிறைய நீருமாக இருந்த கலவையை அவள் மறுக்க மறுக்க புகட்டியவன், “எவ்வளவு ஏத்தமிருந்தா நீ காபியில தண்ணிக் கலந்து குடுப்ப... இனி சாப்பாடுல ஏதாவதுக் கோளாறு செய்... கோளாறு செய்ய இந்த கையே இல்லாமப் பண்றேன்...” என்றவன் அவளதுக் கையை ஒரு முறுக்கு முறுக்கி வலிக்கச் செய்தவன், “இன்னொரு முறை என்கிட்டே இப்படி விளையாடி பாருடி... அப்புறம் தெரியும் இந்த அன்பன் யாருன்னு...” என்று உறுமினான். “அம்மா...” என்று அவனது முறுக்கலில் கையை உதறி வலியில் கத்தியவள், “ப்ளுவேல்... ப்ளுவேல்...” வாய்க்குள் முணகியவளின் கண்களில் கண்ணீர் நிரம்பி இருந்தது... “இப்படி பேசுற வாய்க்கும் சேர்த்து ஒரு பூட்டுப் போடணும்டி..” என்றவன் அவளது இதழ்களைக் கடித்து வைத்தான். இதழ்களோடு நிறுத்தாமல் அவனது பயணம் தொடர... “அம்மாடி இவன் நிஜமாவே ப்ளுவேல் தான் போலேயே... நாம தான் ரொம்ப விளையாடிப் பார்க்கிறோம் போலேயே... எல்லாத்தையும் இத