அத்தியாயம் 1

அத்தியாயம் 1

 

என்னடி இன்னைக்கும் செமத்தியா திட்டு வாங்குனியாகேலியுடன் தன் தோழியை கேட்டாள் சங்கவி.

எனக்கு அதைவிட வேற என்ன வேலை சொல்லு, திட்டு வாங்காட்டி எனக்கும் தூக்கம் வராது, திட்டாட்டி அந்தாளுக்கும் தூக்கம் வராது. ரெண்டு பேரும் அப்படியாபட்ட வரத்தை இல்ல வாங்கிட்டு வந்திருக்குறோம், நீ பேசாம என்னடி பண்ணுவஎன்று முறைத்தபடி தன் இருக்கையில் அமர்ந்து கணினியை கையாள ஆரம்பித்தாள் மஹி...

இதெல்லாம் தெரிஞ்ச கதை தானேடி, ஆனாலும் எங்களால கேக்காம இருக்க முடியல, எங்களை வேற என்ன பண்ண சொல்றபெரிதாய் வருத்தப்படுவதை போல காமினி சொல்ல.

அடிங்க.. காலையிலேயே கங்கணம் கட்டிக்கிட்டு தான் வந்தீங்களாடி, என்னை போட்டு தாக்கணும்னு, இப்போ நீங்க பேசுற பேச்சுக்கும் அந்தாளு என்னை தான் கூப்பிட்டு  திட்டுவான். மரியாதையா அவ அவளுங்க கணினிய பாருங்க எதா இருந்தாலும் இடைவெளில பேசிக்கலாம்என்று தன் பணியை செய்ய ஆரம்பித்தாள் அவள்.

ஆனால் அதை செய்ய விட மாட்டேன் என்று அவளுடைய மேலாளர் அவளை கூப்பிட்டான்.

உங்களுக்கு எத்தனை முறை சொல்றது, இப்போ தானே வார்ன் பண்ணி அனுப்பினேன். ஒன் செக் கூட ஆகல,. அதுக்குள்ள மறுபடியும் அரட்டை அடிக்க ஆரம்பிச்சாச்சு..  கொஞ்சமாச்சும் ஒரு சின்சியர் இருக்கா உங்க கிட்ட.. எப்போ பாரு பேசிக்கிட்டே இருக்கிறது. இப்படி தான் அலுவலகத்துல வேலை பார்பீங்களா கொஞ்சம் கூட கவனமே கிடையாது. இப்படியே பண்ணிக்கிட்டு இருந்தீங்க நான் மேலிடத்துல சொல்ல வேண்டியது வரும்என்று கடுப்படித்து அவளை அனுப்பி வைத்தான்.

அதை கொஞ்சமும் சட்டை செய்யாமல் தன் வேலைகளை செய்ய தொடங்கினாள் மஹி. மத்திய இடைவேளையில் நிறுவனத்தின் உள்ளே இருந்த உணவகத்தில் அவளது பட்டாளத்துடன் வந்து அமர்ந்தாள்.

அனைவரும் வீட்டிலிருந்து உணவை எடுத்து வந்து உண்ண, மஹி மட்டும் உணவகத்தில் வாங்கி உண்டாள். வீட்டை விட்டு வந்து கிட்ட தட்ட பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டது. ஆறிலிருந்து கல்லூரி வரை விடுதி தான். வேலை கிடைத்த உடன் இருவர் வசிக்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் நிறுவனமே தங்கும் வசதி ஏற்பாடு செய்திருக்க அவளுக்கு வசதியாய் போனது...

ஊருக்கு வருடத்தில் ஒருமுறை தான் அதுவும் அவளுக்கு அழைப்பு வந்தாள் மட்டுமே போவாள் இல்லை என்றால் எப்போதும் விடுதி வசம் தான்.

பதினைந்து வருடம் மதராஸ் வாசி என்றாலும் சல்வார், ஜீன், ஜோலி என்ற எந்த மாடன் உடையும் அவளது உடலை தழுவியது இல்லை.. வீட்டை விட்டு வந்தாலும் வீட்டின் கட்டுப்பாடு அவளை தொடர்ந்துக்கொண்டு தான் இருக்கிறது.

கல்லூரியில் இருந்தே புடவை தான். பாவாடை தாவணி கூடக்கிடையாது.

அது எப்படித்தான் உன்னால மட்டும் முடியுதோடி, புடவையில வர்ற, வெள்ளி செவ்வாய்னா கோவிலுக்கு போற, அச்சு அசல் கிராமத்து பொண்ணு, ஆனா வாய் மட்டும் அதுக்கு எதிர் பதம். ஹப்பா ஆள் ரவுண்டர் கேடிடி நீஎன்று வாஞ்சையுடன் காமினி கேலி பண்ண,

அதெல்லாம் அப்படி தாண்டி, மஹின்னா கெத்துடிஎன்று காலரை தூக்கிவிடுவது போல தூக்கிவிட்டுக்கொண்டு சிரிக்க

சிரிக்காதடி ராட்ச்சசி அந்த ஆளுக்கிட்ட அவ்வளவு திட்டு வாங்கியும் அடங்குரியா நீ, உன் வேலைய தானே பார்க்குற நீ... வாயை பாரு, பேசி பேசி சிரிக்க வச்சி அவருகிட்ட எங்களையும் கோத்து விட்டர்றஎன்று கொதித்தாள் சங்கவி.

பின்ன யான் பெற்ற இன்பம் பெருக இவ்வைய்யகம் இல்லையா அது தான்கண் சிமிட்டி சொன்னவளை எல்லோரும் கொலை வெறியுடன் கண்டனர்.

அடிபாவி பழிவாங்குறதுக்கு இப்படி ஒரு குரலா, சரி தான்என்று முறைத்தாள் மீனா.

அதை விடுங்கடி அது எப்பொழுதும் நடப்பதுதானே இன்னைக்கு மட்டும் என்ன புதுசா வா செஞ்சுக்கிட்டு இருக்கா, சரி அந்த ஆளை கண்டு பிடுச்சியா இல்லையாடி இப்படியா ஒரு மனுஷன் கண்ணாமூச்சி காட்டுவான்என்று ஆற்றாற்று போனாள் சங்கவி.

எங்கடி இன்னும் கண்டு பிடிக்கல, நானும் அலுவலகம் விட்டு எவ்வளவு வேகமா வீட்டுக்கு போய் பார்த்தாலும் அவன் எனக்கு முன்னாடி வந்து சமைச்சி சாப்பிட்டுட்டு எனக்கு கொஞ்சம் கூட வைக்காம தனி ஒருத்தனா தின்னுட்டு என் வயித்தெரிச்சலை கொட்டிக்கிட்டு கதவை சாத்திடுறான். பாவி மகா பாவி, வந்து மூணு மாசம் ஆச்சு இன்னும் அறிமுகமாகிக்கலஎன்று நொந்து போனாள் மஹி.

பின்ன என்னங்க ஒரே வீட்டுல இருந்துக்கிட்டு இவ வந்ததுலயிருந்து அவன் கண்ணுலேயே படமா சுத்திக்கிட்டு இருக்கான். ‘அவன்ன்னு எப்படி கண்டுபிடிச்சான்னு பார்த்திங்களா, அது வெளில ஆண்கள் அணிய கூடிய செருப்பை வைத்துதான்.. நம்ம மஹி அறிவாளில்ல (நாமலே சொல்லிக்கிட்டாதான் உண்டு) ஹிஹிஹிஹி..

சரி விடுடி நீயும் தான் எவ்வளவோ முயற்சி பண்ற ஆனா அவன் உன்னை சுத்தல்ல விடுறானே ஒரு வேலை வேணுமுன்னே பண்றானோசங்கவி சந்தேகிக்க

அதுல உனக்கு சந்தேகமே வேணாம் எனக்கு தெள்ள தெளிவா தெரியுது. அவன் என்னை அவாய்ட் பண்றான்னு. அவன் என்னை தவிர்க்க தவிர்க்கத்தான் வலுகட்டாயமா அவன் முன்னாடி போய் நிக்கனும்னு வெறியா வருதுடி..” என்றாள் எரிச்சலாக

போய் நிக்க வேண்டியது தானேடி, அவனோட அறை கதவை தட்டி அவனை வெளியே வர சொல்லுஎன்று காமினி யோசனை தர

இன்ன வரையிலும் நாகரிகம் பார்த்தது அவன் கதவை தட்டுனதே இல்லை, ஆனா இன்னைக்கு கதவை தட்ட தான் போறேன் மகனே தொறக்காம இருக்கட்டும் கதவை உடைக்கிறேனா இல்லையான்னு பாருபல்லை கடித்தாள் மஹி.

அவளது கோவத்தை பார்த்து தோழிகள் சிரித்தனர்.

சிரிக்காதீங்கடி எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு அவன் மட்டும் என் கையில கிடைச்சான் செத்தான் அவன்

ஹே மெல்ல பேசுடிதிடிரென்று சங்கவி காதை கடிக்க

ஏன்டிகேள்வியாய் அவளை பார்க்க

ம்ம் உன்ற ஆளு பக்கத்து டேபில்ல தான் உட்கார்ந்துருக்காறு அடக்கி வாசிஎன்றாள்.

மஹா வேகமாய் திரும்பி பார்க்க அங்கே அவளது மேலாளர் ரிஷி அமர்ந்திருந்தான். அதை கண்டு காண்டானவள் திரும்பி கவியை பார்த்துஅடிங்க இவன் என் ஆளா, ஏதோ அவனுக்கு பியே வேலை பார்த்தா அவன் என் ஆளா தொலைச்சுடுவேன்டி உன்னை, இவனுக்கு வேற வேலையே இருக்காதாடி. நான் சிருச்சு பேச ஆரம்பிச்சாலே காக்காவுக்கு மூக்கு வேர்த்த மாதிரி வந்திடுவான் பாவிமுனுமுனுத்தபடி விரைத்து போயிருந்த தக்காளி சாதத்தை கடனேன்னு சாப்பிட்டு முடித்தாள்.

அவளது புலம்பலை கேட்டவர்கள்ரிஷின்னு சொன்னாலே போதும்டி, இவ வாய் தானா ஒட்டிக்குதுஎன்று மீனா அவளை கலாய்க்க

வாய மூடுடி சிடுமூஞ்சிக்கு கேட்டு தொலைக்க போகுது. அதுக்கும் சேர்த்து என்னை தான் திட்டி தீர்க்கும்என்று தலை நிமிராமல் சொல்லிவிட்டு கை கழுவ சென்றாள் மஹி..

அதை கேட்ட மற்ற தோழிகள் மூவரும் மனம் விட்டு சிரித்தார்கள்.

அலுவலகம் முடிந்து தன் அப்பார்ட்மெண்டுக்கு வந்தாள் மஹி.

கதவை திறந்து உள்ளே நுழையும் போதே சமையலின் வாசம் அவளை இழுத்தது.. எதிர் புறம் இருந்த கதவை பார்த்தாள். இறுக சாத்திக்கிடந்தது.

வேகமாய் சமையல் அறைக்கு சென்று பார்த்த போது அங்கு வெறும் கிண்ணங்கள் மட்டுமே அவளை வரவேற்றது. ஏமாற்றத்துடன் தன் வயிற்றை தடவிக்கொண்டவள் கூடத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்து டிவியை போட்டுவிட்டு அதில் ஆழ்ந்தாள்.

ஆனாலும் உள்ளுக்குள்கதவை தட்டலாமாவேணாமா என்ற பட்டி மன்றம் ஓட, எப்பொழுதும் போல வேணாம் என்று முடிவு பண்ணி டிவியில் மூழ்கி போனாள்.

அடுத்த நாள் அலுவலகத்தில் ரிஷி அவளை வாங்கு வாங்கு என்று வாங்கிக்கொண்டு இருந்தான்.

அக்கவுன்ஸ் டிப் ல இருக்கோமேன்ற பொறுப்பு கொஞ்சமாச்சும் இருக்கா உனக்கு.. இப்படியா தப்பு தப்பா கணக்கு போடுவ, புத்திய எங்க தான் வச்சு இருக்கியோ.. எப்போ பாரு அந்த மூணோட சேர்ந்து கூத்தடுச்சுக்கிட்டே இருக்கிறது. இதுக்கு தானே நீ அலுவலகம் வர்றது.. ச்ச.. சரியான இர்ரெஸ்பான்சிபில் இடியட் நீஎன்று அவன் பாட்டுக்கு திட்டிக்கிட்டே இருக்க அவளோ அவனை கொஞ்சமும் கண்டுகொள்ளவே இல்லை.

முதல் முதலாய் வந்த காதலும் வந்த நேசமும்என்ற பாட்டுல வரமாதிரி சுகமா.. சுகமான்னு கேட்கிற போல இருந்தது மஹிக்கு ரிஷியின் திட்டுக்கள்.

அதில் சட்டென்று சிரிப்பு வர,

ரிஷி திட்டுவதை விட்டுட்டு அவளை பார்த்து முறைத்தான்.

சார் இனிமே இந்த மாதிரி தப்பு வராது, அதுக்கு நான் கியாரண்டிஎன்று மேலும் ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு வெளியே ஓடி வந்துவிட்டாள்.

இவ்வளவு நேரம் திட்டரமே.. கொஞ்சமாச்சும் உறைக்குதா பாரு.. நீ சொல்றத்தை சொல்லு, நான் செய்யிறதை செய்யிறேன்ற கதையா போய்டுச்சு இவ கிட்டபல்லை கடித்தவன் வேறு சிந்தனையில் ஆழ்ந்தான்.

மத்திய இடைவேளை வரஏண்டி நேத்திக்காவது அவனை பார்த்தியா இல்லையா.. என்ன தான் சொல்றான் அவன்என்று மீனா கேட்க

ம்கும் நான் இன்னும் அவனை பார்க்கவே இல்லை. இதுல அவன் வந்து கதை சொல்றானாக்கும் போடிஎன்று அலுத்துக்கொண்டாள் மஹி.

அப்போ நேத்துக்கு போய் கதவை தட்டலாயாடி.. இதுக்கு தான் நீ நேத்தைக்கு அப்படி வீர வசனம் எல்லாம் பேசுனியாக்கும்நொடித்துக்கொண்டாள் காமினி..

என்னன்னு தெரியலடி ஒரு மாதிரி தயக்கமா இருக்கு

உனக்கு தயக்கம்னா அதை சின்ன பிள்ளை கூட நம்பாது.. அனானபட்ட ரிஷி சாரையே முழி பிதுங்க வைக்குற உனக்கு தயக்கமா நம்பிட்டோம்டி..”

அது என்னவோ தெரியல சங்கவி.. ரிஷியை பார்த்தா எனக்கு சிரிப்பு தான் வருது.. அவரு அவ்வளவு கஷ்ட பட்டு வார்த்தையை தேடி தேடி என்னை திட்டுவாரு.. ஆனா எனக்கு அதெல்லாம் நலம் விசாரிக்கிற மாதிரி தான் இருக்கும்என்றாள்.

எங்களுக்கெல்லாம் அவரு திட்டுனா அழுகை தான் வரும். முகத்தை உர்ருன்னு வச்சுக்கிட்டு நிமிர்ந்தே பார்க்காம கல்லு மண்ணுகிட்ட பேசுற மாதிரி பேசிட்டு, இல்ல திட்டிட்டு போவாரு.. ஆனா உனக்கு நலம் விசாரிக்கிற மாதிரி இருக்காக்கும். இரு சார் கிட்ட சொல்றேன். அதேப்படிடி சலிக்காம அந்த மனுசர் கிட்ட திட்டு வாங்க முடியுது உன்னாலஎன்று காமினி கேட்க

அவளை ஒரு மார்க்கமாய் பார்த்தாள் மஹி..

இப்படி பார்த்தா என்னடி அர்த்தம்

இதெல்லாம் ஒரு டைம் பாசுடி..வேலை நேரத்துல தூக்கம் வந்து தொலைக்குது.. விரட்டுனா போவே மாட்டிங்குது.. அதே ரிஷி காட்டு கத்து கத்துனா அப்படியே பின்னங்கால் பிடரியில அடுச்சுக்கிட்டு ஓடிடுது இந்த தூக்கம்.

அதுக்காக தான். அதோட இல்லாம அந்த ஆளுக்கு தான் பெரிய ரவுடின்னு நினைப்பு, நினைச்சதெல்லாம் நடத்திடனும்னு ஒரு ஆசை. ஆனா என் கிட்ட அவரோட பாட்ச்சா பலிக்காது.. நான் கடைசி வரை திருந்தவே மாட்டேன். நம்ம முயற்ச்சில கூட ஒருத்தியை திருத்த முடியலன்னு சாரோட வரலாற்றுல பொறிக்க படனும். அதனால அதுக்காகவே தான் நான் தப்பு தப்பா கணக்கை போடுறேன். இல்லைனா ஏண்டி, கோல்டு மெடல் எடுத்தவளால ஒரு சின்ன கணக்கை போட முடியாதா என்னஎன்று முடிக்கும் முன்.

கம் டூ மை ரூம்.” என்ற கடினமான குரல் வர திகைத்து திரும்பி பார்த்தாள் மஹி.

கோபமாய் எள்ளும் கொள்ளும் வெடிக்க நின்றிருந்தான் ரிஷி..

இப்பவே வரணுமாஎன்று தயிரே இல்லாதா தயிர் சாதத்தை பார்த்து கேட்டாள் ஏக்கமாய்.

தோழிகள் மூவரும் வெலவெலத்து போய் நின்றிருந்தார்கள்.

அவளை கண்கள் இருங்க பார்த்தான். அவனது பார்வையின் அர்த்தம் புரிய

இந்த கேண்டீன்ல தயிர் சாதம் கூட நல்லா இல்ல.. அதனால நான் இப்பவே வர்றேன் சார்என்று விட்டு நகர, மற்ற மூவரையும் முறைத்து விட்டு சென்றான். அவனது பார்வையில் அவர்கள் அரண்டு போனார்கள்.

இவ ஏண்டி இப்படி இருந்து வைக்குறாஎன்று புலம்ப மட்டுமே அத்தோழிகளால் முடிந்தது.

அறைக்கு வந்த மஹியை எரிப்பது போல பார்த்தான். அதை எல்லாம் ஓரம் கட்டியவள்

சார்என்று ஆரம்பிக்க

நான் பேசுறதை கேட்கத்தான் உன்னை இங்க வர சொன்னேன்... நீ கதை சொல்வதை கேட்க இல்லஎரிந்து விழுந்தான்.

அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டுபெர்மிஷின் கிராண்டட்என்று அவன் காது படவே அவள் முணுமுணுக்க, அதில் கொதித்து போய் தன் இருக்கையை விட்டு விருட்டென்று எழுந்தான்.

மஹி திசிஸ் த லிமிட்

சார்என்று ஏதும் அறியாத பிள்ளை போல முகத்தை வைத்துக்கொண்டு கூப்பிட்டவளை கண்டு அவனால் பல்லை மட்டுமே கடிக்க முடிந்தது.. அவளின் மீது அவ்வளவு எரிச்சல் வந்தது ரிஷிக்கு.. அதில் கண்டாகி

ஐ சே கேட் அவுட்என்று கர்ஜிக்க

தோளை குலுக்கி விட்டுஓகே பை சார்என்று விட்டு சென்றவளின் மீது கட்டுக்கடங்கா கோவம் எழுந்தது..

எனக்கும் நேரம் வரும் அப்போ பார்த்துக்குறேன் உன்னைகருவியவன் மீதி வேளைகளில் கவனத்தை செலுத்த முடியாமல் போனான்.

மீதி சாப்பாட்டை சாப்பிட முடியாத கொடுமையில் தோழிகளும் இருக்கைக்கு திரும்ப

என்னடி போனவுடன் வந்துட்ட, சார் திட்டல, அவ்வளவு சுலபமா விட மாட்டாரே உன்னைஎன்ற காமினியுடன் சேர்ந்து மற்ற இருவருக்கும் நடந்ததை மஹி சொல்ல

அடிப்பாவி இப்படியாடி பேசி வைப்பநெஞ்சில் கைவைத்து தங்களை திட படுத்த முனைந்தனர்..

நான் மனசுக்குள்ள பேசுறேன்னு நினைச்சுக்கிட்டு வாய் விட்டு சொல்லிட்டேன் போலடிஎன்று கொஞ்சமும் அசராமல் சொன்னவளை தோழிகள் மூவரும் மொத்தி எடுத்தார்கள்.

தொடரும்...

 

Comments

உயிருருக உன் வசமானேன்..