அத்தியாயம் 11


அத்தியாயம் 11

 

பதினோரு மணி போல தூக்கம் கலைந்து புரண்டு படுத்தவள் அருகில் ஏதோ ஒன்றை உணரவும் வேகமாய் எழுந்து அமர்ந்தாள். விடிவிளக்கின் ஒளியில் போர்வை கூட போர்த்தாமல் அவளுக்கு மட்டும் விரிப்பை விரித்திருந்தவன் அவனுக்கு எதையும் விரிக்காமல் வெறும் தரையில் தலையணையும் இன்றி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனை கண்டு உள்ளம் நெகிழ்ந்து போனது.

அவனது முகவடிவு அவளை இழுக்க அவனருகில் சென்று ஆசையாய் வருடிக்கொடுத்தவள் முன் உச்சி முடியை கோதி கலைத்து ரசித்து பார்த்தாள்.

இவ்வளவு நாளா ஏன் இந்த வாழ்க்கையை வாழணும்னு அடிக்கடி எனக்குள்ளே கேள்வி கேட்டுக்குவேன் ரிஷி.. அந்த அளவுக்கு இந்த வாழ்க்கை எனக்கு பிடிக்காம இருந்தது. ஆனா இப்போ உங்களை சந்திச்ச பிறகு என் வாழ்க்கையை நான் அனுபவிச்சு வாழணும்னு தோணுது.. இந்த வாழ்க்கை எனக்கு நிலைக்கனும்னு மனது கிடந்து தவிக்குது.. உங்க கூடவே உங்களோட இன்னொரு ஒரு உறுப்பா மாறிட மாட்டமான்னு இருக்கு ரிஷி...” என்று கண் கலங்கி அவனது நெற்றியில் முத்தமிட்டவள் அவனை கட்டிக்கொண்டு தூங்கி போனாள்.

அவள் அருகில் வரவும் தூக்கத்திலே அவளை உணர்ந்தவன் மென் சிரிப்பு ஒன்றை உதிர்த்து அவள் மீது கை போட்டு தனக்குள் இழுத்துக்கொண்டான்.

அவன் கொடுத்த கதகதப்பு அவளுக்கு தாய்மையின் அரவணைப்பை போல இருக்க அதை இழக்க மனமில்லாமல் அவனோடு சுருண்டு கொண்டாள்.

மனம் முழுவதும் ரிஷியே நிறைந்து இருந்தான். பசித்த வயிற்றை கண்டு கொள்ளாமல் அவன் மார்பு மீது முகம் பதித்து அவனை கலைக்கா வண்ணம் அசையாமல் படுத்துக்கொண்டாள்.

இந்த நொடிகள் அவளுக்கு சுவர்கம்... ரிஷி முழித்து இருந்தால் கூட இந்த அணைப்பு வேறாகி போய் இருக்குமோ என்னவோ.. ஆனால் இந்த நெருக்கம் குழந்தை தன் தாயை தேடி கட்டிக்கொள்ளுமே அது போலவே இருந்தது.

சொல்லிற்குட்படா அன்பை நேசத்தை நீ தரும்போது நான் அனுபவித்த எல்லாமே எனக்கு மறந்து போவது போல இருக்கு ரிஷி... நான் பட்ட காயம், வலி, வேதனை, அவமானம், இழப்பு எல்லாமே என் நினைவில் கூட இல்லாமல் போய்விட்டது..”

ஒருவருடைய இருப்பு இவ்வளவு மாற்றத்தை கொடுக்குமா என்று அவளே வியந்து போனாள்.

அவனது அண்மை அவளுக்கு பாதுகாப்பு வளையமாய் இருக்க முழுதாய் நித்திரையில் ஆழ்ந்தாள். அவள் தூங்க தொடங்கிய சமயம் அவன் முழித்துக்கொண்டான்.

தன் கையணைப்பில் இருப்பவளை நம்ப முடியாமல் பார்த்தவன் பின் மெல்ல நகைத்து அவளுடைய நெற்றியில் முத்தம் இட்டவன் அவளை சற்றே இருக்க அணைத்தான்.

அவனது அணைப்பு அவளை விழிக்க செய்ய நிமிர்ந்து அவனை பார்த்தாள். நான்கு விழிகளும் ஒன்றை ஒன்று கவ்வி நிற்க இருவரிடமும் எந்த அசைவும் இல்லை.

அவள் விலகிவிடுவாள் என்று நினைக்க அவள் விலகாமல் அப்படியே இருக்க கண்டு மனது மகிழ்வுக்கொண்டது.

அவன் அணைப்பான் என்று அவள் இருக்க அவனோ எதுவும் செய்யாமல் அப்படியே இருக்க ஏனோ அவனை அந்த நொடி அவளுக்கு அதிகம் பிடித்து போனது.

எம்பி அவனது நெற்றியில் முத்தம் இட்டவள் அவனிடமிருந்து விலகி போக அவளது கையை பிடித்தவன்

நான் அங்க கேக்கலஎன்றவன் அதுவரை இருந்த தாய்மை மாறி முழு காதலனாய் நின்றான் அவள் முன்.

அவனது அந்த மாற்றமும் அவளுக்கு பிடித்து இருக்க

ஆமா தான் ஆனா எனக்கு இப்போ குடுக்க தோனலஎன்று கண்ணடித்தவள் எழுந்து செல்ல

ஒய் மரியாதையா குடுத்துட்டு போடி..” மிரட்டினான்.

அது உங்க சாமார்த்தியம் மிஸ்டர். எப்போ வாங்கணுமோ.. எங்க வாங்கணுமோ வாங்கிக்கோங்கஎன்றவள் எழுந்து சமையலறைக்கு சென்று சமைக்கலாம் என்று பார்க்க அங்கு எல்லாமும் தயார் நிலையில் இருப்பதை பார்த்து

ம்ம்... பரவால குட் வொர்க்என்று கூடத்தில் இருந்த அவனை எட்டி பார்த்து கலாய்க்க

நீ ஏன்டி சொல்லமாட்ட..” என்று எழுந்தவன் அவளை நாடி வர அவனது நெருக்கம் அவளை மறுபடியும் படபடவைத்தது.

இப்போ நான் ரொமான்ஸ் பண்ற மூடுல இல்லடி.. பசிக்குது சாப்பாடு எடுத்து வைஎன்றவன் கைகழுவும் இடத்திலே முகத்தை கழுவி எட்டி நின்று இருந்தவளின் முந்தானையை இழுத்து முகம் துடைத்தவன் அவளுக்கு உதவியாக எல்லாவற்றையும் எடுத்து உணவு உண்ணும் மேசை மீது வைத்தான்.

அவனது செய்கையில் முறைத்து பார்த்தாள் அவனை. அவன் கண்டுகொண்டால் தானே அவளை...

எரும மாதிரி வளர்ந்து இருந்தா மட்டும் போதாது.. இப்படி துணியை நாசம் பண்ணாமா..” என்று மேலும் என்ன சொன்னாளோ அது அத்தனையும் அவனது இதழ்களுக்குள்ளே யாருக்கும் புரியாமல் வெளிவந்தது.

அவனது அதிரடியை எதிர் பாராதவள்இது மூணு மணி நேரத்துக்கு முன்பே நடந்து இருக்க வேண்டியது’.. என்று தான் எண்ணிக்கொண்டாள் ரிஷியின் உணர்வை புரிந்து கொண்டவளாய்.

மெல்ல அவளை விடுவிக்க அவனுக்கு முதுகு காட்டி நின்றவள்

என்னை எழுப்பி இருக்கலாமே... நீங்க மட்டும் தனியா செஞ்சு இருக்கீங்கதன் உணர்வுகளை மறைத்துக்கொண்டு கேட்க

எழுப்பி இருக்கலாம் தான்.. ஆனா மனது வரலடிஎன்றான் தாய்மையுடன்.

அதை உணர்ந்து கொண்டவள்இப்படியே செல்லம் குடுத்து குட்டிசெவுறாய் ஆக்குங்க... நல்ல முன்னேற்றம் வரும்என்று நொடித்துக்கொண்டாள்.

உனக்கென்னடி பொறாமை என் மஹிக்கு நான் செஞ்சு தரேன்..” சிலிர்க்க

சிலிர்த்தவனின் சட்டையை கொத்தாய் பற்றியவள் தனக்கு நெருக்கமாக கொண்டு வந்து அவனது விழிகளுக்குள் விழி வைத்து

சத்தியமா உன் கூட நான் நூறு வருஷம் வாழனும்டா...” என்றாள் தீவிரமாய்.

அப்போ மீதி வருசத்துக்கெல்லாம் நான் எங்க போறது... இப்படி நூறு வருஷம் இருநூறு வருசம்னு கணக்கு பண்ணியெல்லாம் என்னால வாழ முடியாது... மொத்தத்துக்கும் எனக்கு நீ வேணும்... எத்தனை பிறப்பு நான் இந்த பூமியில எடுத்து வாழ்றானோ அத்தனை பிறப்புக்கும் எனக்கு நீ வேணும்.. நீ மட்டும் தாண்டி வேணும்என்றான் அவளை விட தீவிரமாய்...

அவனது காதல் தீவிரத்தை உணர்ந்தவள் தன் பார்வையை அவனிடமிருந்து விளக்கிக்கொல்லாமல் அவனது பார்வையை தாங்கியவள்

ஆமா எனக்கும் மொத்தத்துக்கும் முழுவதுக்கும் நீ மட்டும் தாண்டா வேணும்..” என்றாள் திடமான அழுத்தமான பார்வையுடன்.

என்னைக்கும் நான் உன்னை விட்டு போக மாட்டேண்டி... என் நிழல் எப்போதும் உன்னோட தான் இருக்கும்எதையோ அவன் பூடகமாக சொல்ல அவள் அதை உணர்ந்து கொள்ளவில்லை.

ஆனால் அவன் சொன்ன வார்த்தை அவளுக்கு பெரு உவகையை தந்தது.

இருவரும் சாப்பிட்டுவிட்டு கூடத்திலே அமர்ந்து பேசிக்கொண்டு அப்படியே தூங்கி போனார்கள்.

அடுத்து வந்த நாட்கள் இருவருக்கும் அழகாகவே நகர்ந்தது. அது போல இன்று ஒரு அழகான காலை பொழுது...

குளியல் அறையில் இருந்த படியேமஹி மொபைல்க்கு ஜார்ஜ் போடுகத்தினான்.

இருவருடைய மொபைலுக்கும் ஜார்ஜ் போட்டவள் பாத்திரம் கழுவ ஆரம்பித்தாள்.

நேற்றைய இரவு ரிஷிக்கு வேலை அதிகம் இருந்ததால் வீட்டுக்கு எடுத்து வந்து அவன் செய்ய உதவிக்கு இவளையும் இழுத்துக்கொண்டான். இருவரும் அவனது வேலையை பார்த்து தூங்க வர மணி இரண்டாகி இருந்தது. அதனால் அடுத்த நாள் எழ சற்று தாமதாமாகி போனது.

இரவு பாத்திரம் கழுவாமல் போட்டு இருக்க இப்போது தான் அதை கழுவிக்கொண்டு இருந்தாள் மஹி.

அதற்குள் மறுபடியும் அவனிடமிருந்து சத்தம் வந்தது.

பேஸ்ட் தீர்ந்து போச்சுடி.. எடுத்து வைக்க மாட்டியா... அதை கூட கவனிக்காம என்ன பண்றஅவனது சத்தம் காதை கிழிக்க பதில் எதுவும் பேசாமல் புதியதை எடுத்து நீட்டி விட்டு அடுத்த பாத்திரம் கழுவ போக

துண்டை எடுத்து எங்கடி வச்சஅலமாரியை குடைந்துக்கொண்டு இருந்தான். கொடியில் தொங்கிய துண்டை அவனிடம் நீட்டியவள் அவன் குளித்து வருவதற்குள் இவள் ஒரு வழியாகி போனாள்.

அவன் கேட்பதற்கு முன்பே அவனது ஆடைகளை கட்டிலில் எடுத்து வைத்திருந்தாள். இல்லை என்றால் அதற்கும் ஒரு கத்து கத்துவான்.

அரிசி களைந்து உலையில் போட்டவள் அவனுக்கு டீ தயார் செய்தாள். அதனூடே காய்கறிகளையும் நறுக்கி வைத்தவள் அவன் குளித்து வரவும் தேநீரை அவனுக்கு கொடுத்துவிட்டு மேலும் வேலைகளை பார்க்க தொடங்கினாள்.

ம்ம்ம் பரவால நல்ல முன்னேற்றம் தான்..” என்று இழுத்தவன் அவளை தன் கை வளைவுக்குள் கொண்டு வந்து உச்சி முகர்ந்தான்.

அவனது ரசனையை ரசித்தவள் திரும்பி நின்று சமைக்க ஆரம்பிக்க பின்னிருந்து அவளை இருக்கியவனின் முகம் அவளது கழுத்தில் பதிந்தது. ஆனால் அதை தாண்டி போகாத அவனது கண்ணியத்தை கண்டு உள்ளம் நிறைந்தவளுக்கு அவனது ஒவ்வொரு நாளும் அவளின் முகம் பார்த்து தான் நகர வேண்டும்... இரவு பொழுது நெருங்கும் சமயம் வரை அவளை தொட்டு உரசி செல்பவன் மாலையின் ஏகாந்தத்தில் இருந்து அவளை தொடவே மாட்டான்.

அவன் மீது நம்பிக்கை இருந்தும் அவளின் மீது நம்பிக்கை இருந்தும் அவளின் உணர்வுகளை தூண்டுவது தவறு என்று உணர்ந்து அவளின் உணர்வுகளோடு அவன் விளையாடுவதை தவிர்த்துவிடுவான்.

அதை உணர்ந்து அவளே அவனை கேலியாக பார்த்துஏன் பகலில் எதுவும் நடக்காதா இல்லை நடந்து விடாதாஎன்று கேட்டாள்.

ம்ம் நடக்கும் தான் ஆனா இவ்வளவு தனிமை நமக்கு கிடைக்காதே... அலுவலக பிரஷர்   தலைக்கு மேல் இருக்கும் போது உன்னிடம் முழுமையாக சரச மாட முடியுமா... அதுக்கு இந்த நிறுவனம் தான் விட்டு விடுமா... ஏற்க்கனவே என்னை வச்சு செய்யுது..” என்று அலுத்துக்கொண்டவனை கண்டு சிரித்தாள்.

அவனது வேலை பளு அவளுக்கு தான் நன்கு தெரியுமே... அதனால் அவனே நினைத்தாலும் அவளை முழுமையாக எடுத்துக்கொள்ள முடியாது.. அவனுக்கு போன் கால் வந்த வண்ணாமாவே இருக்கும்... இதில் எங்கு அவளுடன் அவன் சரசமாடுவது.. தானே எல்லை மீறி போனாலும் வருகிற போன் கால் அவனிடமிருந்து அவளை காப்பாற்றி விடும்.. அந்த தைரியத்தில் ரிஷியும் அவளுடன் இழைவான்.

பத்து நிமிடம் சேர்ந்தார் போல அவள் கண்ணில் படவில்லை என்றால்மஹி மஹிஎன்று ஊரையே கூட்டிவிடுவான்.

பத்து நிமிட குளியலில் கூட இரண்டு முறை அவளை அழைத்து விடுவான்.

மஹியும் சலிக்காமல் அவன் முன்பு போய் நிற்ப்பாள்.

சாக்ஸ் எங்கடி வச்ச

செயினை கலட்டி மேசை மீது வச்சேன் போய் எடுத்துட்டு வா..

உடை எடுத்து வை..

உன் சீப்பை குடு.. என் சீப்பு நல்லா இல்ல.. ” என்று அவனது அளப்பரைகளுக்கு அளவே இருக்காது.

அவனது இருப்பை நொடி தோறும் அவளுக்கு அவன் உணர்த்திக்கொண்டே இருந்தான்.

தனித்து கிடந்து நொந்து போனவளுக்கு அவனது இருப்பும், அவளை அவன் தேடும் தேடலும், அவனது சேவகமும், அன்பும் அவளுக்கு அரும் மருந்தாய் இருந்தது. அமுதமாய் அவளது நேரங்கள் செல்ல ஆரம்பித்தது.

அது போல தான் இன்றும் அவனது அலப்பரைகள் தொடர்ந்தது அவளை..

  

Comments

உயிருருக உன் வசமானேன்..