அத்தியாயம் 13


 

அத்தியாயம் 13

ப்ச்என்று அவனை ஆட்சேபித்து மறுபடியும் துடைக்க முற்பட்டவளை தடுத்தான்.

உங்க மனசுல என்ன தான் ரிஷி நினைத்துக்கிட்டு இருக்கீங்க.. துடைக்காம படுத்தா சளி பிடுச்சுக்கும் காட்டுங்க துடைத்து விடுறேன்என்று குனிந்து துடைத்து விட்டவளிடம்

என் மனதுல நீ தாண்டி இருக்கஎன்றவன் துடைத்துக்கொண்டு இருந்த அவளின் கைகளை தட்டிவிட்டுடுட்டு அவளை இழுத்து தன் மீது போட்டுக்கொண்டு அவளின் உடலால் தன் உடலின் ஈரத்தை துடைத்துகொண்டன்.

அவனது செயலில் பதறி போனாள் மஹி...

ரிஷிஎன்று பதறி வேகமாய் அவனிடமிருந்து விலக பார்த்தாள்...

அதை அவன் முறியடித்து தன் மேல் இன்னும் அதிகமாக அவளை தன்னோடு புதைத்துக்கொண்டான். அதில் மஹி பெரும் அவஸ்த்தை பட்டு

இவரைஎன்று முனகி முகம் சிவந்து போனாள்.

மஹிதாபமாய் அவன் அழைக்க

ம்ம்ம்என்று முனங்க கூட முடியாமல் தவித்து போனாள்.

ஏண்டி என் மேல கோவபடுறஏனோ அவள் அவன் மீது காட்டும் சின்ன கோவம் கூட அவனால் தாங்க முடியவில்லை.

நீங்க செஞ்சது நியாயமா ரிஷி... பாவம் தானே அந்த ஆள்.. யாருக்கும் இறக்கமே பட மாட்டிங்களாஎன்று மன தாங்களுடன் கேட்டவளை ஆழ்ந்து பார்த்தவன்

யாரா இருந்தாலும் தவறு செஞ்சா நான் பொறுத்துக்கவே மாட்டேன். அதுவும் அதில் என்னோடு சம்மந்த பட்டவர்கள் பாதிக்கப்பட்டாங்க என்றால் அவனுக்கு மரணத்தை விட கொடுமையான எதையாவது தான் தண்டனையா தருவேன்என்று சொல்லும் போதே அவனது உடல் இறுகி போக சட்டென்று அவனது மாற்றம் அவளை பயமுறுத்தியது.

ரிஷிபயத்துடன் அழைத்தாள்.

அவளது அழைப்பு காதில் விழுந்தாலும்நான் இப்படி தான் மஹி... என்னால என்னை மாத்திக்க முடியாது.. அந்த ஆள் என்ன பண்றான்னு தெரியுமா... விழா நடக்கும் வீடுகளில் எதிர்பாராமல் எவ்வளவு செலவு வரும்.. திட்ட மிடாத பல செலவுகள் வந்து குவியும். அந்த சமயம் இவன் பத்தாயிரம் இருபதாயிரம் என்று ஆளுக்கு தகுந்த மாதிரி லட்ச்ச கணக்கு வரை பேரம் பேசி கடைசி நேரத்தில் கழுத்தை பிடிச்சா அவங்க என்ன பண்ணுவாங்க சொல்லு. இருக்குறவங்க குடுத்துடுவாங்க, இல்லாதவங்க என்ன பண்ணுவாங்க.. ஏற்க்கனவே கடன் வாங்கி முழி பிதுங்கி நிர்க்கிறவங்க கிட்ட வயித்துல அடிச்சா பாவமில்லையா.. அதுவும் இல்லாம இதெல்லாம் அவன் முதலாளிக்கு தெரியாம செஞ்சுக்கிட்டு இருக்கான் ராஸ்க்கல். அதனால தான் நான் அப்படி நடந்துக்கிட்டேன் இப்போ சொல்லு என் மேல தவறான்னுஎன்று கேட்டவனை கட்டிக்கொண்டுஇல்லங்கஎன்றாள் நெகிழ்வுடன்.

இதெல்லாம் தெரியாம ரெண்டு மணி நேரமா என்னை படுத்தி எடுத்திட்டியேடிஅவன் முகம் தூக்க

ரிஷிகாதலுடன் அவனை பார்க்க அவள் பார்வையில் கட்டுண்டவன் அவளை பார்வையால் ஆசையாக மேய்ந்தான்.

அவனது பார்வையில் நாணி சிவந்து அவனுக்கு முதுகு காட்டி திரும்பி படுத்தவளை பற்றி இழுத்தான்.

ரிஷிதவிப்பு அவளுக்கு ஏகமகா ஏறியது. “கொஞ்ச நேரம்என்றவன் அவளது உதடுகளை சிறை செய்து அவளுள் பல ரகசியங்களை மொட்டவிழ்க்க செய்தான். அதில் அவள் கிளர்ந்து போக அதை அவனிடமிருந்து மறைப்பது போல இரு கண்களையும் இறுக்கமாக மூடிக்கொண்டாள்.

இதழ்களுக்கு விடுதலை அளித்தவன் அவளிடமிருந்து விலகி போக, சற்றே அடக்கி வைத்த மூச்சுகாற்றுக்கு விடுதலை கொடுத்தாள். கண்களை திறந்து பார்க்க பயமாய் இருக்க கண்களை மூடியே வைத்துக்கொண்டு இருந்தவளை ஆழ்ந்து பார்த்தவனின் செயலை கணிக்க முடியாமல் தவிப்புடனே இருக்க அவளது தவிப்பு இன்னும் அதிகமாகும் படி அவனது அடுத்த செயல் இருந்தது.

அவள் சற்றும் எதிர் பாரா நொடியில் அவளது முந்தானையை லேசாக விளக்கியவன் அவளது வேற்று வயிற்றில் தன் முகத்தை புதைத்துக்கொண்டு அவள் மீது அப்படியே படுத்துவிட்டான்.

முகம் புதைத்தவனின் மீசை அவளை கூசி எடுக்க அவனின் தலையை பிடிப்பாக இறுக்கிக்கொண்டு அவனை அசைய விடாமல் அவன் கொடுக்கும் உணர்வுகளை முழுமையாக தன்னுள் உணர துவங்கி ஏற்றுக்கொள்ளவும் செய்தாள்.

அரை மணி நேரம் அவளுடன் அப்படியே கிடந்தவன் பின் அவளை மென்மையாக அணைத்துக்கொண்டு அன்றிரவு முழுவதும் அவளை தன் கைகளுக்குள்ளே வைத்துக்கொண்டு தூங்கி போனான். இதுவரை யாரிடமும் ஒட்டி படுக்காத மஹிக்கு அவனது இந்த செயல் எத்தனையோ பெரிய ஆறுதலை கொடுத்தது. ஏனோ கண்கள் கலங்கி போனது.

அவளது கண்ணீர் அவனுக்கு தெரிந்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல் இன்னும் அவளை தன்னோடு இறுக்கமாக அணைத்துக்கொண்டு தூங்கி போனான். அவனது இறுக்கிய அணைப்பு அவளை சுயம் பெற செய்ய கண்ணீரை துடைத்துக்கொண்டு அவனது மார்பில் முகம் புதைத்து நிம்மதியாக தூங்க ஆரம்பித்தாள்.

அடுத்த நாள் மஹி அவசர அவசரமாக திருமணத்துக்கு கிளம்பிக்கொண்டு இருக்க அவளது கதவை தட்டிக்கொண்டு இருந்தான் ரிஷி..

என்னங்க

கதவை திற

புடவை கட்டிக்கிடடு இருக்கேன்

பரவால கதவை திற

உதை விழும் ரிஷிசெல்லமாக மிரட்டினாள்.

ப்ச்.. உன்னை அந்த கோலத்துல பார்க்குறதுக்காக ஒன்னும் கதவை திறக்க சொல்லல..” அவன் சுல்லேன்று வில, முறைப்புடனே கதவை திறந்து கதவின் பின் ஒளிந்துக்கொண்டுஎன்னஎன்று கேட்டாள்.

ப்ச்.. போடி ரொம்ப தான் பண்ற.. வசமா என் கிட்ட மாட்டுவ அப்போ இருக்கு...” என்று நொடித்தவன் அறையின் உள் நுழையாமல் அவளது கரத்தை பற்றிஇதை கட்டுஎன்று சொல்லிவிட்டு பதிலுக்கு கூட செவி சாய்க்காமல் போய்விட்டான்.

இது என்னங்கஎன்று கேட்டபடி அதை திறந்து பார்க்க அதில் மயில் கழுத்து வண்ண பட்டு புடவையில் தங்க சரிகை மின்ன அவ்வளவு அழகாய் இருந்து.

அதை பிரித்து பார்த்தவள் அதிலிருந்து சட்டையும் விழ அதை எடுத்து அணிந்தவளுக்கு அளவு சரியாய் இருந்தது. தன்னுடைய அளவு துணியை எடுத்து தைத்திருக்கிறான் என்று புரிந்து போனது. ஏனோ அவன் வாங்கி கொடுத்ததை அவளால் மறுக்கவே முடியவில்லை. யார் ஒருவரிடமிருந்தும் ஒரு சின்ன உதவி கூட வாங்கியது இல்லை அவள். ஆனால் அவனிடம் மட்டும் அவள் எதையும் மறுத்ததே கிடையாது.

இந்த திருட்டு வேலையெல்லாம் சரியா பண்ணுங்கஎன்று அவனுக்கு கத்திய படியே புடவையை கட்ட ஆரம்பித்தாள்.

போடி.. என் பொண்டாட்டிக்கு நான் வாங்கி தரேன் உனக்கு என்னடி பொறாமைஎன்று அவனும் பதிலுக்கு அவனது அறையிலிந்து கத்த

ம்கும் இப்பவே கன்பாம் பண்ணியாச்சாக்கும்அவள் நொடிக்க

ஓய் கொஞ்ச நாளுக்கு முன்னாடியே உன் நெத்தில பொட்டு வச்சு அச்சாரம் போட்டுட்டேண்டிஅவன் கத்த

அந்த நொடி அவன் அன்று வைத்த குங்குமம் நினைவுக்கு வர உடல் சிலிர்த்தது.

இதுக்கெல்லாம் ஒன்னும் குறைச்சல் இல்லதன்னை கண்ணாடியில் பார்த்த படி மூக்கை சுருக்கி அழகு காண்பித்தபடி புடவை கட்டி முடித்து சற்று ஒப்பனை செய்யும் நேரம் கதவை தள்ளிக்கொண்டு ரிஷி வந்தான்.

வேற எதுக்குடி குறைச்சல்என்றபடி அவன் அவளை ஆராய அதை கண்டு முறைத்தவள் அவனிடம் குங்குமத்தை நீட்ட தன் மோதிர விரலால் எடுத்து அவளது நெற்றி வகிட்டில் வைத்துவிட்டான். அதில் அவள் உடல் சிலிர்க்க

பார்த்து நான் வேணா போர்வை எடுத்து வந்து தரவாஎன்று அவன் நக்கல் பண்ண

ரொம்ப குசும்பு வச்சு போச்சுமுனங்கியவளிடம் தான் மறைத்து வைத்திருந்த மல்லிகை பூவை நீட்டி அவளின் கண்களோடு கண் வைத்து ஆழம் பார்க்க அவனது பார்வையை எதிர் நோக்கியவள்

வாங்கிட்டு வந்தவருக்கு வச்சு விட தெரியாதாக்கும்என்றபடி திரும்பி நிக்க அவன் அவளது தலையில் பூவை சூடியபடிபுடவையும் தான் நான் வாங்கிட்டு வந்தேன் அப்போ நானே கட்டிவிடவாஎன்று அவளின் தோளில் வழிந்த புடவையை பிடித்து இழுக்க உடல் பதறினாலும் அவன் அந்த அளவுக்கு போக மாட்டான் என்று புரிந்தவள் அவனது அந்த தொடுகையை ரசித்தாள்.

என்னடி பதில் சொல்லாம இருக்கஅவளை சீண்டி விட்டான்.

ம்ம் நான் மறுப்பு கூறலையே..” அவள் சொல்லி முடிக்கும் முன் அவளது முந்தானையை விட்டுவிட்டு

அடி பாவி ஒரு பேச்சுக்கு கேட்டா... என்னை கெட்ட பையனா மாத்தாம விட மாட்ட போலடிசட்டென்று எட்டி நின்றான். அவனது அந்த செயலை பார்த்து சிரித்தவள்உங்க வீரம் எல்லாம் அவ்வளவு தானா ரிஷிஅவனை பார்த்து கண்ணடித்து உசுப்பி விட

அம்மா தாயே தெரியாம கேட்டுட்டேன்.. நேரமாவது நீ முதல்ல கிளம்புஎன்றவன் அவளை கிளப்பிக்கொண்டு மண்டபத்துக்கு சென்றான்.

அவன் வேட்டி சட்டையில் அவ்வளவு கம்பீரமாக இருக்க அவனை நொடி தோறும் ரசித்துக்கொண்டே இருந்தாள்.

பெரியவர்களுக்கு பரிசை இருவரும் சேர்ந்து வழங்கிவிட்டு நிறுவனம் நோக்கி வந்தார்கள்.

இந்த வேட்டி சட்டையில அழகா இருக்கீங்க ரிஷி.. ஆனா இந்த அடர்ந்த தாடி, முகத்தை மறைகிறார் போல இருக்க கண்ணாடி, தோள்ள வழியிற முடி இதெல்லாம் மாத்திக்கிட்டா இன்னும் அருமையா இருக்கும்என்று கருத்து சொல்ல

கண்டிப்பா ஒரு நாள் எடுப்பேன்.. ஆனா இப்போ இல்லடி

ஏன் இப்போ எடுத்தா என்ன

சாமிக்கு நேந்து விட்டு இருக்கு உன் கிழவி.. அதான் இந்த அவதாரம்என்று சிரிக்க

ஓ ஓ.. ஆனாலும் இதிலும் நீங்க அழகா தான் இருக்கீங்கஎன்று பாராட்ட

அதை இப்படி தள்ளி இருந்தே பாராட்ட கூடாது மஹி..” என்று சொன்னவன் நொடியில் அவளை இழுத்து அவளது கன்னத்தில் முத்தம் இட்டவன் அவளது உறை நிலையை கண்டு சன்ன சிரிப்போடு அவளை விட்டான்.

அவனது சிரிப்பு அவளை உசுப்பி விட நன்றாக அவனது தோளில் மொத்தினாள்.

பேசிக்கிட்டு இருக்கும் போதே என்ன காரியம் பண்றீங்க ரிஷி..”

நீ பேசிக்கிட்டே இருந்தா நான் இப்படி தான் பண்ணுவேன் மஹி.. சீக்கிரமா நான் கேட்டது குடு

என்ன கேட்டீங்க

சுத்தம் அதுவே மறந்து போச்சாமுனங்கியவன் மறுபடியும் அவளை இழுத்து அனைத்து அவளது உதடுகளை சிறை செய்து

இதை தான் கேட்டேன்என்று அவன் சொல்ல

அட பாவிஎன்பது போல தன் கரங்களால் தன் வாயை பொத்தியபடி அவனை முறைத்து பார்த்தாள்.

அவளது பார்வையில் மனம் கொள்ளாமல் சிரித்தான் ரிஷி...

 


Comments

உயிருருக உன் வசமானேன்..