அத்தியாயம் 3

 

அத்தியாயம் 3

 

சரி தின்னது போதும் வாஎன்று அவளை இழுத்துக்கொண்டு சமையல் அறைக்கு வந்தான்.

நான் காய் கட் பண்றேன் எப்படின்னு பாரு, நாளைக்கு நீ தான் செய்யணும்

அதுக்கென்ன ஜோரா அருஞ்சு தரேன்..” என்றவள் தான் சாப்பிட்டு கொண்டு இருந்த ப்ரெட்டை அவன் வாய் பக்கம் நீட்ட ரிஷி

இப்ப வாவது தரணும்னு தோனுச்சேஎன்றபடி அவள் எச்சில் பட்ட ப்ரெட்டை சாப்பிட.. மஹி ஒரு கணம் அமைதியாகி போனாள்.

இதெப்படி இவ்வளவு இயல்பா..’ அவள் லேசாய் திணறி போனாள்.

இவனும் எப்படி இப்படி அதும் அவள் எச்சில் பட்ட உணவை கொடுத்தாள் என்று சிந்திக்கவில்லை. நிமிர்ந்து ரிஷியை பார்த்தாள். அவன் மும்மரமாக காய் நறுக்கிக்கொண்டு இருக்க அவனருகில் வந்து

நான் தான் இந்த வீட்டுல இருக்கேன்னு உங்களுக்கு முன்னாடியே தெரியுமா...” திடுமென்று அவள் அப்படி கேட்க

ம்ம் நீ நேர்முக தேர்வில் தேர்வானவுடனே எனக்கு தெரியும்.. இந்த வீட்டில் நீ தான் வசிக்க வர போறன்னு..” இயல்பாய்.

ஆனா எனக்கு தெரியாது இங்க நீங்க இருப்பீங்கன்னுசோகமாய்..

அப்போ நான் இங்க இருக்கிறது துஞ்சு இருந்தா நீ வந்து இருக்க மாட்டியா.. ஏன் நான் இங்க இருக்கிறது பிடிக்கலையா உனக்கு..”

பிடுச்சு இருக்கு.. ஆனா இத்தனை நாள் என் கூட யார் இருக்காங்கன்னு கூட தெரியாம என்னை அலையை விட்டுட்டீங்கள்ள..” லேசாய் மனம் முரண்டியது..

பாரு மஹி எனக்கு நண்பர்கள் வட்டமே கிடையாது.. நான் பழகுறது ஒரே ஒருத்தன் கூடத்தான். அதனால நான் பெரும்பாலும் மூடி டைப் தான். எனக்கு கலகலப்பா பேசி சிரிக்க கூட தெரியாது. அலுவலகத்துல நீ அந்த மாதிரி இருப்பதும், எந்த சூழ் நிலையையும் நீ அழகா கை ஆள்றது எனக்கு ரொம்ப பிடிக்கும்.

சரி நீயே என்னை தேடி வந்து பேசுவன்னு நினைச்சேன்.. அது மட்டும் இல்லாம நான் ஏன் ஓடி ஒளிஞ்சேன்னா அலுவலகத்துல உன்னை அப்படி திட்டிட்டு இங்க வந்து உன்னை எப்படி எதிர் கொள்வது என்று ஒரு தயக்கம். அதனால தான் நான் உன்கிட்ட என்னை அறிமுக படுத்திக்கல.. மத்த படி உன்னை பிடிக்கமலெல்லாம் இல்லை பிடுச்சு இருக்கு

காதலிக்கிற அளவுக்காஎன்றாள் கடுப்பாய் மஹி..

ஹஹஹா காதல்னு நான் சொன்னான்னா நீயா தான் கேட்ட நான் ஒத்துக்கிட்டேன். எனக்கு அந்த மாதிரி எந்த ஐடியாவும் இல்ல.. நாம நல்ல நண்பர்களா இருப்போம் சரியா.. நமக்குள்ள இந்த காதல் எல்லாம் செட் ஆகாது..” என்று மனதை மறைத்து பொய் கூறியவனை குறும்பாய் பார்த்தவள்

இது நல்லா பிள்ளைக்கு அழகு...” எனவும்

டன்..” என்றவன் சமையலில் இறங்க எதுவும் செய்ய தெரியாமல் அவன் சமைக்கும் முறையை நன்றாக உத்து கவனித்தாள்.

அவளது அந்த கவனத்தை கண்டு ரிஷிக்கு தொண்டை அடைக்க தன் உணர்வுகளை அவளிடம் காட்டாமல் இருக்க மிகவும் சிரம பட்டு போனான்.

பின் அவனே.. ”ஹேய் என்ன சத்தத்தையே காணோம்.. தூங்கிட்டியா என்னஎன்று திரும்பி பாராமலே கேட்க

ம்கும் அதுக்குள்ள தூங்குறாங்கலாக்கும்.. நீங்க எப்படி காய் இவ்வளவு ஸ்பீடா கட் பண்றீங்கன்னு பார்த்துக்கிட்டு இருக்கேன்என்றவளின் பார்வை அவன் கையிலேயே பதிந்து இருந்தது..

அப்போதும் அவளது கவனம் கலையவில்லை என்பதை உணர்ந்தவனுக்கு விரைவாக அவளுக்கு சமைக்க கற்று கொடுக்க வேணும் என்ற வெறி வந்து..

அவளிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே எப்படி எளிதாக செய்வது என்பதை அவன் கற்றுக்கொடுக்க அவள் ஆழ்ந்து உள் வாங்கிக்கொண்டாள்.

இரண்டு முறை அவளுக்கு சொல்லிக்கொடுத்தவன் மூன்றாவது முறை அவளையே போட வைத்தான்.

அடுப்பின் முன் அவளை நிறுத்தி அவளுக்கு பின் அவன் நின்று அவளின் கைகளை லாவகமாக பற்றி செய்ய வைத்தான்.

அவனது தொடுகையில் எந்த விகல்ப்பமும் அவளுக்கு தெரியவில்லை.

முதல் முறை சமையல் செய்வதால் அவளுக்கு கைகள் எல்லாம் நடுங்கியது.. லேசான பதற்றமும் ஒட்டிக்கொள்ள திரும்பி ரிஷியை பார்த்தாள்.

எதுக்கு பயபடுற உன்னால இதை கண்டிப்பா செய்ய முடியும்.. செய்யி கூட நான் இருக்கேன்ல..” என்று அவளை பாராமல் தோசை கல்லின் மீதே கவனத்தை வைத்து தைரியம் கொடுக்க

ம்ம்என்று சொன்னவள் தன் கவனத்தை திருப்பி அவனின் வழிகாட்டுதலின் படி செய்தாள். லேசாக சொதப்பினாலும் ஓரளவு ப்ரெட் ஆம்லேட் சுவையாகவே வந்திருந்தது. அதை அவளுக்கே உண்ண கொடுக்க, சாப்பிட்டு பார்த்தவளின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி.. எதையோ சாதித்து விட்டது போல் தோன்றியது மஹிக்கு..

ரிஷி உண்மையாலுமே நல்லா வந்து இருக்குள்ள.. வாவ்.. உண்மைய சொல்ட்டா நீங்க செஞ்சத்தை விட நான் செஞ்சது தான் நல்லா இருக்குஎன்று அவனை வம்பு இழுக்க

பார்ரா.. சரி ஒத்துக்குறேன்என்று அடி பணிந்தவனை கண்டு

இது எங்க ரிஷி சார் சொல்ற பதில் இல்லையே..”

ம்ம் உனக்கு கொழுப்பு கூடி போச்சு

ப்ளீஸ் உங்க டெரர் வாய்ஸ்ல உங்க கமெண்டை சொல்லுங்க ரிஷிகெஞ்ச

அடங்க மாட்ட நீ

ஈஈஈ சொல்லுங்க பா

அவளை முறைத்தவன்இப்போ நீ என்ன பண்ணிட்டன்னு இப்படி ஓவர் ரியாக்ட் பண்ணிக்கிட்டு இருக்க.. ப்ரெட் ஆம்லேட் தானே போட்ட ஏதோ பிரியாணியே செஞ்சுட்ட மாதிரி பில்டப் குடுக்குற... ஒரு ப்ரெடுக்கு உன் பெர்பாமன்ஸ் ஜாஸ்தியா இருக்கு கொஞ்சம் குறை..” என்றான்.

ஹஹஹா அதே தான் ரிஷி... சோ ஸ்வீட்

அதானே ஒருத்தன் பாசமா பேசுனா கேட்டுடாதா.. ம்ஹும் எனக்கு அதெல்லாம் வேணாம் கோவ படுற அந்த சீன் தான் வேணும்னு அடம் பண்ணு.. அது சரி... நான் கோவமா பேசுனா உனக்கு தான் நலம் விசாரிக்கிற மாதிரி இருக்குமே. பிறகு உனக்கு எங்க அது உரைக்க போகுதுஎன்றான் நக்கலாய்.

அவனது நக்கலில் அசடு வழிந்தவள்

நிஜமா ரிஷி.. நீங்க என்னை திட்டும் போதெல்லாம் ஏதோ என்னை பாராட்டுற மாதிரி, சுகம் கேட்குற மாதிரி, ஜோக் சொல்ற மாதிரி தான் இருக்கும்

என்றவளை கொலை வெறியுடன் பார்த்தான் ரிஷி...

வர வர உனக்கு கொழுப்பு கூடிக்கிட்டே போகுது...” என்றான்.

ப்ச் அதை விடுங்க ரிஷி.. இன்னொரு முறை சொல்லி குடுங்க ப்ரெட் ஆம்லேட் எப்படி போடணும்னுஎன்று காரியத்தில் கண்ணாய் இருந்தவளின் ஆர்வத்தை பார்த்து மறுபடியும் அவளின் கைகளை பிடித்து இன்ன மாதிரி போடு என்று சொல்லிக்கொடுக்க மஹி அழகாய் செய்தாள்.

அடுத்ததையும் அவன் அவளின் கைகளை பிடித்து சொல்லி தர வர

ஓய் என்ன ரொம்ப தான் டச் பண்றீங்க.. தள்ளி நில்லுங்க இல்லன்னா சேதாரம் அதிகமா இருக்கும்என்று கண் சிமிட்டி சொன்னவளை கண்டு வெறியானான்.

உன் வேலை முடிஞ்சதும் கலட்டி விடவா பார்க்குற முடியாதுஎன்று அவளது கைகளை வலுகட்டாயமாக பிடித்து அவளை பார்க்க

முடியாதுஎன்றாள் கேள்வியாய்

ம்ஹும் முடியாதுஎன்றான் உறுதியாய்.

அப்போ இதுக்கு பதில் சொல்லு தம்பி..:” என்று இடது கரத்தால் அருகில் இருந்த கத்தியை எடுத்து அவன் முன் நீட்டி சொல்ல

அடி பாவி கொலை காரிஎன்று அலறி அவளது கையை விட்டவன் இரண்டடி தள்ளி நின்றான் அவளை விட்டு..

அதுஎன்று கெத்து காட்டியவள் அடுப்பு பக்கம் திரும்பி ப்ரெட்டை போட ஆரம்பிக்க ஐயோ பாவம் அது பிஞ்சு பிஞ்சு வர பாவமாய் ரிஷியை திரும்பி பார்த்தாள்.

அவளது பாவனையில் சத்தமாய் சிரித்தான் ரிஷி..

ப்ச் இப்போ எதுக்கு இவ்வளவு சிரிப்பு... நான் தான் சின்ன பிள்ளை தெரியாம சொன்னா இப்படித்தான் அம்போன்னு விட்டுட்டு பத்தடி தள்ளி நிக்கிறதா..” என்று அவனின் மீது முழு பழியையும் தூக்கி போட்டவளை கண்டு

அடி பாவி கத்தி வச்செல்லாம் மிரட்டிட்டு இப்படி என் மேல மொத்த பழியையும் தூக்கி போட எப்படி டி மனசு வருது..” ஆற்றாமையாய் கேட்டவனை கண்டு

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா..” இரு தோளையும் அழகாய் குலுக்கி விட்டு கண் சிமிட்டியவளின் அடாவடியில் மனதை பரி கொடுத்தவன்

எது இருக்கோ இல்லையோ இந்த வாய் மட்டும் இருக்குடி உனக்குஎன்றான்.

தாங்க்யு போர் யூவர் கமெண்ட்ஸ்என்று அலட்டிக்கொள்ளாமல் சொல்லியவளின் கரத்தை சற்றே இறுக்கி பிடித்து

உனக்கு இந்த வாய் அடங்கவே அடங்காதா..” கேட்க

அது என்னோட கூடவே பொறந்தது.. என்னைக்கும் என்னை விட்டு போகாதுநடிகரின் ஸ்டையிலில் சொன்னவளின் குறும்பை கண்டவனுக்கு சிரிப்பு வந்தது.

அதானே நீ இதை சொல்லலன்னா தான் நான் ஆச்சர்ய படனும்

ஹல்லோ இப்போ போட்டு தர போற வரீங்களா இல்லையா..” அதிகாரம் பண்ணினாள்.

வா வந்து சேரு.. கவனமா பாரு இதுக்கு மேல சொல்லி தர மாட்டேன். பிறகு நீ தான் போடணும்என்று கூறி அவளின் கைகளை பிடித்து அதில் சில நுணுக்கங்களை ரிஷி சொல்லி தர

அவளும் சமத்தாய் கற்றுக்கொண்டாள்.

அடுத்த முறை ரிஷியின் உதவி இன்றி அவளே போட அழகாய் வந்தது..

நீங்க முன்னவே இதை சொல்லி கொடுத்து இருந்தா நான் நல்லா போட்டிருப்பேன். உங்க மேல தான் முழு தவறு.. நல்லாவே சொல்லி தர தெரியல... நீங்க மோசமான ஆசிரியர்என்றவளை கண்டு

ஆமா எனக்கு இது ரொம்ப தேவை தான்என்று முறைத்தான்.

சரி சரி அதை டீலில் விட்டுட்டு வாங்க சாப்பிடலாம்என்று ஜகா வாங்க

என்னது சாப்பிடலாமா... நீ அல்ரெடி சாப்பிட்டுட்ட, நான் மட்டும் தான் சாப்பிடனும்.. சோ..” என்று முடிக்கும் முன்னவே

நீங்க போட்டதை நீங்க சாப்பிடுங்க, நான் போட்டதை நான் சாப்பிடுறேன்.. அடுத்தவங்க உழைப்பை திருட கூடாது ரிஷிஎன்று சாணக்கியன் போல பேசியவளை கண்டு

அப்போ இதுக்கு முன்னாடி நான் போட்டு வச்சு இருந்த ப்ரெட்டை எதுக்கு சாப்பிட்ட..”

பாஸ் அது நீங்க எனக்கு விரும்பி கொடுத்தது.. விருந்தோம்பல் செய்துட்டு இப்படி தவறா பேச கூடாது ரிஷி சார்.. சாமி கண்ணை குத்தும்

அவளது வாயாடலில் அசந்து போய் நின்றான்.

நான் விருந்தோம்பல் அதும் உனக்கு பண்ணுனேன்..” நக்கலாய் கேட்க

ஆமா... அப்போ அது விருந்தோம்பல் இல்லையா..” என்று அவனையே அவள் கேள்வி கேட்க

அத்தனை நாட்கள் வரை இருந்த அவனது காத்திருப்பு முழுமை பெற்று முற்று பெற்றதை போல உணர்ந்தான்.

மெலிதாய் புன்னகைத்து அவளின் தலையை தன் தலையோடு முட்டிவாய் வாய்என்று ரசித்து சிரித்தவன் இரு தட்டுகளில் இருவரும் செய்ததை எடுத்துக்கொண்டு உப்பரிகைக்கு சென்று ரிஷி அமர அவனின் வால் பிடித்துக்கொண்டு மகியும் பின்னாடியே சென்றாள் தண்ணீரை எடுத்துக்கொண்டு.

அழகான இரவு பொழுது.. அமைதியாய் ஈர காத்து வீச, இருக்கையில் அவளை அமர வைத்தவன் அவளுக்கு பரி மாற அவளின் கண்கள் அவனது கவனிப்பில் கலங்கி போனது..

இதுவரை அவளுக்கு யாரும் இப்படி உபச்சாரம் செய்தது இல்லை. அவளுக்கு சமைத்து கொடுத்ததும் இல்லை.

அதை அவனுக்கு காட்டாமல் புன்னகைத்து மறைக்க, அவள் எவ்வளவு மறைத்தாலும் அவளை பற்றி முழுதும் அறிந்து தெரிந்து வைத்திருப்பவனுக்கு அவளது கண்ணீர் தெரியாமல் போகுமா என்ன...

அவளது கண்ணீரை கண்டவனுக்கு மனம் கனத்து போக அதை அவளுக்கு தெரியாமல் மறைத்துக்கொண்டு கொஞ்சமும் காட்டிக்கொள்ளாமல்

தேவிக்கு இந்த உபச்சாரம் போதுமா.. இல்லை வேறு எதுவும் வேணுமாஎன்று அவளை சீண்ட

போதும் போதும் சேவகனே.. வேறு ஏதாவது வேண்டும் என்றால் தங்களிடம் பின்பு கேட்கிறேன்அவனது பாணியிலே அவனை எதிர்கொண்டாள் மஹி..

உத்தரவு தேவி..”

தங்களது சேவையை கண்டு யான் மெய்சிலிர்த்தோம் சேவகனே..” சிரியாமால் சொன்னவளை

அடிங்க.. ரொம்ப தான் நக்கல்அடிக்க வர

ஐயோ கொலை கொலை..” அலற

ஏய் கத்தி தொலைக்காத மஹிவேகமாய் அவளது வாயை அடைக்க வர அசால்ட்டாய் அவனது கைகளை தட்டிவிட்டு

அது அந்த பயம் இருக்கணும்என்றவள் ப்ரெட் ஆம்ப்லேட்டில் மூழ்க

அவள் சாப்பிடும் அழகை பார்த்துக்கொண்டே இவனும் சாப்பிட ஆரம்பித்தான்.

உன்னை பத்தி சொல்லு மஹிஎன்றான் அவளை பற்றி எல்லாம் அறிந்திருந்தாலும் அவளின் வாயாலே கேட்க ஆசை பட்டான்.

என்னை பத்தி சொல்ல எதுவும் இல்லை ரிஷி.. நான் இப்போதைக்கு சிங்கிள்.. டபுளா ஆக கண்டிப்பா ஆசை இல்லை.. ம்ம் வேறு எதுவும் இல்லைஎன்றாள்.

சரி உங்களை பத்தி சொல்லுங்கஎன்றாள்.

அவளது பதிலில் மனம் சுருங்கி போனாலும் எடுத்தவுடனே அவள் எப்படி அவளை பற்றி சொல்லுவாள் முதலில் நண்பனாய் பழகுவோம் என்று முடிவெடுத்தவன்

என்னை பத்தி சொல்ல என்ன இருக்கு... எனக்கு ஒரு தம்பி இருக்கான் பேரு வருண், அப்புறம் தாத்தா, பாட்டி, ஒரு நண்பன். இவங்களை தவிர வேறு யாரும் சொந்தமில்லைஎன்றவனை பார்த்து

உங்க அப்பா அம்மாசற்று சோகத்தோடு கேட்டவளை கண்டு புன்னகைத்து

அவங்க ஒரு விபத்துல சமிபத்துல தான்..” என்று நிறுத்த

சாரி ரிஷி..”

நீ எதுக்கு சாரி சொல்ற... வருத்தம் தான் ஆனா சமாளிச்சுட்டேன் அதான் தாத்தா பாட்டி இருந்தாங்கல்ல பெருசா தெரியல..” என்றான்.

ம்ம்ம்

உன் குடும்பத்தை பத்தி சொல்லுஎன்று ரிஷி மறுபடியும் தூண்டில் போட்டான்.

என் குடும்பமா...” என்று சிரித்தவள்

அவங்க ஊர்ல இருக்காங்க.. நான் வேலைக்காக இங்கவே சுத்திக்கிட்டு இருக்கேன்... பணத்துக்கு குறை இல்லை.. ஊருக்கு போறது பயங்கர போர்.. சோ என் ஜாகை முழுசும் இங்க தான்என்று எதையும் சொல்லாமல் மூடி மறைத்தவளின் திறமையை கண்டு மனதுக்குள் சிரித்தவன்

வெளியே அதற்க்கு மேல் கேட்டு அவளை சங்கட படுத்தாமல்என்ற ஒற்றை சொல்லோடு நிறுத்திக்கொண்டான்.

சரி எப்படி என்னை இவ்வளவு இயல்பா ஏத்துக்கிட்ட உன் நண்பனா..” என்றான் வியப்பாய்.. அவள் எல்லோரிடமும் தோழமையாய் பழகுவது தெரிந்தாலும் தன்னையும் இயல்பாய் ஏற்றுக்கொண்டதை பற்றி தெரிய வேணும் என்று மனம் முரண்ட அவளிடம் கேட்டுவிட்டான்.

எனக்கு உங்களை அலுவலகத்துலயே பிடிக்கும் ரிஷி.. யாரையும் நிமிர்ந்து பார்க்காம பொண்ணுங்க கிட்ட நூறடி தள்ளியே நிக்கிற உங்க குணம் எனக்கு ரொம்ப பிடிக்கும்... உங்க கூட இருந்தா ஒரு பாதுகாப்பு இருக்கும்.. அதை நான் பல முறை உணர்ந்து இருக்கிறேன்.. எத்தனை முறை உங்க அறைக்கு தனியா வந்து இருக்கேன். ஒரு முறை கூட ஏண்டா வந்தோம் அப்படின்னு எனக்கு தோனுனதே இல்லை...

அதோட இல்லாம இது ஒன்னும் அலுவலகம் இல்லையே.. உங்களை சாருன்னு கூப்பிட.. உங்களை பார்த்து பயப்பட. இங்க நாம நண்பர்களா இருந்தா தான் நல்லா இருக்கும். இங்கயும் சாரு மோருன்னுகிடு இருந்தா நல்லாவா இருக்கும்.. அதான் இப்போ நீங்க என் ஹவுஸ் மேட்.. கூடவே தோழனா வேற ஆகிட்டேன் உங்களைஎன்று சொன்னவளின் விளக்கத்தில்

சரிதான்என்றான் சின்ன ரசனையோடு..

தொடரும்...

Comments

  1. முன்னாடியே அறிந்து தெரிந்து தான் அவன் அவளிடம் பழகு ரானா

    ReplyDelete

Post a Comment

உயிருருக உன் வசமானேன்..