அத்தியாயம் 4


 



அத்தியாயம் 4

 

அவனது ரசனையான பார்வையை கண்டு முறைக்க

ஹேய் இது ஜஸ்ட் ஒரு சின்ன ரசனை அதை தவிர வேறு எதுவும் இல்லை.. உன் நட்புல நான் காதலை கலக்க மாட்டேன்.. இப்போ சொல்றது தான்.. ஆனா அதுக்காக பார்க்க கூடாது தொட கூடாதுன்னு எதுவும் சொல்லாத... என் நட்போ காதலோ என்னைக்கும் உன்னை கலங்க படுத்தாது அதை என்னைக்கும் நினைவில் வச்சுக்கோ...” என்றான்.

அப்போ நிஜமாவே லவ்ஸா

என்னை பொறுத்த வரை இருக்கு உன்னை பொறுத்தவரை இல்லைஎன்றான்.

குழப்பமா இருக்கு ரிஷிஎன்றாள் பாவமாய்.

உன்னை பார்த்த கணத்துல இருந்து.. உன்னை நான் காதலிக்கிறேன் மஹி.. ஆனா என் காதல் உனக்கு எப்பவும் தொந்தரவா இருக்காது.. நீயா வந்து பேச ஆரம்பிக்கவும் அதுவும் நீயேஎன்ன காதலாஎன்று கேட்ட பிறகு தான் நான் வெளி படுத்தினேன். இல்லன்னா அது எப்பவும் எனக்குள் தான் இருக்கும்.. இப்போ மட்டும் இல்லை.. எப்பவுமே.. அதாவது நீயா என்னை தேடி வரும் வரை...” என்று நிமிட நேர இடைவெளி விட்டவன்

அது காதனா இருந்தாலும் சரி இல்லை நண்பனா இருந்தாலும் சரி இல்லை சாதாரண கடந்து போற ஒருத்தனா நினைத்து நீ என் கிட்ட வந்தாலும் சரி நான் என்னை வெளி படுத்தி இருப்பேன்.. அதாவது நீ என் கிட்ட வருவதற்கு எந்த ஒரு சந்தர்பத்தையும் விடாமல் எதிர் நோக்கி காத்திருப்பேன் என்று சொல்கிறேன்என்றான்.

அவனது அந்த விளக்கத்தில் தலை சுத்தியது மஹிக்கு..

ஆக ரொம்ப சீரியஸா என்னை காதலிக்கிறீங்க

ஆமா.. ஆனா உனக்கு ஒரு நல்ல நண்பன் நான்என்றான் அழுத்தமாய்.

புரியல

என்னை நீ காதலனா  ஏற்றுக்கொள்ளும் வரை நான் உனக்கு நண்பன் மட்டுமே

ம்ம் அவ்வளவு நல்லவன் நீங்கஎன்றாள் நக்கலாய்

ஆமாஎன்றான் அசராமல்.

பார்ப்போம் நீங்க எந்த அளவு உறுதியா இருக்கீங்கன்னு... எப்போ பாடர் தாண்டுறீங்களோ அப்போ இந்த மஹி இந்த வீட்டை விட்டு போயிருப்பாஎன்றாள் நிமிர்வாய்.

அது எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும்.. ஆனா அதுக்கு எந்த சந்தர்ப்பமும் வாய்க்காது.. கூடவே இன்னொன்னு சொல்லணும்என்றான்

என்ன

நீ என்னை காதலனா பார்க்க ஆரம்பிச்ச அடுத்த நிமிடத்துல இருந்து நீ என்னோடவ.. எனக்கு மட்டுமே சொந்தமானவ அதையும் நினைவில் வச்சுக்கணும் நீஎன்றான் தீவிரமாய்.

அவ்வளவு கான்பிடண்டா என்ன.. ஒரு வேலை உங்க மேல காதல் வரலன்னா என்ன பண்றதுகேள்வியாய் அவனை பார்த்து புருவத்தை தூக்கி கேட்டவளை கண்டு அழகாய் புன்னகைத்து

அப்போ கடைசி வரை நண்பனா இருந்துட்டு போறேன்என்றான் அசால்டாய்.

ம்ம்ம் பார்ப்போம்என்றாள்.

அதை பிறகு பார்த்துக்கலாம்.. வா உனக்கு பால் காய்ச்ச சொல்லி தரேன்.. நாளைக்கு நீ தான் டீ போடணும்என்று சமையல் அறைக்கு கூட்டி சென்று சொல்லி கொடுத்தான்.

இவனோடு பழகுவது வெகு எளிதாய் இருக்கே என்று உள்ளுக்குள் அவனை ரசித்த படியே அவன் சொல்லி கொடுத்தவற்றை கவனமுடன் கேட்டுக்கொண்டாள்.

இருவரும் பால் குடித்துவிட்டு தூங்க செல்ல எப்போது இருக்கும் தனிமை மஹிக்கு விலகி ஓடி இருக்க நிம்மதியாய் தூங்கி போனாள் அன்றிரவு..

ரிஷி அவளை நினைத்த படி தன் அறையில் தூங்கி போனான்.

அடுத்த நாள் இனிதாக இருவருக்கும் விடிந்தது...

மஹி எழுந்து குளித்துவிட்டு வெளியே வர ரிஷி கூடத்தில் உடற் பயிற்சி செய்துக்கொண்டு இருந்தான்.

அதை பார்த்து முறைத்தவள்

ஒரு வயசு பொண்ணு இருக்குற வீட்டுல இப்படி தான் ஆர்ம்சை காட்டி பயமுறுத்துவதா..” என்று கேட்க

எதெது ஆர்ம்ஸை காட்டுனா பயம் வருமா.. எல்லோருக்கும் மயக்கம் தானே வரும்.. நீ மட்டும் என்ன புதுசா சொல்றஅவளை பார்த்தான்.

சின்ன புள்ளைங்க தான் மயங்குவாங்க நாங்கல்லாம் எதுக்கும் அசர மாட்டோம்என்று கூறி அங்கிருந்த இருக்கையில் அமர்ந்த படி அவனிடம் வாயாடிக்கொண்டு இருந்தாள்.

ஓ அப்போ நீ குடுகுடு கிழவியா சொல்லவே இல்லைஎன்று அருகில் இருந்த துண்டை எடுத்து வழிந்த வியர்வை துடைத்துக்கொண்டு கேட்டவனை கண்டு

ஆமாண்டா பேராண்டி உனக்கு தெரியாதா...”

தெரியுது... அதுவும் இவ்வளவு இளமையானா கிழவியை இப்போ தான் பார்க்குறேன்என்று கண் சிமிட்டி சொல்ல

சீ போங்க ரிஷி...” என்று சிரித்தவள் அங்கிருந்த சின்ன மேசையில் போட்டு வைத்திருந்த காபி கெட்டிலை கண்டு

அதுக்குள்ள காபி போட்டாச்சா... நேத்திக்கு என்னவோ என்னை போட சொன்னீங்க..”

போட சொன்னேன் தான்.. ஆனா காலையிலேயே எதுக்கு வீண் விபரிதம் என்று தான் நானே போட்டுட்டேன்என்று சொன்னவனை முறைத்து பார்த்தாள்.

ஹேய் சும்மா சொன்னேன்டா... இதுல சூப் போட்டு வச்சேன்.. சூடா இருக்கும் போதே குடி..” என்றவன் அவனே வந்து அவளுக்கு ஊற்றி கொடுத்து அருந்த கொடுத்தான்.

ஆமா குளிச்சுட்டு இதென்ன தலையை இன்னும் துவட்டாம இப்படியே வச்சு இருக்கஎன்று இயல்பாய் அவளது தலையில் இருந்த துண்டை அவிழ்த்து விட்டு காய் போட்டவன் டேபிள் பேனை எடுத்து அவள் முடி காய்வது போல அவளுக்கு அருகில் வைத்து விட்டவனை கொஞ்சம் கூட விகல்ப்பமாய் பார்க்க முடியவில்லை மஹியால்.

அவனது செயலில் இருந்தது எல்லாம் ஒரு வித தாய்மை மட்டுமே….

அவனும் சூப்பை எடுத்து பருக, “ஆமா இன்னைக்கு என்ன சமையல்.. எனக்கு இந்த பிரேட்டு சான்விஜ் இதெல்லாம் கண்டாலே அலர்ஜி சோ நல்லா நம்மூரு சமையலா செய்யிங்க ரிஷிஎன்றவளை முறைத்தான்.

என்ன முறைப்பு.. என்னோட குக் நீங்க.. சோ என் விருப்ப படி தான் சமைக்கணும்கெத்து காட்டியவளை இன்னும் நன்றாக முறைத்தான்.

சரி சரி விடுப்பா இதுக்கெதுக்கு கண்ணு முழி ரெண்டும் பிதுங்குது.. மூக்கு விடைக்குது...”

அடிங்க கொஞ்சம் விட்டா என்னை இந்த வீட்டு சமையல் காரனாவே மாத்திடுவ போல

அச்சோ அப்போ இப்போ வரை ஆகலையா.. நான் அப்படி தானே நினைச்சேன்..” நக்கல் பண்ண

நினைப்ப நினைப்ப.. உன்னைஎன்று அடிக்க வர அவள் எழுந்து ஓட அவன் பின்னே துரத்த என்று காலை பொழுதே இருவருக்கும் இனிமையாய் இருந்தது..

சிம்பிள்லா சாம்பார் சாதம் செய்துடலாம்என்று அவன் சொல்ல..

சரி அப்போ நான் காய் கட் பண்ணி தரேன்.. எப்படின்றது மட்டும் சொல்லுங்கஎன்று கைகளை கழுவிக்கொண்டு ரெடியாய் இருந்தவளின் ஆர்வத்தை கண்டு புன்னகைத்து எப்படி நறுக்குவது என்று சொல்லிக்கொடுத்தான்.

வாவ் எவ்ளவு வேகமா கட் பண்றீங்க சூப்பர் ரிஷி..”

அது இருக்கட்டும்.. நீ முதல்ல கொஞ்சம் ஸ்லோவாவே கட் பண்ணு. என்னை போல வேகமாய் கட் பண்றேன்னு கையை நறுக்கிக்காத.. இன்னைக்கு தான் நீ கட் பண்ணவே தொடங்கி இருக்க அதனால கவனமா நறுக்குஎன்று எச்சரித்த படியே மீதி வேலையை செய்ய ஆரம்பித்தான். அவனது எச்சரிக்கை படியே கொஞ்சம் மெதுவாகவே நறுக்கினாள்.

மெதுவாக நறுக்கினால் கூட அவளது கைகள் நடுங்கியது..

அதை அவனிடம் சொல்லமுதல் நாள் அப்படி தான் இருக்கும்.. இதுன்னு இல்ல எந்த வேலையும் முதல் நாள் செய்யும் போது நம் கைகள் நடுங்க தான் செய்யும்.. அதனால கவலை படாம செய்..” என்று சொல்ல முனைப்புடன் காய்களை நறுக்கினாள்.

ஹேய்என்ற அவளது கூச்சலில் ரிஷி படபடத்து போனான்.

மஹி என்ன ஆச்சுஎன்று தவிப்புடன் கேட்டபடி அவளிடம் நெருங்க

அவன் முன்பு தன் கைகளை காட்டிரிஷி பாருங்க நான் கைகளை வெட்டிக்கலஎன்று ஆர்வத்துடனும், சிறிய வெற்றி கொண்ட நெஞ்சுடனும் சொன்னவளை கண்டு நிம்மதியாய் சிரித்தான்.

இதுக்கு தான் இப்படி கத்துனியா.. நான் கொஞ்சம் பயந்துட்டேன் மஹி...” என்று அவளிடம் பேசினாலும் அவனது கவனம் முழுவதும் அவளின் கைகளின் மீதே இருந்தது...

எங்கேயும் வெட்டிக்களையே.. என்று அவன் ஒரு முறை ஆராயந்துக்கொண்டன்.

பின் மீதி வேலைகளை முடித்துக்கொண்டு ரிஷி குளிக்க செல்ல, மஹி வீட்டை சுத்தம் செய்து கூட்டி விட்டாள்.

சாப்பாட்டை எடுத்து மேசை மீது வைத்து விட்டு இருவரும் சாப்பிட சாப்பாட்டு தட்டை வைத்து பரிமாறும் சமயம் ரிஷி வர இருவரும் சேர்ந்து சாப்பிட்டார்கள்.

சாப்பிட்டு முடித்தவளுக்கு கண்கள் கலங்கி போனது... ‘முதல் முறை வீட்டு சாப்பாடு சாப்பிடுகிறாள்...’

கைகழுவும் சாக்கிட்டு அவள் எழுந்து செல்ல அவளது கண்ணீரை கண்டு வேதனை கொண்டவனுக்கு மேற் கொண்டு சாப்பிட முடியவில்லை. சாப்பாட்டை அலைந்து கொண்டிருந்தவனை கண்டு தன்னை தேற்றிக்கொண்டு

செஞ்ச உங்களாலேயே சாப்பிட முடியலையே.. என்னை மட்டும் சாப்பிடு சாப்பிடுன்னு வச்சு செஞ்சீங்கல்ல இருங்க உங்களுக்கு இன்னொரு கரண்டி வைக்கிறேன்என்று அவனை வம்பிழுக்க

அவள் நொடியில் தன்னை தேற்றிக்கொன்டதை எண்ணி அதற்கும் வருந்தியவன் அவளுக்காக வலுகட்டாயமாய் தன்னை தேற்றிக்கொண்டு

காலையில எழுந்து அரக்க பறக்க செஞ்சு குடுத்தா என் சமையலையே நீ கிண்டல் பண்ணுவியா... உன்னை இரு என்ன பண்றேன்னு பாருஎன்று எழ

ஹலோ எதா இருந்தாலும் சாப்பிட்டுட்டு பிறகு பார்த்துக்கலாம்.. இப்போ முதல்ல சாப்பிடுங்க.. நான் போய் அலுவலகத்துக்கு கிளம்புறேன்.. கொஞ்சம் தாமதமா போனாலும் என் சிடு மூஞ்சி மேனேஜெர் என்னை திட்டும்என்று அப்போதும் அவனை வம்பிளுத்துட்டு போக

செத்த வாஎன்று விருட்டென்று அவன் எழுந்து அவளை அடிக்க வர

ஐ அசுக்கு புசுக்கு அவ்வளவு சீக்கிரமால்லாம் மாட்ட மாட்டேன்..” என்று வேகமாய் ஓடி போய் தன் அறை கதவை தாளிட்டுக்கொண்டாள்.

வெளியே இருந்தவனுக்கு மேற் கொண்டு சாப்பிட முடியாமல் மீதம் இருந்த சாப்பாட்டை தங்களின் உப்பரிகையில் வைத்திருந்த சின்ன மண் சட்டியில் பறவைகள் வந்து சாப்பிடுவதற்கு வைத்து விட்டு கை கழுவினான்.

எப்போடி நீ முழுசா என் கிட்ட வருவ.. உன் வருகைக்காக ரொம்ப நாளா காத்துக்கிட்டே இருக்கேன் மஹி... ரொம்ப காக்க வைக்காம சீக்கிரமா வந்திடுடி..” என்று புலம்பியவன் அவளுக்கு மத்தியம் உணவை பேக் பண்ணி வைத்தான்.

அலுவலகம் செல்வதற்கு தயாராகி வெளியே வந்தவளின் முன் சாப்பாடு டிபனை நீட்டினான் ரிஷி...

சத்தியமாய் மஹியால் தாங்க முடியவில்லை.. எங்கே அவனது தோளில் சாய்ந்து அழுது விடுவமோ என்று பயந்தவள் கலங்கிய கண்களை மிகவும் சிரமபட்டு விரித்து வைத்து கேவல் வெளிவர துடித்த வாயை இறுக்க மூடி மௌனத்தில் வைத்தவள் இதழ்களை மட்டும் லேசாய் விரித்து சிரித்தவள் அவன் நீட்டியதை வாங்கி தன் பையில் வைத்துக்கொண்டு பேச கூட முடியாமல் தலையை மட்டும் விடைபெறுவது போல அசைத்தவள் அடுத்த நொடி வெளியேறி போனாள்.

அவளது உணர்வுகளை படித்தவன்சரி கவனமா போ... நான் பின்னாடி தான் வருவேன்என்று சொல்லி விடை கொடுத்தான். அதை கேட்டவளுக்கு இன்னும் அழுகை முட்டியது.

அவனது அந்த சாதாரண கவனிப்பிலே உள்ளம் நெகிழ்ந்தவள் விழிகளில் வழியும் நீரை துடைக்க கூட மனம் இல்லாமல் பேருந்தில் ஏறி அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தாள்.

அலுவலகத்துக்கு வந்தால் எல்லாவற்றையும் மறந்து விடுபவள் இன்று எதையும் மறக்க முடியாமல் ரிஷியின் செயலிலே சுழன்று கொண்டு இருந்தாள். தோழிகள் கூட அவளது அமைதியை கண்டு புருவம் சுருக்கினார்கள்.. ஆனால் ரிஷி ரவுன்சில் இருப்பதால் அவளிடம் எதையும் கேட்க முடியாமல் தவித்தார்கள்.

ரிஷி கூட அவளது நடவடிக்கைகளை தான் கவனித்துக்கொண்டு இருந்தான். அவளிடம் இருந்த இந்த அமைதி அவனை என்னவோ செய்தது.. பொறுத்து பொறுத்து பார்த்தவன் அதற்க்கு மேல் தாங்க முடியாமல் அவளை தன் அறைக்கு அழைத்தான்.

சொல்லுங்க ரிஷி..” என்றவள் சட்டென்று நாக்கை கடித்துக்கொண்டுசாரி சார்.. சொல்லுங்கஎன்றாள்.

அவன் எதுவும் சொல்லாமல் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான்.

சொல்லுங்க சார்என்று மறுபடியும் கேட்டவளை பார்த்து பெரு மூச்சு விட்டவன்என்ன ஆச்சுஎன்றான் மொட்டையாய்..

ஒன்னும் ஆகலையே சார்..”

நீ பழைய மஹி இல்லை..” என்றான் கூர்மையாக..

ரிஷி இது ஆபிஸ்

சோ வாட்

நீங்க எனக்கு உயர் அதிகாரி.. அதுக்கு ஏற்றார் போல நடங்கஎன்றாள் தவிப்புடன் அவனின் கோவத்தை கண்டு

நான் எப்படி நடக்கனும்னு நீ சொல்லி தராத.. எல்லாம் எனக்கு தெரியும்... சொல்லுடி என்ன பிரச்சனை.. என்னை பிடிக்கலையா...” என்றான் வலியுடன்

ப்ச் இது அது இல்ல... இது வேற பீல்...” என்று பட்டென்று சொன்னாள்.

அப்படி என்ன பீல்..” என்று கேட்டவனை பார்த்து

ம்ம்ம் இப்படி ஒரு முரட்டு பீசு எனக்கு குக்கா இருக்கேன்ற பெருமிதம் தான்.. அதான் அந்த உணர்வை மௌனமா இருந்து எனக்குள்ள ரசிச்சுக்கிட்டு இருக்கேன்... நான் ரசிக்கிறது உங்களுக்கு பொறுக்காதே..” என்று பட்டென்று அவள் பார்முக்கு வந்து அவனை சீண்டி விட

நக்கலா... செம்ம ஏத்தம் தான் உனக்கு..” முறைத்தவனை பார்த்து மேலும் நக்கலாய்

ஹப்பா செம்ம அடிமை ஒன்னு சிக்கி இருக்கு.. அதை எப்படி எல்லாம் வச்சு செய்யலாம்னு பிளான் போட்டுக்கிட்டு இருக்கேன்... அதனால இன்னைக்கு உங்க கிட்ட எந்த வம்புக்கும் வர மாட்டேன்.. சோ உங்களுக்கு இன்னைக்கு பீப்பீ ஏறாது... இன்னைக்கு ஒரு நாள் ரெஸ்ட்..

ஆனா அதுக்கு ஆப்போசிட் வீட்டுல வச்சு செய்ய போறேன் மிஸ்டர் ரிஷி.. சோ எல்லாத்துக்கும் தயாராகுங்க... தாயர் பண்ணிக்கோங்க..” சிலுப்பியவள் அவனது பதிலை எதிர் பார்க்காமல் செல்ல, அவளை ஒன்றும் செய்ய முடியாமல் போனவளையே காண்டுடன் பார்த்துக்கொண்டு இருந்தான் ரிஷி...

தொடரும்...

Comments

உயிருருக உன் வசமானேன்..