அத்தியாயம் 5

 

அத்தியாயம் 5

 

எதையோ பேசி ரிஷியை திசை திருப்பி விட்டுட்டாலும் மஹியால் காலையில் நடந்த நிகழ்வை விட்டு அவ்வளவு சுலபமாக வெளி வர முடியவில்லை.

நேற்று வரை யார் என்று பார்க்க கூட சீண்ட கூட ஆள் இல்லாமல் தனிமையில் தவித்து கிடந்தவளுக்கு இன்று எல்லாமுமாய் ரிஷி இருப்பதை கண்டு மனம் பெரு உவகையில் நிறைந்து போய் இருந்து.

அதை வெளிபடையாக ரிஷியிடம் காட்ட முடியாது.. ஏன் என்ற கேள்வி வரும்.. அக்கேள்வியின் பின்னே ஒளிந்திருக்கும் இருள் வெளி வரும் தேவையா இது..

கூடவே தன் அன்பை அவன் தவறாய் காதல் என்று எடுத்துக்கொண்டாள் என்ன செய்வது என்று யோசித்தவள் தன் உணர்வுகளை வெளிபடுத்த தயங்கினாள்.

ஆனால் அவளை பற்றி முழுவதும் தெரிந்து தான் அவன் அவள் மீது காதல் கொண்டுள்ளான் என்று அவளுக்கு தெரியவில்லை.

அவள் தன் உணர்வுகளை மறைக்கலாம்.. ஆனால் அவள் உள்ளத்தில் எழும் தவிப்புகளை அவளை காணாமலே அவன் புரிந்துக்கொள்ளுவான் என்பது தெரிந்தால் அவள் என்ன செய்வாளோ..

நம்மையும் கவனிக்க ஒரு ஜீவன் இருக்கு என்ற எண்ணமே அவளை உற்ச்சாக வானில் சிறகடிக்க வைத்தது..

அந்த சந்தோசத்தை அவள் முழுமையாக அனுபவிக்கவே மௌனமானாள். ஆனால் அவளது மௌனம் புதிது என்பதால் அவளது தோழிகள் யோசனை ஆனார்கள்.

கூடவே ரிஷியும்...

ரிஷியின் எண்ணமெல்லாம் இந்த ஒரு செயலுக்கே இவள் இப்படி இருக்காளே.. இவளுக்காக இன்னும் என்ன என்னவெல்லாமோ செய்திருக்கிறேனே... இனியும் செய்ய இருக்கிறேனே... அதை எல்லாம் இவள் தாங்கிக்கொள்ளுவாளா என்ற அயர்ந்து போனான்.

உணவு இடை வெளி வர மஹி உணவை கேண்டீனில் வாங்காமல் கையேடு எடுத்து வந்தது பார்த்து தோழிகள் மூவருக்கும் வியப்பு..

என்னடி இது அதிசயமா இருக்கு... அதும் நீ வீட்டுல இருந்து சாப்பாடு எடுத்துக்கிட்டு வந்து இருக்க..” சங்கவி கேட்க

அதுவா பக்கத்து வீட்டுல நாயர் ஒருத்தர் புதுசா குடி வந்து இருக்கார்.. வீட்டுல இருந்தே சமைச்சி குடுத்து வியாபாரம் செய்துக்கிட்டு இருக்கார். அது எனக்கு நேத்திக்கு தான் தெருஞ்சது.. சரி கேண்டீன்ல சாப்பிட்டு வயிறை கெடுத்துக்காம கொஞ்சம் நல்ல சாப்பாடு சாப்பிடுவோம்.. கூடவே நம்மளால அந்த நாயர் நல்லா இருந்துட்டு போவட்டுமேன்னு ஒரு நல்ல எண்ணம் தான்.” என்று கூறிய படியே எதிர் புறம் அமர்ந்து இருந்த ரிஷியை பார்த்த படியே சொன்னாள் மஹி.

அவள் தன்னை பார்க்கும் போதே ஏதோ வம்பு வளர்க்க போகிறாள் என்பதை நன்கு உணர்ந்த ரிஷி அவள் இவ்வாறு சொல்லவும் அவளை முறைத்து பார்த்தான்.

அவன் முறைப்பதை பார்த்து வாய்கடையோடம் மெல்ல சிரிப்பு எழ அதை அடக்கிக்கொண்டுஅதுவுமிள்ளாம அந்த நாயர் செம்ம ஹேன்சம்... ப்பா... பார்த்தா பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல தோணும்...” என்று மேலும் அவனை வம்புக்கு இழுக்க அவனுக்கு போரை ஏறியது...

அதை பார்த்து இவளோப்ச்ச்.. ப்ச்ச்...” என்று பரிதாப படுவது போல சொல்ல

என்னடி திடிர்னு நாயை கூப்பிடுற..” என்று காமினி கேட்க அவளுக்கு சிரிப்பு வந்து விட்டது..

ரிஷி பயங்கரமாய் முறைத்தான் மஹியை..

நாயா.... அய்யய்யோ நான் போய் நாயெல்லாம் கூப்பிடுவேனா..” என்று கண்களாலே அவனை பரிகாசம் செய்தவள்

வார்த்தையை தன் தோழிகளிடம் வீசினாள்.

நான் சும்மா அவரை நினைத்து பரிதாப பட்டு உச்சு கொட்டுனா நீ ஏண்டி நாயை ஞாபக படுத்துற..” என்று மேலும் நாயை வம்புக்கு இழுத்த படி ரிஷியை பார்த்தாள்.

வீட்டுக்கு வாடி நீ செத்தஎன்று அவளை பார்த்து முறைத்தபடியே வாயை அசைத்து சொல்ல

அதை அப்புறம் பார்த்துக்கலாம் போடா..” என்று வாயசைத்தவளை கண்டு

டா வா

ஆமாண்டா டால்டா..” என்று கண் சிமிட்ட

உன்னைஎன்று முனகியவனை கண்டு எங்கோ பார்ப்பது போல முகத்தை சுருக்கி அழகு காண்பித்து விட்டு தன் தோழிகளின் புறம் கவனத்தை திருப்பி அவர்கள் கேட்கும் கேள்விக்கு கொஞ்சம் சமாளித்து பதில் சொல்லிவிட்டு மத்திய உணவை ரசித்து உண்டாள்.

அவள் ரசித்து உண்ணும் அழகை சற்று தள்ளி இருந்து அவனும் சாப்பிட்டுக்கொண்டே பார்த்துக்கொண்டிருந்தான் ரிஷி.. அவனது முகம் இன்று தான் அவ்வளவு நிறைவாய் இருந்து.

மீதமிருந்த பொழுது விரைவாக ஓட மாலை வந்தது. அலுவலகத்தில் இருந்து கிளம்பி அவள் வீட்டுக்கு பேருந்தில் வந்து இறங்கிய சமயம் ரிஷி காருடன் பேருந்து நிலையத்தில் நின்றிருந்ததை கண்டாள்.

இங்க என்ன வேலைஎன்று முறைத்த படியே அவனிடம் வந்தவளை

நாளை சமைக்க எதுவும் இல்லை.. அதான் வா அப்படியே கொஞ்சம் சாப்பிங் போயிட்டு வரலாம்என்று அவளை உள்ளே இழுக்க முறைத்த படியே

நாலு காய்கறி வாங்குறதுக்கு இவ்ளோ பெரிய கார்ல போறதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல..”

எனக்கு தெரியலடிஎன்றான்.

அதானே நமக்கு ஏன் அதெல்லாம் தெரியும்என்று நொடித்துக்கொண்டவளிடம் அவளுக்கு பிடித்த நொறுக்கு தீனியை நீட்டினான்.

ம்ம் சூப்பர் ரிஷிஎன்றவள் சாப்பிட்டுக்கொண்டே வர அவன் அவளுடன் பேசிய படி வந்தான்.

கொஞ்ச நேரம் கழித்து காபி மேக்கரில் காரில் பயன் படுத்தும் மக்கில் காபியை அழகாய் சூடு பண்ணி அவளிடம் நீட்டினான்.

பார்ரா.. செம்ம ரிஷிஎன்று வாங்கி பருகியவள்

ஆமா நீங்க குடீச்சீங்களாஎன்று மிடறு விழுங்கியபடியே கேட்டவளின் அழகில் தன்னை மறந்தவன்இல்லைஎன்று தலை அசைத்தான்.

ஏன் ரிஷி இப்படிசலித்துக்கொண்டவள்காபி இருக்கா இல்ல இதுலே பாதி வைக்கவா

உன்னோடதுலயே பாதி வைஎன்றான் கண்களில் லேசான கள்ள தனத்துடன் அதை உணராதவள்ம்ம்என்று மண்டையை உருட்டிவிட்டு கர்ம சிரத்தையாய் பாதி குடித்து விட்டு மீதி பாதியை அவனிடம் நீட்டினாள்.

அவன் காரை ஒரு ஓரமாய் நிறுத்தி விட்டு அவள் இதழ்கள் பட்ட காபியை ரசித்து மெதுமெதுவாய் அருந்தினான்.

அவன் குடிப்பதை கண்டு காண்டான மஹிஇத்துனுகோண்டு காப்பிய குடிக்க ஏன் இவ்வளவு பில்டப்புஎன்று புரியாமல் கேட்க

எனக்கு காப்பிய ரசிச்சு குடுச்சா தான் குடுச்ச மாதிரி இருக்கும்.. அதான்என்று கண்ணடித்து சொன்னவனை கண்டு நொடித்துக்கொண்டாள்.

இரவு என்ன சமையல்... நாளைக்கு என்ன சமைக்கணும்என்று அவள் பேச

கொஞ்ச நேரம் எதுவும் பேசாதடிஎன்று சன்னல் கண்ணாடியை திறந்து விட மெல்லிய மழை சாரல் காரின் உள்ளே வந்து விழுந்தது.. ரிஷி ஏசியை அனைத்து விட்டு கண்களை மூடி மனதுக்கு இதமாக இருந்த அந்த ஏகாந்த மான உணர்வை உள் வாங்கி ரசிக்க

பய புள்ளைக்கு அப்போப்போ கிறுக்கு புடுச்சுடும் போலஎன்று சத்தமாக முணுமுணுக்க அதை காதில் வாங்கியவன் அவளை முறைத்து பார்த்தான்.

அதில் மஹி பம்மிக்கொள்ள அழகாய் ஒரு புன்னகையை சிந்தினான். அந்த புன்னகை மஹியை இழுக்க

ரொம்ப அழகா சிரிக்கீறீங்க ரிஷிசொன்னாள்.

அதற்க்கும் அவன் ஒரு சிரிப்பை வழங்கிவிட்டுஷ்என்று அவளின் உதட்டின் மீது கை வைத்து அவளை அமைதியாக இருக்க சொன்னவன் இருக்கையின் பின் புறம் சாய்ந்து அமர்ந்து கைகளில் தன் காதலியின் எச்சில் பட்ட காபியை அருந்திய படி எதிர் வரும் சாரலுக்கு முகத்தை கொடுத்த படி இருந்தான்.

அவனது ரசிப்பு தன்மையை உணர்ந்து கொண்ட மஹி அவனை அன்புடன் பார்த்தாள்.

அவள் புறமும் சாரல் வீச, மெல்லிய இருட்டு விழுந்த நேரம், பாதை ஓர மரங்கள் அழகாய் மழையில் நனைந்த படி சா மரம் வீச, மெல்லிய தூறல் அவளை வா வெணா அழைக்க கதவை திறந்து கொண்டு வெளியே வந்தவள் காரின் மீது சாய்ந்த படி தன் மேல் விழுந்த  மழை துளியை ரசித்த படி கண்களை மூடி நின்றாள்.

அவளது அரவம் கேட்டு கண் விழித்த ரிஷி அவள் மழையில் நனைவதை கண்டு எதுவும் சொல்லாமல் காரில் இளையராஜா பாடல்களை ஓட விட்டவன் மீதமிருந்த காபியை ஒரே மடக்கில் குடித்துவிட்டு அவனும் வெளியே வந்து அவள் புறம் சென்று அவளருகில் நின்றுக்கொண்டு மழையை ரசிக்க ஆரம்பித்தான்.

அவனுடைய வருகையை உணர்ந்தவள் அவனது தோளில் சாய்ந்துக்கொண்டு அவனது கைகளை இருக்க பற்றிக்கொண்டு நிற்க ரிஷிக்கு மூச்சு முட்டியது..

மழை ஈரத்தில் சொட்ட சொட்ட நனைந்து நின்றவளை காணுகையில் ஏதேதோ உணர்வுகள் பிறக்க தன்னை அடக்கும் பொருட்டு வழி தெரியாமல் அவளை சுற்றி தன் கைகளை போட்டு தன்னோடு இறுக்கிக்கொண்டான் அவளை.

அவளிடம் எந்த எதிர்ப்பும் இல்லை.. இன்னும் அவனோடு சற்று அவள் நெருங்கி நிற்க தன் கையனைப்பு மூலம் அவளை இன்னும் தன்னோடு இறுக்கினான்.

மழை மேலும் வலுக்க இருவரும் கொஞ்சமும் விலகாமல் அப்படியே நின்றார்கள்... ஏதோ ஒரு மோனோ நிலை... இப்படியே காலங்கள் கடந்து செல்ல கூடாதா.. என்ற தவிப்பு இருவருக்கும்...

அதை அவளுக்கு உணர்த்தும் பொருட்டு மென்மையாய் அவளது நெற்றியில் முத்தமிட்டான். அதை உணர்ந்தும் கண் திறக்காமல் அமைதியாய் நின்றாள் மஹி...

இந்த முத்தத்தை நீ எப்படி எடுத்துக்கிட்ட மஹிஎன்றான் மௌனம் களைந்து

எப்படி எடுத்துக்கிட்டும்என்றாள் கண்களை திரவாமால் அவன் மேல் சாய்ந்த படியே.

எப்படி வேணாலும் எடுத்துக்கோஎன்றவன் மேலும் குனிந்து இன்னொரு முத்தம் அவளது நெற்றியில் வைத்தான்.

இன்னொன்னு குடுங்க ரிஷி

ம்ம்என்றவனுக்கு அவளது மோனோ நிலை பித்தத்தை கூட்ட சற்றும் யோசியாமல் அவளது கன்னத்தில் முத்தமிட்டான்.

ம்ம் இன்னொன்னுஎன்றாள் மறுபடியும்

எத்தனை வேணாலும் தருவேண்டிஎன்றவன் அவளது முகம் முழுவதும் முத்தங்கள் பதிக்க விழிகள் கலங்க அவனை நிமர்ந்து பார்த்தாள்.

அவளது கண்ணீரை கண்டு பெரிதும் கலங்கியவன்

சாரி டாஎன்றான்.

எதுக்குஎன்றவள் அவனது நெஞ்சில் சாய்ந்துக்கொண்டு கண்களை மூடிக்கொள்ள

மஹிஎன்றான் தவிப்புடன். அவளது உணர்வுகள் எத்திசையில் பயணிக்கிறது என்று ஓரளவு புரிந்தாலும் அவள் வாய் மூலமாகவே சொன்னபார்டர் தாண்டுனா வீட்டை விட்டு போய்விடுவேன்என்ற சொல் அவனை பய முருத்த அவளை அழைத்தான்.

ம்ம்

நான்என்று ஏதோ சொல்ல வர

எனக்கு இந்த நிமிஷம் வேணும் ரிஷி.. நான் அனுபவிக்கும் முதல் முத்தம். சோ ப்ளீஸ்என்று அவள் அவனது நாடியை பிடித்து விட

அதை கேட்டு ஒரு கணம் துடித்தாலும் அதில் நிம்மதியானவன் எந்த வித தயக்கமும் இல்லாமல் அவளை தன்னோடு இறுக அணைத்துக்கொண்டான்.

அவனது அணைப்பு அவளை இன்னும் ஒரு வித மயக்கத்துக்கு தள்ள அவன் நெஞ்சில் முகம் வைத்து தன்னை புடைத்துக்கொண்டவள் மழையின் பேரிரைச்சலை ஒரு வித ரசனையான புன்னகையுடன் அவனை உணற தொடங்கினாள்.

அவனுக்கும் அதே நிலை தான்...

காய் வாங்க சென்ற பயணம் வேறு எங்கோ முடிந்தது...

மெல்ல குளிர் காத்து வீச

மஹியின் உடம்பு நடுங்க அதை உணர்ந்தவன் தன்னால் இயன்ற வரை தன் உடல் சூட்டை கொடுத்து அவளை காக்க

அவனது அந்த நேர அன்பு கூட அவளை புரட்டி போட்டது..

மெல்ல அவனிடமிருந்து விலக பார்த்தவளை

ப்ச் என்னடிஎன்றான் கை பொருள் களவு போனதை போல

அதில் சிரிப்பு வரரொம்ப குளிருந்து வாங்க உள்ள போகலாம்என்று அவனை ஏறெடுத்து பாராமல் கூறியவள் உள்ளே ஏறி அமர

கை காலை உதறிக்கொண்டு அவனும் ஏறி அமர்ந்தான். ஆனால் காரை கிளப்பவில்லை.

மஹி

முதல்ல காய் வாங்கிட்டு வீட்டுக்கு போகலாம்என்றாள்.

ம்ஹும் முடியாது... எனக்கு ஒன்னு தெரியனும்என்றான்.

என்ன

நீ என்னை உணர ஆரம்பிக்கிற

அதுக்குஎன்றாள் அவனுக்கு முகத்தை மறைத்த் படி

உன் உணர்வும் லேசா என் பக்கம் திரும்புதுஎன்றான்.

சோ வாட்

உன் உணர்வு முழுமையா என் மேல வரணும்..” என்றான் அழுத்தமாய்

ரிஷி

ம்ம் இந்த சாக்கு போக்கு எல்லாம் இல்லாம எனக்கு முழுசா நீ வேணும்.. என்னை நீ முழுமையா உணரனும்.. உன் அன்பு காதல் எல்லாமே என் மீது மட்டும் வேணும்என்றான்.

அதுக்கு நேரம் ஆகும் ரிஷி..” என்றாள் தவிப்புடன்.

எவ்வளவு நேரம் ஆனாலும் பரவாயில்ல.. இனி ஒரு போதும் என்னை விட்டு நீ தள்ளி போக கூடாது.. புருஞ்சதாசற்றே அதட்டும் தொனியில்

அவனது அதிகாரம் கூட அவளுக்கு அன்பாய் தெரிய

எனக்கு வேற போக்கிடம் எதுவும் இல்லை ரிஷி உங்க மனசை தவிரஎன்றவளுக்கு கண்களில் கண்ணீர் முட்டியது.

ப்ச் இப்போ எதுக்கு அழுகை.. நான் இருக்கும் போது உனக்கு எதுக்கு வேறு ஒரு இடம் தேவை பட போகிறது... இனி எல்லாமே நான் தான் உனக்கு... நான் மட்டும் தான் உனக்கு.. கனவுல கூட நீ என்னை பிரியணும்னு யோசிக்க கூடாது.. அப்படி நீ யோசிச்சா என்னோட மிகவும் கோரமான முகத்தை நீ காண வேண்டி வரும் மஹிஎன்றான் அழுத்தமாக

ம்ம்என்றாள் அமைதியாக.

உனக்கும் சேர்த்து யோசிக்க நான் இருக்கேன்... அதனால என்னை மட்டுமே நீ உன் மனசுல நினைச்சு நிறைச்சு வச்சு இருக்கணும் சரியாஎன்று அவன் கட்டளை போட அதில் சுயம் திரும்பியவள்

டேய் போதும் போடா ரொம்ப தான் பண்ற.. அதான் ஒத்துக்கிட்டேன்ல சும்மா அதையே சொல்லிக்கிட்டு. நீ என்னை அடுச்சு துரத்தினாலும் நான் உன்னை விட்டு போக மாட்டேன் புரியுதா..” அவனது சட்டை காலரை பிடித்து உலுக்கி கேட்க

ம்ம் புரியுது...” என்றவனிடம்

ஆனா நம்ம வாழ்க்கை இந்தியாவுல வேணாம் வேற ஏதாவது ஊர்ல ஆரம்பிக்கலாம் சரியா

எதுக்கு நாம இங்க தான் வாழனும்என்றான் உறுதியாக

அது முடியாது ரிஷி... வேற எந்த ஊர் வேணாலும் சொல்லு நான் உன் கூட மறு பேச்சு பேசாம வரேன்.. தமிழ் நாடு இந்தியா என்று எதுவும் வேணாம்என்றாள் உறுதியாக

அவளை உருத்து பார்த்தவன்

என் பொண்டாட்டியா என் கூட என் ஊர்ல தான் நீ இருக்கணும்... நீ மாத்தணும்னு நினைச்சாலும் அது முடியாது மஹிஎன்று கட்டளை போல சொன்னவனை கண்டு எரிச்சல் தான் வந்தது மஹிக்கு

என்ன எனக்கு உன் கிட்ட அன்பு இருக்குன்னு ஒத்துக்கிட்ட உடனே உன் திமிரை காண்பிக்கிறியாடா

ஆமாண்டி... இப்பவே நீ என் பொண்டாட்டி தான் நினைவில் வச்சுக்கஅதில் மனம் மகிழ்ந்தாலும் அவனது பிடிவாதம் அவளுக்கு எரிச்சலை கிளப்ப

தாலி எங்க மிஸ்டர் ரிஷிஎன்றாள் ஏளனமாக

உன் கழுத்தை பாருடிஎன்றான் அவளை விட தெனாவட்டாய்

அதில் பதறி போய் தன் கழுத்தை பார்த்தாள் மஹி...

 

தொடரும்...

Comments

Post a Comment

உயிருருக உன் வசமானேன்..