அத்தியாயம் 6

 

அத்தியாயம் 6

 

அங்கே அவனது கழுத்து சங்கிலி பளிரேன புன்னகைத்துக்கொண்டு இருந்தது... அதை பார்த்து ஆசுவாசம் ஆனாலும் மனம் பதறி தான் போனது அவ்வளவு மொத்தமாய் இருந்தது அந்த சங்கிலியை பார்த்து...

என்ன ரிஷி இதெல்லாம்.. முதல்ல கழட்டுங்கஎன்றாள் சற்றே கோவமாக

ஏன் சொல்றீல நீ கலட்ட வேண்டியது தானே..” என்றான் நக்கலாய்.

அதை அவ்வளவு சுலபமாக அவளால் செய்ய முடியுமா என்ன... தவித்து போய் அவனை பார்த்தாள்.

ரிஷி ப்ளீஸ்

ம்ஹும் எனக்கு விவரம் தெருஞ்ச நாளில் இருந்து அது என் கழுத்துல ஒட்டி உரசிக்கிட்டு இருந்தது... இன்னைக்கு எனக்கு உரிமையானவ கழுத்துல ஜம்பமா ஒய்யாரமா புரண்டு கிட்டு இருக்கு.. பார்க்கும் போதே நீ எனக்கு உரிமயானவன்னு எனக்கு மட்டுமே உரிமயானவன்னு சொல்லுது. அதை கலட்டனும்னு நினைக்காத, பிறகு ரிஷி பொல்லாதவன்னாயிடுவேன்.

அவள் கழுத்து சங்கிலியை பிடித்து இழுத்து அவளை தன்னருகே வர செய்து அவளது முகத்தை கூர்மையாக பார்த்து

இது என்னோட, அதாவது என் பரம்பரைக்கு சொந்தமான வழிவழியா வர்ற நகை... இது நகைன்றத விட என்னோட மரியாதை. அதை காப்பது உன்னுடைய கடமை. இதை கழுத்தை விட்டு இறக்குநீனா நான் இல்லன்னு அர்த்தம் புரியுதாஎன்ற போது பட்டென்று அவனது வாயை அவளது கரத்தினால் பொத்தினாள்.

நான் இனி இந்த சங்கிலியை பத்தி பேசவே மாட்டேன் போதுமா..” என்றாள் கடுப்பாக..

அவளது அந்த கடுப்பு அவனுக்கு பிடித்து தொலைத்தது.

அவளது கையை எடுத்து தன் இறுக்கிய பிடியில் வைத்துக்கொண்டு இது இது தான் என் மஹிஎன்று சொல்லியவன்

சரி வா போய் காய் வாங்கிட்டு வரலாம்என்று காரை கிளப்ப

நான் இன்னொன்னு சொன்னேனேஎன்று இழுத்தாள்.

நான் அதுக்கும் அப்பவே பதில் சொன்னதா நினைவுஎன்றான்.

அந்த பதில் எனக்கு ஒப்பல

என்னை உனக்கு ஒப்பி இருக்குல்ல அது போதும்என்று சற்று கடுமையாகவே சொல்ல

அப்போ என் விருப்பத்துக்கு நீங்க மதிப்பே குடுக்க மாட்டீங்களாசற்றே ஆதங்கமாய் கேட்டாள்.

வேற எதுலயும் சொல்லு உன் கருத்தை அப்படியே வாங்கிக்கிறேன்.. ஆனா இதுல முடியாது... இந்த மண்ணுல தான் நாம சேர்ந்து வாழனும்என்றான் உறுதியாய்.

அப்படி என்ன அவசியம் வந்தது

அவசியம் இல்ல கட்டாயம்என்றான் அமர்த்தலாய்.

அவள் மேல பேச வருகையில்இதுக்கு மேல இத பத்தி பேச வேணாமுன்னு நினைக்கிறேன்என்றவன் இரும்பாய் இறுகி நின்றுக்கொண்டு காரை எடுக்க மகிக்கு கண்கள் கலங்கி போனது.

எதுவும் பேசாமல் கொட்டும் மழையை ரசிக்க முடியாமல் வெறித்துக்கொண்டு அமர்ந்து இருந்தாள்.

அவளது மௌனம் அவனை வதைத்தது என்றாலும் பெரிதாய் அவன் அலட்டிக்கொள்ளவில்லை.

இது தான் முடிவு... இது உன்னை வருத்த பட வைக்கும் தான் ஆனா இது தான் எனக்கு வேணும்என்று அவளோடு மனதுக்குள் பேசியவன் அவள் புறம் சரிந்த மனதை கட்டுக்குள் கொண்டு வந்து காரை ஓட்டினான்.

கடை வர அவளும் இறங்கினாள். ஆனால் அவன் அவளை தடுத்து நிறுத்தினான்.

நான் வர கூடாதுன்னா பிறகு எதுக்கு என்னை அழைத்துக்கொண்டு வரணும்என்று கோவபட்டவளை ரசித்தவன்

கொஞ்சம் கீழ குனிஞ்சு உன்னை பாரு என்றவனின் கண்கள் அவளை மேய குனிந்து தன்னை பார்த்தவளுக்கு தூக்கி வாரி போட்டது.

அவசரமாய் ஈரத்தில் தோய்ந்து இருந்த புடவையை சரி செய்ய முயல அது அவளது உடலை விட்டு வர மறுத்து மீண்டும் அவளது உடலோடு ஒட்டிக்கொண்டது.

அந்த நிலைமையில் அவன் முன் அப்படி இருப்பது பெரும் சங்கடத்தை விதைக்க முந்தானையை எடுத்து தன்னை போத்திக்கொண்டாள்.

அவளது அந்த சிரமத்தை பார்த்தவன் பின் பக்கம் கை நீட்டி பெரிய மொத்த துண்டை எடுத்து அவள் மீது போத்தியவன்

இந்த நிலமையில நீ வெளிய வர வேணாம்னு தான் நான் மறுத்தேன்.. எனக்கு உன்னோட கை பிடித்து காய் எடுக்க ரொம்ப பிடிக்கும். அதும் உன்னை செல்லமாய் சீண்டிக்கொண்டு இருக்கும் நேரத்தை நான் ஏன் மறுக்க போறேன்... நான் மட்டும் பார்க்கும் கோலத்தை வேறு யாருக்கும் காட்ட மனம் வரவில்லை.. உன்னை பொறுத்த வரை நான் மட்டுமே மோசமாக இருக்க ஆசை ம்ஹும் பேராசை பட்டுக்கிட்டு இருக்கேன்.. அதனால தான்என்று விளக்கமாய் அவன் சொல்ல மஹியின் முகம் வெட்கத்தில் சிவந்து போனது.

அதுக்கு இவ்வளவு விளக்கனுமாஎன்று முனக

இல்லைனா தான் மேடம் பயங்கரமா கோவ படுறீங்களேஎன்று சீண்ட

ப்ச்என்று அவன் பக்கமே திரும்பாமல் உச்சு கொட்ட,

அவளது அதித வெக்கத்தை உணர்ந்தவன்நீ கொஞ்ச நேரம் இப்படியே இரு நான் போய் காய் வாங்கிட்டு வந்துடுறேன்என்று சொல்லிவிட்டு காய் வாங்க சென்றான்.

வெளியே இன்னும் மழை நிற்கவில்லை. காரின் கண்ணாடியை இறக்கி விட்டவள் வெளியே கைகளை நீட்டி மழை நீரை பிடித்து விளையாடி கொண்டு இருந்தாள்.

இரு நாட்களுக்கு முன் எப்படி போய் இருக்கும் இந்த நாட்கள்.. ஆனால் இன்று அவனது அருகாமையில் ஆளுமையில்... ம்ம்ம் மனசெல்லாம் பறக்குற மாதிரி... ஏதோ இன்று தான் புதிதாய் பிறந்தது போல... சிறு பிள்ளையின் சிரிப்பில் உள்ளம் தொலைத்தது போல தொலைந்து போன உணர்வு அவளுள்...

ஏதோ நிறைந்து போனது போல...

அவனது வருகை அவளுள் வசந்தமாய்... வசந்த காலம் காதலை தூண்டும் மழை காலத்தை துணைக்கு அழைக்க... மழை காலம் உள்ளத்தை பரவச படுத்தி மோகத்தை தூண்டும் பனி காலத்தை கொண்டு வர, உள்ளமெங்கும் நெகிழ்ந்து குழைந்து கிடந்தது அவளுக்கு.

காய்களை வாங்கிக்கொண்டு ரிஷி வர அன்றைய மாலை பொழுது மழையோடும் ராஜாவின் அழகான மெட்டுகலோடும் கழிய இரவு உணவில் ரிஷி தன் கை வரிசையை காண்பிக்க மஹி ரசித்து ருசித்து சாப்பிட்டாள்.

உப்பரிகையில் அமர்ந்து இருவரும் இலக்கற்று தங்கள் ரசனையை பகிர்ந்துக்கொண்டு... விரல் தீண்டா ஸ்பரிசத்தில் ஒருவரை ஒருவர் நெருங்கி கொண்டு... சாரலாய் பொழியும் மழையோடு.... லேசாய் நனைந்த படி

அந்த நிமிடம் சுவர்க்கம் போல இருந்தது இருவருக்கும்...

அடுத்த நாள் எப்பொழுதும் போல பரபரப்பாய் விடிய ரிஷிக்கு உதவி செய்த படி அவளும் அலுவலகம் கிளம்பி கீழே வர அவளை வர்ப்புறுத்தி பேருந்து நிலையம் வரை வந்து விட்டு அவள் பேருந்து ஏறும் வரை காத்திருந்து அவளை அனுப்பி விட்டு பேருந்தின் பின்னாடியே சென்றான்.

அவன் பின் தொடர்ந்து வருவதை கண்டு உள்ளுக்குள் ஏதோ ஒன்று மலர்ந்தது..

அலுவலகம் வந்த பின் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் அறைக்கு சென்று வேலைகளை கவனிக்க ஆரம்பித்தான்.

அவளும் அவனது பார்வைக்கு பதில் பார்வை கொடுத்துவிட்டு தன் இடத்துக்கு சென்று வேளைகளில் மூழ்க அவளை அப்படி எல்லாம் விட மாட்டேன் என்று ரிஷி அவளை அழைக்க

ஏண்டி வந்தும் வராததுமா என்னடி பண்ணி வச்ச அதுக்குள்ள உன்னை கூப்பிடுறாரு... நீயும் போகாம இப்போ தான் உனக்கு கணக்கு மேல காதல் வந்த மாதிரி கணினிய கட்டி புடுச்சு கணக்கு பார்த்துக்கிட்டு இருக்க...

எங்களுக்கு திட்டு வாங்கி வைக்காம இருக்க மாட்டியா... நீ போகலன்ன எங்களை தாண்டி திட்டுவாரு... முதல்ல எழுந்து போடி.” என்று சங்கவி அவளை விரட்ட அவளோ மூன்று பேரின் பீப்பியை அதிகரிக்கும் நோக்கோடு சற்று நேரம் கழித்தே சென்றாள்.

என்ன ரிஷி இது இப்போ தானே வந்தேன் அதுக்குள்ள கூப்பிடுறீங்கசிணுங்கிய படியே உள்ளே வந்தவளை அழகாக முறைத்து பார்த்தான்.

அவனது பார்வையில் இவள் ஒற்றை புருவத்தை ஏற்றிஎன்னஎன்பது போல கேட்டாள்.

இந்த கருப்பு புடவையில ஆளை அடியோட சரிக்கிரடி

ஓ இதை சொல்ல தான் கூப்பிட்டீங்களா..”

இல்ல

வேற என்ன

ம்ம் கிட்டக்க வா சொல்றேன்

ஒன்னும் தேவை இல்லை எதா இருந்தாலும் தள்ளியே சொல்லுங்க...”

ம்ஹும் இது பரம ரகசியம் காதுல சொன்னாதான் கேக்கும்.. வெட்ட வெளில சொன்னா கேக்காதுஎன்றான் கண்சிமிட்டி...

அதையும் பார்க்கலாம்.. பரவால அப்படியே இருந்து சொல்லுங்க

அப்படின்ற சரி உன் ஆசையை ஏன் கெடுக்கணும்என்றவன் சத்தம் இல்லாமல் வாயை மட்டும் அசைத்து அவளை பார்த்து பேச

அட பாவி இப்படியா விளையாடுவ.. எண்ணியவள் ஒரு முடிவுக்கு வந்தாள்.

என்ன கேக்கல தானே...” என்று ரிஷி கேட்க

இல்லையே ரிஷி நல்லாவே கேட்டதே... ஏன் உங்களுக்கு கேக்கலையா..” என்று இவள் திருப்பி போட

அப்படியா கேட்டுச்சா..”

ம்ம் ஆமாம்.. கேட்டுச்சு

அப்படி என்ன கேட்டது சொல்லுஎன்று கொக்கி போட

வேற என்னநான் தான் லூசு மாதிரி கூப்பிட்டா நீ எதுக்கு வந்தன்னு கேட்டதுஎன்று அவள் தடுக்கில் நுழைய

அடி பாவி கடைசில என்னை லூசாவே ஆக்கிட்டியேடி..”

ஹாங் நீங்க மட்டும் ஏமாத்த பார்க்கலாமா அதான் நான் முந்திக்கிட்டேன்..” என்றவளை வாரி எடுத்து தன் நெஞ்சின் மீது போட்டுக்கொள்ள கரங்கள் துடித்தது...

மஹி.”

ம்ம்ம் என்னங்க

எனக்கு உன்னை ஹக் பண்ணிக்கணும் போல இருக்குடிஎன்றான் அவளை ஆசையாய் பார்த்த படி..

ஐயோ என்ன இது இப்படி வெளிபடையாவா கேட்டு வைப்பீங்கஎன்று சிணுங்கியவளின் அழகில் மனதை பரி கொடுத்தவன் அவளிடம் தாவி வந்தான்.

அவனது வேகத்தை கண்டு மிரண்டு இரண்டடி தள்ளி நின்றாள்.

ஹே எதுக்குடி பயம்.. நான் தானேஎன்று அவன் தவித்து போய் அவளிடம் கிட்ட நெருங்க

ரிஷி இது அலுவலகம்

ப்ச் பட் இது என்னோட தனி பட்ட அறைஎன்றான்.

வேணாம் ரிஷி யாராவது பார்த்தா அசிங்க மாயிடும் ப்ளீஸ்என்றாள் கெஞ்சலாய்.

என் அனுமதி இல்லாம யாரும் உள்ள வரமுடியாது மஹி... ப்ளீஸ் டி..”

வேணாம் ரிஷி...”

எனக்கு வேணுமே.. ஜஸ்ட் ஓன் மினிட்.. நீ என் கைகளில் இருந்தால் போதும் டி... வேற எதுவும் செய்ய மாட்டேன்என்ற படியே அவளை இன்னும் நெருங்க

சொன்னா கேளுங்க ரிஷி.. வேணாம்என்று அவனை விட்டு விலகி பின்னாலே நகர அவளை மேற்க்கொண்டு நகர விடாமல் அவளின் இடையில் கை கொடுத்து தன்னோடு நெருக்கி கொண்டு வர இருவருக்கும் இடையில் கை வைத்து அந்த நெருக்கத்தை தவிர்த்தவள்

கெஞ்சலாய் அவனை பார்த்தாள்.

கைய எடு மஹி..”

வேணாம் ரிஷி.. நீங்க இருக்க வேகத்துக்கு சத்தியமா இதோட நிறுத்த மாட்டீங்க... ப்ளீஸ்

ம்ஹும்என்று மறுத்தவன்

பின் அவளின் நிலையை உணர்ந்து சன்ன சிரிப்போடு அவளை விடுவித்து விட்டு தன் இருக்கையில் சென்று அமர்ந்தவன் அவளை உண்பது போல பார்க்க முறைத்தாள்.

எதுக்கு கூப்பிட்டீங்க

ம்ம் வரவு செலவு கணக்கு பார்க்கஎன்றான் கண்ணடித்து

ரிஷி.....”

ஹேய் நிஜமாடி போய் சேல்ஸ் பையில் எடுத்துட்டு வா..” என்றான்.

ஓ அதுக்கு தான் வர சொன்னீங்களாஎன்றவள் கோப்புகள் இருந்த இடத்துக்கு சென்று அதை எடுத்துட்டு வந்து அவனிடம் கொடுத்தாள்.

ம்ம்என்று வாங்கிக்கொண்டவன் அவளிடம் சில வேலைகளை கொடுத்தான்..

என் இடத்துக்கு போய் செய்யவாங்க

இல்ல வேணாம் செல்லம் இங்கவே உட்கார்ந்து பாரு... என் லேப் எடுத்துக்கோஎன்றவன் அவளுக்கு சில வசதிகளை செய்து கொடுக்க அவள் அமர்ந்து அவன் சொன்ன வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்.

ஆமா உனக்கு எப்படி தெரியும்என்றான் திடும் என்று

என்னது ரிஷி

அதான் அந்த கதிர் பத்திய விஷயம்

அது கணக்கு பார்க்கும் போது ரொம்ப டிபர் காமித்தது, அதோட இல்லாம சில நிருவனங்களுக்கு வசூல் தொகையை கேட்டு பேசும் போது சில தகவல் வந்தது. அதான் தாமதமின்றி உடனே உங்க கிட்ட சொல்லிட்டேன்.” என்றாள்.

நான்கு நாட்களுக்கு முன் நடந்த நிகழ்வை எண்ணி பார்த்தான் ரிஷி.

சார் உங்க கிட்ட ஒன்னு சொல்லணும்என்று ஆரம்பித்த மஹி கதிரின் தில்லு முள்ளு வேலைகளை பிட்டு வைக்க ரிஷிக்கு பயங்கரமாய் கோவம் வந்தது. அது படி மூன்று நாள் தொடர்ந்து கதிரின் நடவடிக்கைகளையும் கூடவே அவனுக்கு உதவி செய்தவர்களையும் கண்கானித்தவன் இன்று கணக்குகளை அவனே சரி பார்க்க ஆரம்பித்தான்.

சிரித்து நேரம் கழித்து காமினியை வர சொன்னான்.

சார்என்று வந்து நின்றாள் பயத்துடன்.

ரிஷிக்கு தெரியாமல் மஹி அவளை பார்த்துஹாய்என்று கை அசைக்க ரிஷியை கண்களால் காட்டிஏண்டி படுத்துறபயந்து நடுங்கி கெஞ்சினாள் அவள்.

லூஸ்ல விடுடி..” என்று என்று வாயசைத்து செய்கை செய்ய

வாட்டிஸ் திஸ் மஹி.. ஒரு மணி நேரம் கூட உன் தோழிட்ட பேசாம இருக்க முடியாதா..” என்று கடுமையாக கேட்க

காமினிக்கு தெரியாமல் கண்ணடித்து உதட்டை சுளித்து அவனை வெறுப்பேற்றி விட்டு தன் வேலைகளில் ஆழ்ந்தாள்.

எவ்வளவு விளையாட்டு என்றாலும் நடக்க போகும் நிகழ்வை எண்ணி சற்று பயந்து போய் தான் இருந்தாள். ஏனெனில் கதிர் சற்று பயங்கரமானவன்...

அவனால் ரிஷிக்கு ஏதாவது ஆபத்து நிகழ்ந்து விடுமோ என்று அவளது மனம் அடித்துக்கொண்டது.


Comments

உயிருருக உன் வசமானேன்..