அத்தியாயம் 8


 

அத்தியாயம் 8

 

கூட்டம் தொடங்குவதற்கு முன் ரிஷி ஒரு போன் பண்ணினான்.

இதுக்கு மேல பேச ஒண்ணுமே இல்ல பார்த்திபன் நடவடிக்கை எடுக்க வேண்டியது தான். நீ வா பாத்துக்கலாம்என்று வைத்துவிட்டு மஹியை அழைத்துக்கொண்டு கூட்டம் நடக்கும் கூடத்திற்கு வந்தான். அங்கு எல்லா ஏற்பாடும் சரியாக இருந்தது. நிறுவனத்தின் முக்கிய தலைவர்களை வர வைத்து இருந்தான் ரிஷி.

அனைவரும் அங்கு கூடி இருக்க முதலாளிக்கான இருக்கையில் பார்த்திபன் வந்து அமர்ந்தான் கம்பீரமாக..

ரிஷியை பார்த்து தலை அசைத்துஆரம்பி ரிஷிஎன்று சொல்ல

எழுந்து நின்றவன் அனைவருக்கும் விஷ் பண்ணிவிட்டு கதிரை சுட்டி காட்டி அவன் செய்த தவறை சொல்ல கதிரோ தலைமை பொறுப்பில் இருந்த ஒருவரை கூர்மையாக பார்த்தான். அவன் விழி சொன்ன செய்தியை ரிஷியும் பார்த்திபனும் படிக்க தவறவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் அர்த்தத்துடன் பார்த்துக்கொண்டார்கள்.

உங்க மேல புகார் சொல்லி இருக்காங்க கதிர் இதுக்கு என்ன பதில் சொல்ல போறீங்கபார்த்திபன் பேச

சார் பிஎம் நிருவனம் பாக்கி தொகையை செழுத்திட்டதா சொன்னாங்க அதான் நான் சரக்கை அனுப்பினேன்என்றான்.

அவங்க தொகை குடுத்ததா யார் சொன்னாஎன்று கிடுக்கு பிடி போட

அக்கவுன்ட் டிப்பார்ட்மென்ட் தான் சொன்னாங்க

அதுல யாருன்னு குறிப்பா சொல்ல முடியுமா..”

அது.. அது

ம்ம் சொல்லுங்க யாருஅங்கு நின்றிருந்த மஹி அவனின் கண்ணில் பட

மஹி தான் சார்என்றான்.

அதை கேட்டுக்கொண்டு இருந்த மஹிக்கு தூக்கிவாரி போட்டது என்றால் பார்த்திபனுக்கும் ரிஷிக்கு எரிச்சல் வந்தது.

கதிரையும் சரி அவனுக்கு மேலே இருந்த ஆளையும் சரி சரியான வகையில் கையும் களவுமாக பிடிக்கவே முடியவில்லை. பார்த்திபன் குடும்பத்திற்கு வேண்டிய ஆளாய் அவர் இருந்தததால் சட்டென்று அவரின் மீது கை வைக்கவும் முடியவில்லை. அதற்க்கு சரியான ஆதாரம் தேவைப்பட்டது.

இது மாதிரி நிறைய நிறுவங்களுக்கு சரக்கை கொடுத்து பணத்தை இவர்கள் வாங்கிக்கொண்டு அந்த நிறுவனம் கொடுக்கவில்லை என்பது போலவும். இல்லை என்றால் அந்த நிறுவனத்தோடு ஒப்பந்தம் போல போட்டுக்கொண்டு சரக்கை கொடுத்துவிட்டு பாதி பணத்தை பார்த்திபனின் நிறுவனத்துக்கு பணத்தை அந்த நிறுவனம் அப்புறம் கொடுக்கிறேன் என்று கால தாமதம் செய்து வாராகடன் போல காண்பித்து பார்த்திபனின் நிறுவனத்துக்கு போக்கு காட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

வெளியே இருந்து வரும் பிரச்சனைகள் என்றால் சமாளித்து விடலாம். இங்கு இவர்களுக்குள்ளே ஒளிந்துகொண்டு எதிர் நிறுவனகளுக்கு சேவை செய்துகொண்டு இங்கேயும் அங்கேயும் பணம் பார்த்து கொளுத்து போய் திரியும் இது போலானவர்களை எளிதில் தண்டிப்பது இயலாத காரியம்.

தகுந்த ஆதாரம் மட்டுமே அவர்களை வீழ்த்தும் கருவி.. ரிஷி அதற்காக தான் மூன்று நாட்களை எடுத்துக்கொண்டான். கதிரின் பின் மறைந்து இருக்கும் ஆளை இனி வெளிக்கொண்டு வருவது மட்டுமே இவனது வேலை.

ரிஷி மஹியை பார்த்தான். அவளே முன் வந்துஇல்லை எனக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.. நான் யாருக்கும் எந்த ரிப்போர்ட்டும் குடுக்கல சார்என்றாள் லேசாய் பயந்த படி.

இதுக்கு என்ன சொல்றீங்க கதிர்ரிஷி அம்பாய் சொல்லை வீச

அவங்க தான் குடுத்தாங்கஎன்றான் அழுத்தமாக

அப்படியா எங்க அவங்க கொடுத்த ரிப்போட்டை காண்பிங்க பார்க்கலாம்என்று கதிரிடம் கேட்க அவனோ ரொம்ப அசால்ட்டாய் ஒரு போலியான பிஎம் நிறுவனத்தின் ரிபோர்டை காண்பித்தான்.

அதில் காட்ட பட்டிருந்த தொகை முழுவதும் செலுத்தப்பட்டு இருந்ததாக இருக்க மஹியின் புறம் திரும்பி

நீங்க மெயின்டைன் பண்ற கணக்கை காண்பிங்க

அவள் எல்லாத்தையும் தயாராய் வைத்து இருந்ததால் அங்கிருந்த பெரிய திரையிலே அதை ஒளிரவிட்டாள்.

அவங்க கணக்கு வேற மாதிரி கான்பிக்குதே கதிர்

முஹும் மஹி மேடம் எனக்கு கொடுத்தது இந்த ரிப்போட் தான். அதனாலா தான் நான் அந்த நிறுவனத்துக்கு பொருட்களை அனுப்பினேன்என்றான் கொஞ்சமும் அசராமல்.

அப்படியா அப்போ மஹி மேல தான் தவறு இல்லையா..” என்று கேட்டபடி ரிஷி வலது கையின் சட்டையை மேலே ஏத்திவிட்டு இடது கையில் இருந்த வாட்ச்சை அவிழ்த்து மேசையின் மீது வைத்து விட்டு கதிரை ஒரு கூர் பார்வை பார்த்தான்.

ரிஷியின் செய்கையில் உள்ளே பயம் எழுந்தாலும் வெளியே எதையும் காட்டிக்கொள்ளாமல் அழுத்தமாய்

ஆமாம்என்றான் கதிர்.

அப்போ இதுக்கு முன்னாடி அனுப்பின சரக்குக்கும் இவள் குடுத்த ரிபோட் படி தான் நீங்க அனுப்புனீங்க சரியா

கதிரோ மறுபடியும்ஆமாஎன்றான்.

நீங்க சொல்ற படி பார்த்தா எல்லாத்துக்கும் மஹி மட்டும் தான் காரணம். அவங்க கொடுத்த தவறான அறிக்கை மட்டும் தான் இல்லையா. இல்லன்னா நீங்க சரக்கை அனுப்ப மாட்டீங்கல்லஎன்ற படியே அவனை நெருங்கினான் ரிஷி.

கதிர் ரிஷியின் நெருக்கத்தில் பயந்தாலும்ஆமாம்என்றான்.

அவன்ஆமாம்என்று சொல்லி முடித்த அடுத்த நொடி யாரும் எதிர் பார்க்காத வகையில் ரிஷி கதிரின் கன்னத்தில் விட்டான் ஒரு அறை.

மஹி வேலைக்கு சேர்ந்தே மூணு மாசம் தான் ஆச்சு.. ஆனா நீ சரக்கை பலவருசமா கை மாத்திக்கிட்டு இருக்க..” என்று சொன்ன போது தான் தான் செய்த தவறு புரிய

ஆமால்ல அவ வேலைக்கு வந்து மூணு மாசம் தானே ஆச்சுஎன்று நொந்து கொண்டான். ஆனாலும்

பேசிக்கிட்டே இருக்கும் போது இதென்ன ரிஷி மேல கை வைப்பது.. இதெல்லாம் நல்லதுக்கு இல்லஎச்சரித்தான்.

யாருக்கு நல்லது இல்ல..” என்றபடி இன்னும் ஒரு அறை விட, கதிர்  அங்கு அமர்ந்து இருந்த தீனதயாலனை எச்சரிக்கும் பார்வை பார்த்தான். அந்த பார்வையில் அவருக்கு வேர்த்து கொட்ட

என்ன ரிஷி இது இப்படி தான் பேசிக்கிட்டு இருக்கும் போதே கை நீட்டுவதா..” என்று அவனை தடுக்க பார்த்தார் அவர்.

வாங்க தயாளன் சார் இவ்வளவு நாள் பேசிக்கிட்டே இருக்குறதுனால தான் இவன் பண்ண பிராடு தனத்துனால நிறுவனம் பத்து கோடி வாராகடன்ல இருக்கு... அந்த பத்து கோடிக்கு வழி சொல்லுங்க, நான் இவனை அடிக்கலஎன்றபடி மீண்டும் ஒரு அடி வைத்தான் ரிஷி.

ரிஷி.. ப்ளீஸ் இப்படி நீங்க அடிக்கிறதுனால மட்டும் பணம் வந்துட போகுதா என்ன

கண்டிப்பா வரும் சார்

எப்படிஎன்றார் உள்ளே ஜெர்க்காகி

இதோ இப்ப நீங்க வந்து இருக்கீங்கல்ல அது மாதிரி..”

புரியல

என்ன சார் புரியல... கதிருக்கு பின்னாடி இருக்கிறது நீங்க தான்னு இங்க இருக்குற எல்லாருக்குமே தெரியும்.. அதுக்கு சாட்சி அவனை ஒரு அறைவிடும் போதே முன்னால வந்து நிக்குறீங்க இதை விட வேற என்ன வேண்டும்

ரிஷி நீ அதிகமா பேசுற.. எனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லஎன்றார் படபடப்பாக

அப்புறம் ஏன் சார் இந்த ஏசி அறைல உங்களுக்கு மட்டும் வேர்க்குது..” என்றான் நக்கலாக

ரிஷி திசிஸ் டு மச்

அதை நான் சொல்லணும் அங்கிள்என்றான் பார்த்திபன்.

பார்த்திபன்

ஏற்க்கனவே வாரகடன்ல இருக்குற நிறுவனத்துக்கு மூன்று கோடிக்கு சரக்கு போகுது. அதை என்ன எதுன்னு கேக்கமாட்டீங்களா.. வெறும் மேற்பார்வை பண்றது மட்டும் தான் உங்க வேலையா நானும் இவ்வளவு நாளா நீங்களா திருந்துவீங்கன்னு நினைச்சு தான் இருந்தேன். ஆனா நீங்க திருந்தவே மாட்டீங்கன்னு புரியவச்சுட்டீங்க..

நீங்க என் அப்பா வச்ச ஆளு என்கிற ஒரே காரணத்துக்காக தான் உங்களை நான் இன்னை வரை இந்த நிறுவனத்துல வச்சு இருக்கேன். உங்களால எப்படி எனக்கு துரோகம் பண்ண முடுஞ்சதுஎன்றான் வருத்தமாய்.

இல்ல பார்த்திபன்

நீங்க எதுவும் பேசவேணாம்என்றவன்ரிஷி அந்த விடியோவை போடுஎன்றான்.

ரிஷி மஹியை பார்க்க அவள் குறிப்பிட்ட விடியோவை திரையில் ஒளிரவைத்தாள்.

அதில் கதிரும் தீனதயாளனும் பேசிக்கொண்ட காட்ச்சிகள் தெளிவாக தெரிய தீனதயாளன் அத்தனை பேரின் முன்பும் தலைகுனிந்து நின்றார்.

தீனதயாளனின் பணத்தாசைக்கு கதிரின் பேராசையும் ஒத்து போக பார்த்திபனோட நிருவனத்தின் சரக்குகளை இது போல கள்ளத்தனம் செய்து பல நட்ட கணக்கு காட்டி இருவரும் இது நாள் வரை சுடுட்டிக்கொண்டு வந்தார்கள்.

இது பார்த்திபனுக்கு தெரிந்தாலும் சரியான ஆதாரங்கள் கிடைக்காமல் போக இது வரை விட்டு வைத்திருந்தான். ரிஷியின் முயர்ச்சியினாலும் மஹியின் முயற்ச்சியினாலும் அது வெட்டவெளிச்சம் ஆகியது.

பார்த்திபன் அவரு மட்டும் காரணம் இல்லஎன்ற ரிஷி பார்ஸல் டிப்பார்மென்ட்ல இருக்குற மாணிக்கத்தை முன்னால் வரவைத்தவன்

சொல்லுங்க மாணிக்கம் ஏற்க்கனவே உங்களுக்கு அக்கவுண்ட் செக்சன் மூலமா வார்னிங் குடுத்து இருக்காங்க.. இல்லையா.. பிஎம் நிறுவனத்துக்கு எந்த சரக்கும் போக கூடாதுன்னு. பிறகு எப்படி நீங்க மூணு கோடிக்கான சரக்கை அனுப்புனீங்ககேட்டான் ரிஷி..

கதிர் தான் ரிஷி சார் பெர்மிசன் குட்டுதாங்கன்னு சொல்லி அனுப்ப சொன்னாருஎன்றார் தயக்கமாய்.

நீங்க சொல்ற காரணம் உங்களுக்கே ஏற்புடையதா இருக்கா சொல்லுங்க.. சின்ன பிள்ளைங்க தான் தப்பு செஞ்சுட்டு அதை மறைக்க தெரியாம ஒரு காரணத்தை சொல்லுவாங்க அது மாதிரி இருக்கு நீங்க சொல்றது. நிறுவனத்துல இருந்து மூணு கோடி மதிப்பில் பொருள் வெளிய போகுது. அப்படி இருக்கும் போது அது எங்க போகுது. யாருகிட்ட போகுது. அவங்க புது கஸ்டமரா.. இல்ல பழைய கஸ்டமரா. இதுக்கு முன்னாடி குடுத்த பொருளுக்கு பணம் வந்துச்சா என்ன எதுன்னு விசாரிக்காம எப்படி இப்படி பொறுப்பில்லாம இருக்கீங்க..”

அக்கௌன்ட் டிப்பார்ட்மென்ட்ல இருந்து வாரவாரம் பெண்டிங் ரிபோட்ஸ் வருதா இல்லையா.. மஹி இவங்களுக்கு நீங்க ரிபோட் குடுக்குறீங்களா இல்லையாஎன்றான் கோவமாக.

லேசான படபடப்புடன்கரண்ட் அப்டேட் வரை அவங்களுக்கு இன்பார்மேசன் குடுத்துக்கிட்டு தான் சார் இருக்கோம்என்ற கூற்றை கேட்டு ரிஷிக்கும் பார்த்திபனுக்கும் அவ்வளவு கோவம் வந்தது.

ஸ்டேட்மென்ட் எதுக்காக குடுக்குறோம். வாங்கி குப்பையில் போடுறதுக்கா இல்ல வடை பஜ்ஜி வச்சி சாப்பிடுரதுக்கா. நீங்க செய்யிற ஒரு தப்பு எத்தனை பேரை பாதிக்குது தெரியுமா... நீங்க ஈஸியா சொல்லிட்டு போய்டுவீங்க... அதுக்கு பின்னால இந்த நிறுவனமும் இந்த நிருவனத்தை சேர்ந்த அடிமட்ட தொழிலார்கள் வரை பாதிக்குன்றது கூடவா தெரியாது. இல்ல தெரிஞ்சும் நமகென்னன்னு இருக்கீங்களா.. அப்படி இருந்தா வெரி சாரி அவங்களுக்கு இந்த நிறுவனத்துல இடமில்லைஎன்று தயவு பாராமல் சொன்னான் ரிஷி.

அதை சொல்ல நீ யாருஎன்று அதுவரை அடங்கி இருந்த கதிர் ஆவேசமாக கேட்க

அவனுக்கு எல்லா பவரும் இருக்கு கதிர். ரிஷி கேக்குற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியது உன் வேலை. மாறா அவனை கேள்வி கேக்க இங்க யாருக்கும் உரிமை இல்லை. குற்றம் உங்க மூணு பேரு மேல வந்து இருக்கு. அதை நிருபி அதை விட்டுட்டு தேவை இல்லாம பேசாதஎன்றான் பார்த்திபன்.

அவனை தொடர்ந்து ரிஷி மாணிக்கத்திடம்

ஒரு வார்த்தை என் கிட்டையோ இல்ல மஹி கிட்டயோ கேட்டு அனுப்பி இருக்கலாம் இல்லையா..“ கேட்டான். அதற்க்கு பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்து நின்றான்.

அப்போ உனக்கும் இதுல பங்கு இருக்கு இல்லையா..”

சத்தியமா இல்ல சார். இவங்க உங்க கிட்ட கேட்டாங்கலேன்னு தான் நான் விட்டுட்டேன்

இதை தான் சொல்றேன் மாணிக்கம். இவ்வளவு கேர்லேசாவா இருப்பீங்க.. போன சரக்கு ஒரு ரூபா ரெண்டு ரூபா இல்ல... முழுசா மூணு கோடி சரக்கு.. அதுக்கேத்த மாதிரி நாம கவனமா இருக்க வேணாமா... நீங்க இது போல இருந்தா ரெண்டு மாசத்துல நிறுவனத்தை இழுத்து மூட வேண்டியது தான். அதனால உங்களை அப்பிடியே விட முடியாதுஎன்றவன் பார்த்திபனை ஒரு பார்வை பார்க்க அவன் சம்மதமாய் தலை அசைத்தான்.

கதிர் அண்ட் தீனதயாளன் இதுவரை நீங்க அனுப்பின பொருளை திருப்பி வாங்கிடுங்க இல்லையா இதுவரை அனுப்பின சரக்குக்கு உரிய பணத்தை நிறுவனத்துக்கு குடுத்துடுங்க. இல்ல இது எதுவுமே செய்ய முடியாதுன்னு நீங்க நினைத்தா உங்க ரெண்டு பேரோட சொத்து டாக்குமெண்டை நிருவனத்துக்கிட்ட குடுத்துடுங்கஎன்றான் முடிவாய்.

நோ இது அநியாயம்என்று இருவரும் அலற

எது அநியாயம் உங்க பணம்னா மட்டும் வலிக்கும். மத்தவங்க பணம்னா மட்டும் சும்மால்ல.. இது தான் வழி உங்க ரெண்டு பேத்துக்கும். இல்ல இதுவும் வசதி படாதுன்னு நினைச்சா நேரா ரெண்டு பேரும் ஜெயிலுக்கு போய்டுங்க.. அது உங்களுக்கு ரொம்ப வசதியா இருக்கும். சொல்லுங்க என்ன பண்ண போறீங்க எதை பாலோ பண்ண போறீங்கஎன்றான் ரிஷி நக்கலாய்.

தீனதயாளன் ரொம்பவே அரண்டு போனார். இந்த வயசில் ஜெயிலுக்கு போனால் மகளை கட்டி கொடுத்த வீட்டில் பெண்ணின் நிலை. இல்லை வீட்டுக்கு வந்த மருமகள் தான் தன்னை மதிப்பாளா என்கிற கேள்வியும் சமுகத்தின் முன் கூனி குறுகி தான் நிற்க முடியுமா.. என்று எல்லா பக்கமும் சிந்தித்து சோர்ந்து போனார்.

கதிருக்குதன் நிலை தெரிந்தால் மனைவி மக்கள் தன்னை மதிப்பார்களாஎன்ற கேள்வி பிறந்தது. அதுவும் சிறை சென்றால் குடும்ப கௌரவம் என்ன ஆவது. ஒழுக்க சீலராய் இருக்கும் தாய் தந்தையாரின் நிலை.. என்று எல்லாவற்றையும் நினைத்தவன் கலங்கி தான் போனான்.

எங்களுக்கு கொஞ்சம் நேரம் வேணும் அது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காதீங்க ப்ளீஸ்என்று ரிஷியிடம் கெஞ்ச அவனோ கல்லை போல இறுகி நிற்க திரும்பி பாத்திபனிடம் மன்றாடினார்கள் இருவரும்.

ரிஷி என்ன முடிவெடுக்குறானோ அது தான் கடைசி முடிவு இதுல என்னால தலையிட முடியாதுஎன்று தயவு தாட்ச்சனை பாராமல் பார்த்திபனும் சொல்ல வேறு வழியில்லாமல் ரிஷியிடமே வந்து நின்றார்கள்.

சாரி ரிஷி.. இனி இப்படி நடக்காது. கொஞ்சம் அவசர படாம எங்களுக்கு ஒரு வாய்பை குடுங்க. இன்னும் ஒரு மாசத்துல பெண்டிங்ல இருக்குற பணத்தை வசூலித்து நாங்க எடுத்த பணத்தையும் குடுத்தர்றோம்என்றனர்.

இப்போ இவ்வளவு பதருறீங்களே.. இந்த செயலை செய்யறதுக்கு முன்னாடி வரும் பின் விளைவுகளை பத்தி யோசிச்சு பார்த்தீங்களா.. உங்க செயல் உங்களை பாதிக்குது என்ற உடன் எவ்வளவு துடிக்கிறீங்க.. அது போல தானே நிறுவனமும்.. நிறுவனம் உங்களுக்கு மட்டும் சம்பளம் தர்றது இல்லை. உங்களை போல ஐயாயிரம் பேருக்கு சம்பளம் கொடுக்கணும். நீங்க குடுத்த சரக்கை நான் வெளில யாருக்காவது குடுத்து இந்நேரம் பத்து கோடி பார்த்து இருந்திருப்பேன். இப்போ உங்களால பத்து கோடி போச்சு.”

இன்னைக்கு தேதி முப்பது. நான் எப்படி எல்லாருக்கும் சம்பளம் போடுறது. மெட்டிரியல் வாங்குறது. உங்க ரெண்டு பேருக்கு மட்டும் நான் இதை சொல்லல.. இங்க வந்து இருக்குற அத்தனை பேருக்கும் தான் சொல்றேன். போது சேவைன்னு நீங்க தனியா போய் எதையும் செய்ய வேணாம். உங்க வேலையை நீங்க சரிவர செஞ்சாலே போதும். உங்களுக்கு கீழ இருக்குற பல குடும்பங்கள் வயிறு வாடாம இருக்கும். ஒரு நிறுவனத்தை இழுத்து மூடுவது உங்களால மாதிரியான தொழிலார்களால தான். அதே மாதிரி அபரிமிதமான வளர்ச்சி கொடுப்பதும் தொழிலாலர்களால தான். ஆக்குறதா அழிக்கிறதான்னு முடிவு எடுங்கஎன்றுமஹி சிஸ்டம் ஆன் பண்ணுஎன்றவன்

கணக்கு வழக்குகளை சரிவர பதிவு செய்து எல்லாவற்றையும் அங்கு இருந்தவர்களுக்கு காண்பித்தான். எவ்வளவு வேலை இருவரும் பார்த்து இருக்கிறார்கள் என்பதை தெளிவாக சொன்னான்.

ஒவ்வொரு துறையும் தவறவிட்ட தவறுகளை அக்குவேறு ஆணிவேராக பிரித்து புள்ளி விவரத்தோடு காண்பித்தான்.

பொருள்கள் இருக்கும் போதே அதை சரிவர கவனிக்காமல் புதுசா மெட்டிரியல் வாங்கி இருப்பதும், சேல்ஸ் பண்ணும் பொருட்கள் தேதி வாரியாக குடுக்காமல் முன்னாடி அடுக்கிவைத்திருந்த புது தயாரிப்புகளை குடுத்து இருக்கீங்க, மார்கெட் பண்ணும் போது கமிசன் பார்க்குறீங்க, தயாரிப்புகளில் வரும் குறைகளை சரி பண்ணாமல் பொருட்களை முழுமையாக அப்படியே தூக்கி போட்டர்றீங்க.. இந்த மாதிரி செயல்கள் மூலம் நிறுவனத்துக்கு பெரும் நட்டம் வருகிறது.”

இனி இது போலொரு தவறு நிறுவனத்தில் நடக்க கூடாது என்பதற்காக தான் எல்லா விவரகளையும் காண்பித்து இருக்கிறேன். இதில் யாரையும் நான் குறிப்பிடவில்லை. குறிப்பிட்டு சொல்லும்படி வைத்துக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புறேன்என்றான் அங்கிருந்தவர்களை ஆழ்ந்து பார்த்து.

சம்மதமாய் அத்தனை போரின் தலையும் ஆடியது.

இருவரும் வேறு வழியின்றி தாங்கள் செய்த மோசடிக்கு பணத்தை திருப்பி தருவதாகவும் அது இயலாத பட்ச்சத்தில் தங்களிடம் இருக்கும் சொத்து பத்திரங்களை தருவதாக பத்திரம் எழுதி கையொப்பம் இட்டனர்.

பார்த்திபன் அதன் பின் மூவரின் மீதும் நடவடிக்கை எடுத்தான். வேலையில் இருந்து நிரந்தரமாக தூக்கினான். மாணிக்கத்துக்கு மட்டும் வேறு ஒரு நிறுவனத்தில் வேலை ஏற்பாடு செய்தான் ரிஷி.

கூட்டம் அத்தோடு நிறைவடைந்தது.


Comments

உயிருருக உன் வசமானேன்..