அத்தியாயம் 9


 

அத்தியாயம் 9

 

ரிஷியும் பார்த்திபனும் பார்த்திபனின் அறைக்கு சென்று மேற்கொண்டு நடவடிக்கைகளை பற்றி பேசிவிட்டு ரிஷி அவனது அறைக்கு திரும்ப மஹி தன் தோழிகளோடு தன் இருக்கைக்கு வந்தாள்.

ப்பா என்ன ஆளுமை...” என்று மனதுக்குள் மஹி சொல்ல அதை காமினி வாய் விட்டு சொன்னாள். திகைத்து அவளை பார்த்தாள். அவளது கண்களில் லேசான மயக்கம் வெளிப்படையாகவே தெரிந்ததில் மஹிக்கு பத்திக்கொண்டு வந்தது.

அடிப்பாவி அவன் என் ஆளுடிகதற, அந்த கதறல் அங்கு யார் காதிலும் விழாமல் போனது. சங்கவியும்ம்ம் ஆமாண்டி வந்து நாலு மாசம் கூட ஆகல, ஆனா அதுக்குள்ள கம்பெனி நிர்வாகத்தை தன் கைக்குள்ள கொண்டு வந்துட்டாரு... சூப்பர்லஅவளும் ஜோல்ல மஹிக்குஆஆஆஎன்று வந்தது.

அது மட்டுமா எங்க தப்பு நடக்குதுன்னு சரியா கண்டு பிடுச்சி தக்க நடவடிக்கை எடுக்குறாரு.. ஹி இஸ் ரியலி ஹீரோஎன்று மீனாவும் சேர சோர்ந்து போனாள் மஹி.

அந்த நேரம் சரியாய் இன்டெர்காம் அடிக்க அவசரமாய் எடுத்தாள் மஹி..

ஹெலோ காமினி கம் டூ மை ரூம்என்று ஆளுமையுடன் ரிஷியின் குரல் ஒலிக்கம்ம்என்றதுடன் பட்டென்று வைத்துவிட்டாள்.

யாருடிதோழிகள் ஆர்வமாய் கேட்க

ரிஷி... சார்

என்னவாம்

அவசரமா வர சொன்னாரு

யாரைஎன்று அவர்கள் பாய்ந்து வர பல்லை கடித்தபடி கூசாமல்என்னைஎன்றாள்.

அதானே அவராவது எங்களை கூப்பிடுரதாவது.. அப்படியே  மாத்தி கீத்தி எங்களை கூப்பிட்டுட்டாலும் மழை தான் வரும்.. ம்ஹும் அது அடுத்த ஜென்மத்துல நடந்தா தான் உண்டுஎன்று நொடித்துக்கொள்ள

அடுத்த ஜென்மத்திலும் நடக்க விட மாட்டேன்என்று மனதுக்குள்ளே சிலுப்பியவள் எழுந்து சென்றாள்.

தன் முன் வந்து நின்றவளை பார்த்து கேள்வியுடன் புருவத்தை உயர்த்தி

உன்னை வர சொல்லலையே..” என்றான் ரிஷி.

அவனது பேச்சில் பல்லை கடித்தவள்ஏன் நான் வரக்கூடாதா..”

வரலாம்டி ஆனா நான் காமினிய தானே வர சொன்னேன்

அவளால வர முடியாதாம் அது தான் நான் வந்தேன்என்றாள் மிடுக்காக

நம்புற மாதிரி சொல்லுடிஎன்று ரசனையுடன் அவளை பார்த்தான்.

ரிஷி...”

இப்போ எதுக்கு இவ்வளவு எமோஷனல் ஆகுற இங்க வாஎன்று அவளின் முகத்தில் படிந்த உணர்வை பார்வை இட்டவன் அவளை அருகில் வர செய்து தன் மடியில் அமர்த்திக்கொண்டான்.

என்ன ஆச்சு உன் தோழிகள் மூவரும் ஏதாவது சொன்னாங்களா

ம்ம்

என்ன சொன்னாங்கஎன்றவனின் கைகள் அவளை வருடி கொடுக்க அவனது வருடல்களில் மனம் தொலைத்தவள் அவன் தோள் மீது சாய்ந்துக்கொண்டாள்.

என்னடா

அது அவங்க உங்களை சைட் அடிக்கிறாங்கஎன்றாள் திணறியபடி.. அதை கேட்டு புன்னகை சிந்தியவன்இதுக்கு தான் இவ்வளவு வருத்தமா..”

ம்ம்என்று சிறு பிள்ளை போல தலையை ஆட்டினாள். அவளது அந்த செய்கையில் தொலைந்து போனவன் அவளை இழுத்து தன் கழுத்து வளைவில் புதைத்துக்கொண்டான்.

என்னை எத்தனை பேர் ரசித்தாலும் காதலே செஞ்சாலும் என் எண்ணம் எப்போதும் உன் ஒருத்தி மேல தான்டி. என் கண்கள் ரசிப்பது உன்னை மட்டும் தான். என் மனதை எப்பவோ உன் கிட்ட கொடுத்துட்டேன். உன்னை பத்தி எதுவும் தெரியாமலே உன்னை மனது முழுக்க நிறைத்து வைத்து இருக்கேன். எந்த நொடியிலும் உன்னை நான் விலக மாட்டேன்டி... என்னை விட்டு நீ தனியா போனாலும்என்று அவளை பார்க்க அவள் முறைத்தாள். அவளது முறைப்பில் சிறு புன்னகை சிந்தியவன்

போக மாட்ட... சப்போஸ் போகவேண்டிய சூழல் வந்து நீ தனியா போனாலும் உனக்கு முன்னாடி நீ போற இடத்துல உனக்காக நானோ அல்லது என் நிழலோ அங்க காத்துக்கிட்டு இருப்போம்..”

என் காதல் நிஜம்... கத்தி கத்தி சொன்னா தான் காதலா கண்ணம்மா... உணர்வுபூர்வமா உயிர்கலந்து உண்மையா உன் விழிகளை பார்த்து சொல்றதும் காதல் தான் கண்ணம்மா...”

என் உயிரின் துடிப்பு, பிடிப்பு எல்லாமே உன் கிட்ட தான் இருக்கு மஹி... என் மேல முழுமையா நம்பிக்கை வைத்து என்னை நேசி டாஎன்று அவளின் கை பிடித்து சொன்னவனின் நெஞ்சில் சாய்ந்துக்கொண்டாள் காதலுடன்.

என் மனசுல சின்ன சலனம் கூட இல்ல ரிஷி... அவங்க பேசுனது கஷ்டமா இருந்ததே தவிர உங்க மேல நம்பிக்கை இல்லாம இல்ல...” என்று நெகிழ்ந்து சொன்னவளின் நெற்றியில் முத்தம் இட்டவன்

தாங்க்ஸ் டி கண்ணம்மா..” என்றவன் அவளை இருக்க அணைத்துக்கொண்டான்.

சரி சரி ஓடு ஓடிபோய் வேலைய பாருஎன்று அவளை விரட்ட அவன் மடியில் இருந்தபடியே திரும்பி அவனை முறைத்தாள்.

அலுவலக நேரம் டா பட்டு ப்ளீஸ்கெஞ்சினான்.

அது இப்போ தான் நினைவுக்கு வருதா மிஸ்டர் ரிஷி... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மடியில வச்சு கொஞ்சிக்கிட்டு இருந்தீங்களே அப்ப நினைவுக்கு வரலையா..” முறைத்தாள் இவள்.

ப்ளீஸ்டி போடா பட்டு வேலை இருக்கு

அப்போ டீலை கேன்சல் பண்ணுங்க

எந்த டீல்டி

அதான் அந்த முத்த டீல்

பார்றா அம்மணி உசாரா இருக்குறத... டீல் இஸ் டீல்... ஓடி போஎன்றான்.

முடியாது ரிஷி நான் போகணும்னா அதை கேன்சல் பண்ணுங்க..” என்றாள் பிடிவாதமாய்.

அவனும்முடியவே முடியாது மஹி... நீயாவே எனக்குரிய முத்தத்தை கொடு.. கொடு இல்ல கொடுத்தே ஆகணும்என்றான் தீவிரமாய்..

முடுஞ்சா வாங்கிக்கோங்கஎன்றவள் அவன் மடி மீது சட்டமாய் இன்னும் வசதியாய் அமர்ந்து கொள்ள..

ரிஷிக்கு தலைக்கு மேல வேலை இருந்தது.. அதை செய்ய விடாமல் அழிச்சாட்டியம் செய்துக்கொண்டு இருக்கும் இவளை என்ன செய்வது என்று யோசித்தான்.

எனக்கும் இப்படி நீ என் மடியில் இருக்க ஆசை தான்என்றவன் அவளை சுற்றி கரங்களை வைத்து கட்டி பிடிக்க மஹிக்கு உள்ளே ஜெர்க்காணது..

பத்தாதுக்கு அவனுடைய உதடுகள் அவளின் பின் கழுத்தில் உரச அவளது உடல் சிலிர்த்தது... மீசை முடிகள் வேறு அவளை சிதைக்க அதை தாங்க முடியாமல் பட்டென்று அவனிடமிருந்து விலகிக்கொண்டாள்.

இருடி இப்போ தான் ஆரம்பிச்சேன் அதுக்குள்ள எழுந்துட்ட.. வாஎன்று அவளது கரங்களை பிடிக்க வர

கொன்னுடுவேன் உங்களை... சந்தடி சாக்குல எல்லா வேலையும் பார்க்குறிங்க.. போங்க இனி உங்க அறைக்கே வர மாட்டேன்என்று பழிப்பு காட்டிவிட்டு ஓடி விட்டாள்.

அவளது குறும்பில் சிரித்தவன் தன் வேலைகளை பார்க்க தொடங்க அவன் முத்தம் இட்ட போது மஹியின் காதோரம் கழுத்தோரம் இருந்த முடிகள் கூச்சத்தில் சிலிர்த்ததே கண் முன் வரஇம்சைய நானே விலைகுடுத்து வாங்கிட்டு வந்துட்டனோ..” நொந்தவன் முயன்று தன் கவனத்தை வேளையில் செலுத்தினான்.

வெளியே வந்த மஹிகாமினி சார் உன்னை வர சொன்னாருஎன்று சொல்ல

என்னையவாவிழிவிரித்து நின்றவளின் தலையிலே நங்கு நங்குன்னு நாலு கொட்டு வைக்கனும்னு பரபரன்னு இருந்த கையை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு

ஆமா உன்னைய தான்என்றாள்.

இதோ இப்பவே போறேன்என்று காற்றை கிழித்துக்கொண்டு ஓடிப்போய் ரிஷியின் முன் நின்றாள். போனவள் போன வேகத்திலே திரும்பி வந்தாள்.

என்னடி ஆச்சுதோழிகளோடு மஹியும் விசாரிக்க

நான் கூட கொஞ்ச தான் வர சொன்னாருன்னு அடிச்சி பிடிச்சுக்கிட்டு போனேன்டி. மனுஷன் வாய மூடாம திட்டிக்கிட்டே இருக்காரு.. அவரு மேல இருக்குற பயத்துல நமக்கே எப்பவாது தான் அவரை சையிட் அடிக்கனும்னு தோணும்.. மனுஷன் இப்படி எல்லாம் பண்ணுனா எங்க இருந்து பார்க்க மனசு வரும்என்று நொந்து போக

ரிஷிக்கு மஹியிடமிருந்து மானசீகமாக கொஞ்சல்கள் பத்து கிலோ பார்சலில் வாயுவை விட வேகமாக போய் கொண்டு இருந்தது.

இடைவேளை வர அனைவரும் உணவு உண்ண சென்றனர். மஹியின் உணவை உண்ட சங்கவி யோசனையுடன் இருந்தாள். அவளது யோசனையை பார்த்து மஹி

என்னடி ஆச்சு ஏன் ஒரு மாதிரியா இருக்கஎன்று கேட்க

ப்ச் ஒன்னும் இல்லடிஎன்றாள்.

இல்லடி நீ எதையோ மறைக்கிற.. சாப்பாடு ரொம்ப மோசமாவா இருக்குஎன்றவளை முறைத்தவள்அதெல்லாம் இல்லைஎன்றாள்.

பின்ன ஏன் ஒரு மாதிரி இருக்க

இல்ல  வரவர எங்க அம்மா சமையல் நல்லாவே இருக்க மாட்டிக்கிது..” இழுத்தாள்.

அதுக்குஎன்று உசாரானாள் மஹி.

அது தான் நல்ல சாப்பாடு சாப்பிடுறதுக்காக

சாப்பிடுறதுக்காக..”

அந்த நாயர..”

நாயர...”

கல்யாணம் செஞ்சுக்கலாம்னு இருக்கேண்டிசொல்லி முடிக்கும் முன்

என்னதுஎன்று அதிர்ந்து எழுந்தே விட்டாள் மஹி.

நீ எதுக்குடி இவ்வளவு ஷாக் ஆகுற..” கேட்டவளை கொலைவெறியுடன் பார்த்தவள்நீ ஒரு நேர சோர கேப்பன்னு பார்த்தா என் மொத்த சொர்கத்தையே கேக்குரியேடிநினைத்தவள் நிமிர்ந்து எதிர் புறம் அமர்ந்து இருந்த ரிஷியை பார்த்தாள்.

அவனது உதடு சிரிப்பில் வளைந்து போய் இருக்க இவளுக்கு பத்திக்கொண்டு வந்தது.

அந்த நாயருக்கு வயசு எழுபதுஎன்றாள் அவனை முறைத்துக்கொண்டே.

அப்படியாஎன்ற பார்வை அவன் பார்க்க சங்கவியோபரவாலடி உயிரோட இருக்குறவரை எனக்கு சமச்சி போடட்டும்... பிறகு வேற ஒரு நல்ல குக்கா பார்த்து ரெண்டாதாரமா கட்டிக்கிறேன்என்றாள்.

அடிப்பாவிஎன்று மஹி அவளை வெளிபடையாகவே முறைத்தாள்.

சமையலுக்கு மட்டும் எதுக்குமா ஆளு, கை அழுத்தி விட கால் அழுத்தி விட, துணித்துவைத்து போட வீட்டை பெருக்க இப்படி இதுக்கும் சேர்த்தே கல்யாணம் பண்ணிக்கோமீனா சொல்ல

இது கூட நல்ல யோசனையா தான் இருக்கு. எல்லாத்துக்கும் தனி தனி ஆளா போடலாமா இல்ல ஒரே ஆளே எல்லா வேலையும் பார்க்குற மாதிரி தேடலாமா..”

உனக்கு ரொம்ப தாண்டி கொழுப்புஎன்று மூவரும் சிரிக்க

ஏண்டி நான் என்ன ஆசிரமம் வச்சி நடத்தவா ஆசை பட்டேன்... ஏதோ ஒரு மூணு கல்யாணம் செஞ்சுக்கலாம்னு கேட்ட என்னை பார்த்து கொழுப்புன்னு சொல்றீங்களே இதெல்லாம் நியாயமா..” என்று சிரியாமல் கேட்டவளை கண்டு இன்னும் சிரிப்பு எழுந்தது.

அம்மாடி பொண்ணுங்களா ஆண்கள் இப்படி இத்தனை வீட்டு வேலை செய்றதுக்கு காவி கட்டிக்கிட்டு சந்நியாசமா போய்டலாம்என்றார் பக்கத்து மேசையில் அமர்ந்து இருந்த நாராயணன்.

ஏன் சார் நாங்க குடுக்குற வரதட்ச்சனை வேணும் சொத்து வேணும், சுகம் வேணும், குழந்தை வேணும் இப்படி எல்லாத்தையும் குடுக்குற பொண்டாட்டிக்காக நீங்க சமைச்சி குடுக்க கூடாதா... வேலைக்கு போயிட்டு அசந்து வரும்போது கால் பிடுச்சி விடுறதுல என்ன தப்பு, அவங்க குடுக்குற சம்பளமும் வாங்கிக்கிறீங்க, நீங்க வீட்டு வேலை செஞ்சா மட்டும் தப்புன்னு கொடி புடிக்கிறீங்க...”

உங்க கிட்ட பேச முடியுமா.. தெரியாம பாவப்பட்ட ஆண் அடிமையை பத்தி பேசிட்டாரு மஹி. அவரை மன்னிச்சு விட்டுடுங்க... இனி அவர் அந்த டாபிக்கை பத்தி எங்கேயும் பேச மாட்டாருஎன்ற ரிஷிஎன்ன நாராயணன் சார் பேச மாட்டீங்க தானேஎன்று கிண்டல் தோனியில் கேட்க அவனது குரலில் குப்பென்று உள்ளம் பூ பூத்தது.. திரும்பி அவனை பார்த்தாள் உணவு உண்டு முடித்து அவளின் முன் நேருக்கு நேர் நின்றிருந்தான் விழிகளில் ஆயிரம் கணைகளோடு.

அவரும் சிரித்த படிஇனி இந்த ஆண் அடிமையை பத்தி பேச எனக்கென்ன பைத்தியமா.. எனக்கும் ஆணடிமைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. நானாச்சு என் வீட்டு வேலையாச்சு...” என்றவரின் பதிலில் அங்கிருந்த அனைவருக்கும் சிரிப்பு வந்தது.

காமினியின் கண்கள் தெறித்து விடும் அளவு விரிந்து போய் இருக்ககண்ணை கொஞ்சம் சுருக்குடி எதுக்கு இப்போ இவ்வளவு ஷாக் ஆகுற..” சங்கவி கேட்க

ரிஷி சார் இப்படி பேசினா யாருக்கு தான் ஷாக் ஆகாது.. அந்த மனுஷன் முறைச்சு பார்த்தாலே நாம உருகி போய் நிப்போம். இவரு இப்படி சிருச்சு பேசுனா சொல்லவா வேணும்மீனா சொல்ல

ம்ம் அப்படி தாண்டி இருக்கு இப்போ என் நிலைஎன்று சுயத்துக்கு வந்த காமினி பேச அதை ஒரு காதில் வாங்கிய படியே ரிஷியை கண்களாலே முறைத்து பல கதைகள் பேசி முடித்தாள் மஹி.

சின்ன தலை அசைப்புடன் அவளை தாண்டி செல்லும் வேலையில் விரல்களை உரசிவிட்டு சென்றான். நொடியில் விரிய இருந்த உதடுகளை சிரமப்பட்டு அடக்கிவிட்டு திரும்பி பார்த்த ரிஷியை செல்லமாக முறைத்து பார்த்தாள்.

அதன் பிறகு அங்கு ரிஷியை பத்தியே பேச்சு எழ காண்டாகி போனாள் மஹி.. அந்த காண்டிலேயே உணவை முடித்துக்கொண்டு கோப்புகளில் சந்தேகம் என்ற போர்வையில் அவனது அறைக்குள் நுழைந்தாள் மஹி.

Comments

உயிருருக உன் வசமானேன்..