உள்ளே போய் என்ன பேசினார்களோ அறை மணி நேரம் கழித்து இருவரும் வெளியே வந்தார்கள். வேல்முருகனின் முகம் கவலையில் தோய்ந்து கிடந்தது. அவரின் முகத்தை பார்த்து ஏந்திழையாளுக்கு பாவமாகிப் போக “என்ன தாத்தா?” என்று இவள் பரிதவித்துப் போனாள். “ஒன்னும் இல்லடா” என்று அவளை கூட்டிக்கொண்டு வெளியே போய் விட்டார். ராசசிங்கனை திரும்பி திரும்பி பார்த்தபடி இவள் வெளியே போனாள். “அவரு ஓகே சொல்லிட்டாரா தாத்தா” என்று கேட்டாள் நம்ப முடியாமல். “ம்ம்ம்... நீ வாம்மா” என்று அவர் அவளை தன் காரில் ஏற்ற, “நீங்க இருங்க தாத்தா நான் ஓட்டுறேன்” என்றாள். ஏனெனில் அவளை விட அவர் தான் மிகவும் சோர்ந்து போய் இருந்தார். இந்த நிலையில் அவரை கார் ஓட்ட விட அவளுக்கு மனமில்லை. “எதுவும் டிமேண்ட் பண்ணினாங்களா தாத்தா?” என்று கேட்டாள். திரும்பி அவளை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தவர், “உனக்காக எவ்வளவு டிமேண்ட் பண்ணினாலும் இந்த தாத்தா குடுத்துடுவேன்டா. பேரம் எல்லாம் பேச மாட்டேன்” என்றார். “தாத்தா” என்று அவள் நெகிழ, ‘ஆனா அவன் டிமேண்ட் பண்றதே வேறடா’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவர் வெளியே போலியாக புன்னகையை பூசிக் கொண்டார். அ...
Comments
Post a Comment