அத்தியாயம் 49
“ஹேய் பொண்ணே” என்று
அவர் அதிர,
“இது தான் என் முடிவு
டாக்டர்... வாழ்ந்தா ஒண்ணா வாழுறோம். இல்லன்னா அவரோடவே என் உயிரும் போகட்டும்.
நீங்க மேற்கொண்டு ஆகவேண்டிய வேலையை பாருங்க..” என்று கம்பீரமாக சொன்னவளை பார்த்து
அயர்ந்துப் போனார்.
“ரொம்ப தெளிவா முடிவு
எடுக்குற இழை. ஆனா ராசசிங்கனை தாண்டி உனக்கு வாழ்க்கை இருக்கு. குருட்டாம் போக்குல
விட்டத்துல பாய்ஞ்ச மாதிரி இருக்கக் கூடாது. அவனே இல்லன்னாலும் நீ வாழனும்” என்று
அவர் அழுத்திச் சொன்னார்.
மருத்துவர் பேசியதை
கேட்ட ஏந்திழையாளுக்கு விரக்தியில் இதழ்கள் வளைந்தது.
“டாக்டர் ப்ளீஸ்...
என் உணர்வுகள் உங்களுக்கு புரியாது. புரிஞ்சாலும் நீங்க எல்லாம் புரியாத மாதிரி
தான் இருப்பீங்க.. அவரு இல்லாத வாழ்க்கை என்னால நினைச்சி கூட பார்க்க முடியாது.
என் நெஞ்சு முழுக்க அவர் நிறைஞ்சி போய் இருக்காரு.. எப்படி உங்களுக்கு புரிய
வைப்பேன். அவர் மட்டும் தான் என் நெஞ்சுல இருக்காரு... அடி ஆழம் வரை ஊடுருவி
போயிட்டாரு டாக்டர். அவரை கொஞ்சமா நினைச்சு இருந்தா நீங்க சொல்ற மாதிரி ஒரு வேலை
வாழ தோணும். ஆனா அவரை என் சிந்தை எங்கும் நிறைச்சு வச்சுட்டேன்.. மனம் ததும்ப
ததும்ப அவரை நினைச்சு வச்சு இருக்கேன். அவரை விட்டுட்டு என்னால ஒரு நொடி கூட
இருக்க முடியாது டாக்டர். சோ ப்ளீஸ் இந்த அட்வைஸ் எல்லாம் எனக்கு வேணாம்” என்றவள்
கண்களை மூடி படுத்துக் கொண்டாள்.
அவள் ராசசிங்கன் மீது
வைத்து இருந்த காதலை புரிந்துக் கொண்டவருக்கு ‘கடவுளே இருவரையும் அதிகம் சோதிக்காம
வாழவிடு’ வேண்டிக் கொண்டவர் அவளுக்கு போட வேண்டிய ஊசியை போட்டு விட்டு வெளியே போய்
விட்டார்.
தன் கணவனின் மூலம்
ராசசிங்கனுக்கு மாற்று மருந்தை வரச்செய்ய சொல்லிவிட்டு தன் வேலையை பார்க்க ஆரம்பித்தார்
கீர்த்தியின் தாய்.
ஏந்திழையாளை பார்க்க
வீட்டில் இருந்த எல்லோரும் பார்க்க வந்துக் கொண்டே இருந்தார்கள் அடுத்து வந்த நாட்களில். ஆனால் அவளின் இரவு பொழுதுகள்
எல்லாம் அவளின் கணவனின் அருகாமையில் கழிந்தது. இரவு உணவை அவளுக்கு கொடுத்து விட்டு
வீட்டு ஆட்கள் அனைவரும் கிளம்பி விட அதன் பிறகு ஒரு நொடி கூட தாமதிக்காமல் தன்னவனை தேடி போய் விடுவாள். அவளை நடக்க
விடாமல் ஸ்ட்ரேக்சரில் வைத்து கொண்டு செல்ல டாக்டர் ஏற்பாடு செய்து இருந்தார்
அவரின் நலனை கருதி.
“எதுக்கு டாக்டர்
இதெல்லாம்” என்று அவள் சங்கடப்பட,
“நீ ஒன்னும் சொல்ல
மாட்டா, ஆனா உன் புருசன் இருக்கான் பாரு எழுந்து வந்து என் கிட்ட சண்டை போடுவான்.
என் பொண்டாட்டியை எப்படி நீங்க நடக்க விடலாம்னு. அது தான்” என்றார் அவர்.
“உங்களை பார்த்தா
அவருக்கு பயப்படுற மாதிரி தெரியலையே” என்றாள் கிண்டலாக.
“ஏன்மா பேச மாட்ட..
அவன் எழுந்து வந்து என்னை எப்படி மிரட்டுவான்னு மட்டும் பாரு. பிறகு நீயே
சொல்லுவா” என்றவர்,
“ம்ஹும்... நீங்க
ரெண்டு பேரும் நல்லா இருக்கும் பொழுதே வீட்டுக்கு விருந்துக்கு கூப்பிட்டேன். ஆனா
அவன் என் பொண்டாட்டி என்னை முதல்ல நேசிக்கட்டும் பிறகு சேர்ந்து வரோம்னு
சொல்லிட்டான்” என்றார் பெருமூச்சு விட்டு.
அதில் அவள் அமைதியாகி
விட,
“சீக்கிரம் உன் கணவன்
உன்கிட்ட முழுமையா வருவான் இழையாள். நாளைக்கு மருந்து வந்திடும்” என்றார் அவளின்
தலையை கோதி விட்டு.
“தலையை மட்டும்
ஆட்டிக் கொண்டவள் நாளைக்காக காத்திருக்க ஆரம்பித்தாள் இப்பொழுது இருந்தே. மருந்து
வருகிறதே என்பதற்காக தன் முயற்சியை அவள் கை விடவே இல்லை.
ஏந்திழை பேசவும்
ரியாக்ட் பண்ண ராசசிங்கனை கண்டு வியந்துப் போன டாக்டர்ஸ் அவளை அவனிடம் தொடர்ந்து
பேச சொல்லி சொன்னார்கள்.
அதே போல ஏந்திழையாள்
வாய் வலிக்க வலிக்க அவனுடன் பேசிக்கொண்டே இருந்தாள். இரவு அவளுக்கு தூங்காமல் தன்
கணவனோடு கழிய, பகலெல்லாம் தூங்கி வழிந்தாள்.
இடையில் கண்ணனும்
சுந்தரமும் தினமும் ஒருமுறையாவது அவளை வந்து பார்த்தார்கள். அக்கறையால் என்று
எண்ணினால் அது தவறு. எங்கே இங்கிருந்து அவளின் கணவனை தேடி போய் விடுவாளோ என்ற
சந்தேகம் உள்ளுக்குள் ஊறிக்கொண்டே இருக்கவும் தான் இந்த விசிட். இல்லை என்றால்
கொஞ்சமும் கண்டு கொண்டு இருக்க மாட்டார்கள்.
அப்படி அவர்கள் வரும்
பொழுது எல்லாம் ஏந்திழையாள் தூங்குவதை பார்த்து சந்தேகம் கேட்டார்கள்
மருத்துவரிடம்.
“மருந்து
எடுத்துக்குறன்னால அப்படி தான் இருக்கும். அவங்க பூரண ஒய்வு எடுக்கணும். உடம்பு
தேரனும் அதுக்காக தான்” என்று எதையோ சொல்லி அவர்களை சமாளித்தார் மருத்துவர்.
“ம்ம்ம்..
பார்த்துக்கங்க” என்று சொன்ன கண்ணன் மருத்துவரை யோசனையாக பார்த்து,
“அவ வயிறு சுத்தமா
தானே இருக்கு?” என்று கேட்டார்.
“அப்படின்னா?”
ஒன்றும் தெரியாத மாதிரியே கேட்டார் கீர்த்தியின் அம்மா.
“அது தான் புழு
பூச்சி” என்று சுந்தரம் பல்லைக் கடித்தார்.
“புழு பூச்சி எல்லாம்
எதுவும் இல்ல.. வயிறு சுத்தமாக தான். இல்லன்னா பேஷன்ட்டுக்கு வயிறு வலி வந்து
இருக்குமே” என்று அவர் புரியாத மாதிரியே பதிலை சொன்னார்.
“டாக்டர் நாங்க அதை
கேட்கல” என்று சுந்தம் கடுப்படித்து விட்டு,
“குழந்தை எதுவும்
தரிக்கல தானே” என்றார்.
“என்ன சார்
சொல்றீங்க... பீரியட்ஸ் ஆகி படுத்து இருக்க பொண்ணு வயித்துல பிள்ளை இருக்குமான்னு
கேக்குறீங்க” என்று அவர்களையே திருப்பி கேட்டார் மிக அழுத்தமாக.
“இல்ல ஒரு சந்தேகம்
தான்” என்று சொன்னவர்களுக்கு அதன் பிறகு தான் பரம நிம்மதியாக இருந்தது. இருவரின்
முகத்திலும் தெரிந்த நிம்மைதியை கூர்ந்து பார்த்த டாக்டர்,
“உங்க ஆணவமும்
அகம்பாவமும் அழியும் நாள் ரொம்ப கிட்டக்க இருக்கு... அதுக்கு ரெடியா இருங்க...
பெரிய புயல் சுழற்றி அடிக்க தயாரா இருக்கு” என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவர்,
“நெக்ஸ்ட்” என்று
அடுத்த பேஷண்ட்டை அழைத்தார். அதற்கு மேல் அங்கு இருக்க முடியாமல் இருவரும் கிளம்பி
வெளியே போய் விட்டார்கள்.
இங்கே ஏந்திழையாளை
பார்க்க பெரியம்மா, அத்தைகள், பாட்டிகள், தங்கை, அத்தை மக்களும், அண்ணன்களும்
அண்ணிகளும் வந்து போய்க் கொண்டே இருந்தார்கள். ஆனால் பகல் பொழுது பெரும்பாலும்
அவளுக்கு தூக்கத்திலே கழிய மாலை வாக்கில் தான் எல்லோரிடமும் பேச முடிந்தது.
அதுவும் விசிட்டிங்
நேரம் மிகக் குறைவாக இருந்தது. அதோடு கீர்த்தியின் அம்மாவும் அதிக நேரம்
ஏந்திழையாளை பேச விடுவது இல்லை. அதனால் வந்தவர்களை கொஞ்சம் நேரம் இருக்க
விட்டுட்டு கிளம்ப சொல்லி நர்ஸ் மூலம் போக சொல்லி சொல்லிவிடுவார்.
இரவு எப்பொழுதும்
அவள் கணவனின் அருகாமையில் தான் கழிந்தது. இன்னும் ஒரு நாள் தான் இருந்தது மருந்து
வர, நாளைக்கு இரவு கிடைத்து விடும் என்று சொல்லி இருந்தார்கள்.
“சீக்கிரம் கிடைத்து
விடணும் கடவுளே. அதுவும் யாருக்கும் தெரியக் கூடாது” என்று பகல் முழுக்க விழித்து
இருக்கும் நேரமெல்லாம் வேண்டுதல் வைப்பாள். இடையில் கதிரையும் பற்றி விசாரித்துக்
கொண்டாள்.
அவன் வேறு
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும் கட்டுக்காவல் மிக அதிகம்
என்று சொல்லி இருக்க அவனை பற்றிய கவலை கொஞ்சம் குறைந்து இருந்தது.
இங்க தான்
வெளிப்படையாக எதுவும் செய்ய இயலாது. ஆனாலும் மறைமுகமாக ராசசிங்கனின் காட்ஸ் அந்த
சரவுண்டிங்கில் தான் இருந்தார்கள். கீர்த்தி அப்பாவின் கட்டளைக்கு ஏற்ப எல்லோரும்
செயல் பட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்று அறிந்துக் கொண்டவளுக்கு நிம்மதி
பிறந்தது.
“ஆமா நீங்க எப்படி
அவருக்கு பிரெண்ட் ஆனீங்க” என்று கீர்த்தி அம்மாவிடம் தன்னை செக் பண்ண வரும்
பொழுது கேட்டாள் இழையாள்.
அவளை ஒரு பார்வை பார்த்தவர்,
“அதெல்லாம் உன்
புருசனிடமே கேட்டுக்கோ” என்று முடித்து விட, சப்பென்று ஆனது..
“ம்ஹும் ரொம்ப
தான்...” என்று சிலிர்த்துக் கொண்டவள், அன்றைக்கு இரவு அவனோடு பேசும் பொழுது “இந்த
டாக்டர் ரொம்ப தான் ஓவரா பண்றாங்க ங்க.. எது கேட்டாலும் பதிலே சொல்ல மாட்டிக்கிறாங்க..
நீங்க எழுந்து வந்து என்னன்னு கேளுங்க” என்று அவனிடம் புகார் படித்தாள். அவள்
புகார் படிப்பதை கைக்கட்டி முறைத்து பார்த்துக் கொண்டு இருந்தார் கீர்த்தியின்
அம்மா.
திரும்பி பார்த்தவள்,
“அப்படி தான்
கம்ப்ளைன்ட் பண்ணுவேன்... தைரியம் இருந்தா என் புருசன் எழுந்ததுக்கு பிறகு இப்படி
என்னை முறைச்சு பாருங்களேன்” என்று அவரை முறைக்க,
“ஏன் எனக்கென்ன
பயம்... எழுந்து வர சொல்லு இப்பவே அவன் முன்னாடி உன்னை முறைக்கிறேன்” என்றார்
அவர்.
“அவர் தான் எழுந்து
வர மாட்டிக்கிறாரே டாக்டர்” என்று அவள் அழ ஆரம்பிக்க, பெருமூச்சு விட்டவர்,
“ப்ச் நீ இப்படி
அழுதா உன் பிள்ளைக்கும் சரி உன் புருசனுக்கும் பிடிக்காது. முதல்ல கண்ணை துடை...
நாளைக்கு இந்நேரத்துக்கு அவன் எழுந்து உட்கார்ந்து இருப்பான். நான் தூங்கப்
போறேன்.. நாளைக்கு ஒரு டெலிவரி கேஸ் இருக்கு” என்று விட்டு அவளின் கண்ணீரை பார்க்க
பிடிக்காமல் வெளியே போய் விட்டார்.
முதல்நாள் வீட்டுக்கு
போனதோடு சரி அதன் பிறகு அவரின் வாசம் எல்லாம் மருத்துவமனையில் தான். அவருக்கு
தனியாக அறை இருக்க தன் பொருள்களை எடுத்துக் கொண்டு வந்து விட்டார். ஏனோ அவருக்கு
ஏந்திழையாளையும் ராசசிங்கனையும் தனியாக விட்டு போக முடியவில்லை. அதையெல்லாம் அவர்
வெளியே காட்டிக் கொள்ளவே இல்லை.
ஆனால்
ஏந்திழையாளுக்கு தெரிந்து இருந்தது. மருத்துவர் போன பிறகு சிங்கனுடன் பேசிக்
கொண்டே அவனது கையை எடுத்து தன் வயிற்றில் வைத்துக் கொண்டாள்.
“நான் பேசுறது
எல்லாம் உங்களுக்கு கேட்குது... ஆனா சார் கண்ணை மட்டும் முழிக்க மாட்டேன்னு
பிடிவாதமா இருக்கீங்க...” என்று சொன்னவள், அவனின் காதோரம் இன்னும் சரிந்து,
“நெத்தி முத்தம்
குடுக்க மாட்டேன்னு என்கிட்டே என்ன பிடிவாதம் பிடிச்சீங்க இப்போ உங்க நெத்தியில
நான் முத்தம் முத்தமா வைக்கிறேன்.. உங்களால என்ன பண்ண முடியும்..” என்று சீண்டலாக
பேசியவள்,
“ரொம்ப பயமா இருக்கு
ங்க... உங்க நெஞ்சுல என்னை வச்சுக்கோங்க ப்பா.. எனக்கு எந்த பயமும் இருக்காது...
என் தனிமையை பார்த்து தானே முன்னாடி ஊட்டிக்கு என்னை தேடி வந்தீங்க. இப்பவும் நான்
தனியா தான் இருக்கேன். எழுந்து வாங்கங்க.. என்னவோ பாதுகாப்பு இல்லாத மாதிரியே
இருக்கு” என்றவளின் கண்ணீர் அவனது முகத்தில் தெரித்தது.
“எப்போ கண் முழிச்சு என்னை பார்ப்பீங்க சிங்கன். ஏற்கனவே என் அப்பாவுக்கும்
பெரியப்பாவுக்கும் சந்தேகம் வந்திடுச்சு போலங்க.”
Comments
Post a Comment