ATHTHIYAAYAM 47
மாலை நேரம் போல
மருத்துவர் வந்து ஏந்திழையாளை செக் செய்ய,
“டாக்டர் நான் அவரை
பார்க்கலாமா?” என்று தவிப்புடன் கேட்டாள்.
“இங்க பாரு நீ ரொம்ப
க்ரிட்டிக்கலா இருக்க பொண்ணே. கட்டிலை விட்டே எழுந்திரிக்க கூடாது. ஏன்
புரிஞ்சுக்க மாட்டிக்கிற. உன் குழந்தைக்கு அது ரொம்ப பெரிய ஆபத்த போயிடும். முதல்ல
உன் பிள்ளையை கவனி. பிறகு உன் புருசனை பார்க்கலாம். கொஞ்சம் பொறுமையா இரு நீ”
என்று சொல்லி விட்டு வெளியே நின்று இருந்த அவளின் தாயிடமும் தமையனிடம் சில சொற்கள்
பேசிவிட்டு போய் விட்டார்.
“என்னால பொறுமையா
இருக்க முடியலையே” என்று கண்களில் நீர் வடிய படுத்து இருந்தவளுக்கு மனம் எங்கும்
ராசசிங்கனின் நினைவே ததும்பி இருந்தது.
படுக்கையை சற்றே
குறுங்கண் ஓரம் நகர்த்தி போட்டு வெளியே வேடிக்கை பார்க்க, அப்பொழுது தான்
கவனித்தாள். அந்த மருத்துவமனையை சுற்றிலும் காட்ஸ் நிறைய பேர் இருப்பதை. இவர்கள்
எல்லோரும் அவளின் தந்தையிடம் வேலை பார்ப்பவர்கள்.
“கடவுளே” என்று
எண்ணிக் கொண்டவளுக்கு கொஞ்சம் நஞ்சம் இருந்த நம்பிக்கையும் வற்றிப் போனது.
எப்படி இவங்க
எல்லோரையும் மீறி அவரை காப்பாத்தி இருந்த இருந்து கூட்டிட்டு போவேன் என்று கலங்கினாள்.
போதாதற்கு பக்கத்திலே
அன்னையும் தமையனும் வேறு. இரவு பொழுதாவது பார்க்கலாம் என்றால் அதற்கும் வழி
இருக்காது போலையே என்று கலங்கி நின்றாள்.
எட்டு மணி ஆகவும்
அவளுக்கு டான் என்று உணவு வர அவளுக்கு உதவி செய்தார் தேவகி. உண்டுவிட்டு
அமரப்போனவளை அழுத்தி கூட அமரக்கூடாது என்று ஊழியர்கள் எச்சரிக்க வேறு வழியில்லாது
படுக்கையை தலை புறம் மட்டும் உயர்த்தி போட சொல்லி படுத்துக் கொண்டாள்.
“இவ்வளவு
கட்டுக்காவல் இருக்கே... இதை எல்லாம் எப்படி தாண்டி அவர பார்ப்பேன். ஒருவேளை
என்னால அவரை பார்க்கவே முடியாதா...?” என்று எண்ணியவளுக்கு நெஞ்செமெல்லாம் வலியில்
சுறுங்கிப் போனது.
நெஞ்சை அடைப்பது போல
இருந்தது. ராசசிங்கனின் காட்டு தேக்கு உருவம் கண்ணில் எழ கண்கள் கலங்கிக் கொண்டு
இருந்தது.. அதை தன் குடும்பத்துக்கு தெரியாமல் மறைத்துக் கொண்டவளுக்கு அவனுடன்
வாழ்ந்த நினைவுகள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுக்க அந்த இனிமையான
நினைவுகளில் தொலைந்துப் போனாள்.
முதல்முறையாக அவனை
பார்த்தது, அடுத்த சந்திப்பு அத்தனை பேரின் கட்டு காவலையும் மீறி தன்னை சிறை
எடுத்தது என எல்லாம் வர,
“ரொம்ப தைரியம் தான்
இவருக்கு.. எப்படி இவ்வளவு தில்லா இருக்கிறாரு” என்று அவனது செயலில் இருந்த
தீரத்தில் மனம் மயங்கினாள் புதிதாக.
“என்னவோ எல்லோரும்
சொல்றாங்க காதல் அது இதுன்னு. ஆனா இந்த மனுசன் இத்தனை மாசம் கூட வாழ்ந்தும் வாயையே
திறக்கவில்லை. அப்போ நான் யாராம். என்னை தவிர எல்லோருக்கும் தெரிஞ்சு இருக்கு.
சரியான கல்லு பாறை.. அவரோட மயக்கம் தீர்ந்துடனும்.. தீர்ந்த பிறகு அவரது சட்டையை
பிடிச்சு கேள்வி கேட்கணும்...” என்று அவனது நினைவிலே மூழ்கினாள்.
“பாப்பா... பாப்பா”
என்று அன்னையும் தமையனும் மாற்றி மாற்றி அழைக்க “ஹாங்” என்று முழித்தாள்.
“என்ன யோசனை
பாப்பா... உன் உடம்பு பூரண குணமாகும்.. கவலைப்படாத.. நாங்கல்லாம் இருக்கோம்ல
அப்படி எல்லாம் எதுவும் ஆகிடாது.. பயப்படாத தங்கம்” என்று அன்னை அவளின் நிலையை
கண்டு பரிதவிக்க,
“இல்லம்மா..
அதெல்லாம் எதுவும் இல்லை” என்று அவள் தடுமாறினாள்.
“பாப்பா இங்க விசிட்டர்ஸ் யாரும் இருக்க கூடாதாம்... ரூம் கேட்டு
பார்த்தேன். இந்த பில்டிங்ல எந்த விஐபி அட்டேன்டரும் இருக்க கூடாதாம். ஏன்னா இங்க
அனுமதிக்கப் பட்டு இருக்கிறவங்க அத்தனை பேரும் ரொம்ப முக்கிய ஆட்களாம். சோ
பக்கத்து பில்டிங்கல தான் ரூம் தருவாங்களாம். அதனால நானும் அம்மாவும் அங்க
தங்குறோம். வீட்டுல எல்லோரும் உன்னை பார்க்கணும்னு சொல்லி ஒரே அடம். நான் தான்
நாளைக்கு பார்த்துக்கலாம்னு சொல்லி அமைதி படுத்தி வச்சி இருக்கேன். நாளைக்கு
அவங்களோட வந்து உன்னை பார்க்கிறோம். நீ மனசுல எதையும் வச்கிக்காம நல்லா படுத்து
தூங்கு. உனக்கு ஒண்ணுன்னா கண்டிப்பா அண்ணன் முன்னாடி நிற்பேன்” என்று அவன் சொல்ல
அதுவரை பொதுவாக கேட்டுக் கொண்டு இருந்தவள் கடைசி வரியில் அதிர்ந்து விழித்தாள்.
“அண்ணா” என்று அவள் திகைக்க,
“உன்னை யாரும் தொந்தரவு செய்யாம பார்த்துக்குவேன். நீ நிம்மதியா இரு..
உனக்கு எப்பவும் இந்த அண்ணன் இருப்பேன். எதுவுமே உன் விருப்பத்தை வச்சு தான் இந்த
அண்ணன் செயல்படுவேன். அதனால கவலை படாத” என்று அவன் சொல்ல இன்னும் திகைத்துப்
போனாள்.
என்ன திடிர்னு இவன் இப்படி எல்லாம் பேசுறான் என்று ஏந்திழையாள் திகைக்க,
“என்னடா ஏதேதோ பேசுற” தாய் கேட்க,
“ஒன்னும் இல்லம்மா நீ வா” என்று அவரை அழைத்துக் கொண்டு போய் விட்டான்
யுகேஷ்.
யுகேஷ் சொன்னதை கேட்டவளுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் தன் கூட இருப்பதாக
சொல்ல அந்த தனிமையான நிலைக்கு பெரும் ஆறுதாலாக அமைய அதுவரை இருந்த இறுக்கம்
தளர்ந்து சரிந்துப் படுத்துக் கொண்டாள்.
அவர்கள் எல்லோரும் கிளம்பிய பிறகு நிம்மதியை உணர்ந்தவள் சட்டென்று அந்த
யோசனை தோன்றியது...
இரவு கவிழ்ந்து முற்றிலும் சந்தடி நின்றுப் போகும் நேரத்துக்காக
காத்திருக்க ஆரம்பித்தாள் இழையாள். டியூட்டி நர்ஸ் பன்னிரண்டரை போல வந்து செக்
செய்து விட்டு போக தூங்குவது போல படுத்துக் கொண்டாள்.
மெது மெதுவாய் காத்திருந்து இரவு ஒரு மணிக்கு வெளியே வந்தாள் இழையாள்.
ஏற்கனவே அந்த பில்டிங் முழுக்க சைலன்ட்ஸ் தான். இதுல இரவு கவிழ சொல்லவே வேண்டாம்.
முற்றிலும் டிம் லைட்டில் பெரும் அமைதியை சூழ்ந்து இருந்தது.
ஒவ்வொரு தளமா போய் பார்க்கணுமே என்று யோசித்தவள் அந்த கட்டிடத்தின் ப்ளூ
பிரிண்ட் ஒவ்வொரு தளத்தின் ரிஷப்ஷனிலும் இருந்தது நினைவுக்கு வர வேகமாய் அவ்விடம்
நோக்கி சென்றாள்.
எமேர்செஞ்சி வார்ட் எங்க இருக்கிறது என்று டிம் வெளிச்சத்தில் தேட மிகவும்
கடினமாக இருக்க, சட்டென்று தன் போனை ஆன் செய்து லைட் அடித்து பார்த்தவளுக்கு இவள்
இருந்த தளத்துக்கு மேல் தளத்தில் தான் எமெர்ஜென்சி வார்டு இருப்பதை கண்டுக்
கொண்டவள்,
வேகமாய் லிப்ட்டை நோக்கி பயணித்தாள்.
தன் வயிற்றில் கையை வைத்து,
“டேய் சிங்கக்குட்டி உன் அப்பாவை பார்க்க போறோம்... உனக்கு ஒன்னும்
ஆகக்கூடாது.. ஸ்ட்ராங்க இருடா. எனக்கு நீயும் வேணும். உன் அப்பனும் வேணும். அதனால
எந்த சேதாரம் வந்தாலும் நீ தாங்கி தான் ஆகணும் சரியா?” என்று பிள்ளையிடம் பேசியவள் சத்தமில்லாமல் லிப்ட்டுக்குள் ஏறி மேல்
தளத்தின் பொத்தனை அழுத்தினாள்.
நெஞ்சமெல்லாம் படபடவென்று அடித்துக் கொண்டது. வயிற்றில் வலி எதுவும்
இருக்கவில்லை. அதனால் துணிச்சலாகவே தன் கணவனை தேடி போனாள். வலி இருந்தால்
கண்டிப்பாக அது குழந்தைக்கு ஆகாது என்று மருத்துவர் எச்சரித்து இருந்தார்.
லிப்ட் நிற்க அச்சத்துடனே அந்த தளம் முழுக்க பார்வையை ஓட்டினாள்.
ரிஷப்ஷனில் இருந்த நர்ஸ் தலை கவிழ்ந்து நன்றாக தூங்கிக்கொண்டு இருக்க, இது தான்
சமயம் என்று எமெர்ஜென்சி வார்டு நோக்கி சந்தடி எதுவும் செய்யாமல் நடந்துப் போனாள்.
வார்டு கதவு சாத்தி இருக்க, அதை சத்தம் வராமல் மெல்ல திறந்துக் கொண்டு
உள்ளே நுழைந்தாள். உள்ளே நிறைய அறைகள் இருக்க அயர்ந்துப் போனாள். இந்த வேலை
செய்யவே அவளால் முடியவில்லை. இனி ஒவ்வொரு அறையாக தன்னவனை தேட வேண்டும். மனதில்
இருந்த வலு அவளை செயல்பட வைத்தது.
அதற்கு முன்பு நர்ஸ் டியூட்டி டாக்டர்ஸ் அனைவரையும் ஒரு பார்வை பார்த்தாள்.
அனைவரும் தூக்கத்தில் இருக்க இவளுக்கு மிக வசதியாகிப் போனது.
ஒவ்வொரு அறையாக திறந்து பார்த்தாள். ம்ஹும் அவளின் தேடலுக்கு உரியவன்
மட்டும் சிக்கவே இல்லை. கடவுளே இன்னும் ஒரே ஒரு அறை தான் மிச்சம் இருக்கிறது.
“அந்த ஒன்றில் என்னவன் இருக்க வேண்டும்...” மனதில் இருந்த தைரியத்துடன்
கதவை திறந்துக் கொண்டு உள்ளேப் போனாள் இழையாள். நெஞ்சமெல்லாம் இருந்திருந்த வாக்கில் படபடவென்று
அடித்துக்கொண்டது.
நாவெல்லாம் வறண்டுப் போனது போல ஆனது. அவளின் உள்மனம் கூக்குரல் எழுப்ப,
“இது நிச்சயம் என்னவன் தான்” என்று ஆழ்மனம் அடித்துக் கூற மெல்ல அடி
எடுத்து அங்கு கட்டிலில் படுத்து இருந்த உருவத்தை நெருங்கினாள்.
கொஞ்ச தூரம் போன உடனே கட்டிலில் படுத்து இருந்த உருவத்தின் முகம் தெளிவாக
தெரிய பார்த்த நொடியிலே பக்கென்று ஆனது அவளுக்கு.
ஆம் அங்கு படுத்து இருந்தவன் ராசசிங்கன் தான். ஆனால் நெற்றியில் அடிபட்டு
இரத்தம் உறைந்து போய் இருந்தது. முகம் எங்கும் சின்ன சின்னதாய் ஒரு கீறல்
இருந்தது.
ஏன் என்று எண்ணும் பொழுதே முணுக்கென்று கண்களில் நீர் நிறைந்துப் போனது.
கொஞ்சமும் அசைவின்றி படுத்து இருந்தவனை கண்டு மூச்சடைத்துக் கொண்டு வந்தது.
ஒரு நேரமாவது அமைதியா இருந்து இருப்பானா.. எவ்வளவு ஓட்டம் கால்களில் சக்கரம்
கட்டிக் கொள்ளாத குறையாக எவ்வளவு ஓட்டம்... இன்னைக்கு அப்படி எந்த அவசரமும்
இல்லாமல் ஓய்ந்து போய் எதுவும் நினைவில் இல்லாமல் தன் நினைவே இல்லாமல் படுத்து
இருந்தவனை கண்டு விம்மல் தெரித்தது.
மெல்ல அவனை இன்னும் நெருங்கிப் போனாள்.
அவனது முகத்தை தன் விரல்களால் வருடி விட, பட்டென்று கதவு திறக்கும் சத்தம்
கேட்டது. அதிர்ந்துப் போனவள் எச்சில் விழுங்க உள்ளே வந்த டாக்டரை பார்த்தாள்.
கீர்த்தியின் அம்மா தான் வந்து இருந்தார்.
“ஏன் பொண்ணே நான் அவ்வளவு தூரம் சொல்லியும் நீ இப்படி வந்து இருக்க.. நீ
என்ன பெரிய சூப்பர் உமனா. உனக்கு உன் கண்டிஷன் தெரியுமா? தெரியாதா? இப்படி தான் ரிஸ்க் எடுப்பியா நீ?” என்று அவர் வந்த உடனே காய்ச்சி எடுக்க,
“ப்ளீஸ் டாக்டர் எதுவும் சொல்லாதீங்க.. எனக்கு அவரை பார்க்கணும். அவ்வளவு
தான். என் தவிப்பு என் பிள்ளைக்கும் இருக்கும். அவன் எதுவும் ஆக மாட்டான். ஏன்னா
அவன் ராசசிங்கனின் மகன். இவருக்கு இருக்குற அதே கட்ஸ் அவனுக்கும் இருக்கும்”
என்றவளை என்ன செய்வது என்று பார்த்தார்.
“உன் பாசத்துல தீயை வைக்க...” என்று எரிந்து விழுந்தார்.
“டாக்டர்... அவரு எப்போ கண் முழிப்பாரு..” என்று அவனுக்கு அருகில் ஏறி
அமர்ந்துக் கொண்டவள் அவனின் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு அவனை
பார்த்துக் கொண்டே கேட்டாள்.
“ம்ம் காலையில கண் முழிப்பான்... ஏன்னா அவன் தூக்கம் வரலன்னு தூக்க
மாத்திரை போட்டு தூங்குறான் பாரு” என்று அவர் கடுப்படிக்க,
“ஏன் டாக்டர் இப்படி எல்லாம் பேசுறீங்க.. அவரே பாவம்..” என்று ஏந்திழையாள்
சொல்ல,
“பொண்ணே” என்று பல்லைக் கடித்தார்.
“சரி நீங்க எதுவும் சொல்ல வேணாம்” என்று சொல்லியவள் அங்கு நின்றவரை அதன்
பிறகு கண்டுக்கவே இல்லை. அவளின் மொத்த கவனமும் அவளின் கணவனிடம் மட்டும் தான்
இருந்தது.
Comments
Post a Comment