ATHTHIYAAYAM 48
“சரி நீங்க எதுவும் சொல்ல வேணாம்” என்று சொல்லியவள் அங்கு நின்றவரை அதன்
பிறகு கண்டுக்கவே இல்லை. அவளின் மொத்த கவனமும் அவளின் கணவனிடம் மட்டும் தான்
இருந்தது.
“ஏங்க இங்க உங்க பிள்ளை என்ன சேட்டை எல்லாம் செய்யிறான் தெரியுமா? உங்களை இப்பவே பார்க்கணுமாம். உங்களை பேச சொல்லி என்னை எட்டி
உடைதைக்கிறான் தெரியுமா? எழுந்து வந்து அவனை என்னன்னு கேளுங்க.. அவனோட அக்கப்போரு
தாங்க முடியல.. நீங்க எப்படி என்னை உருட்டி மிரட்டுனீங்களோ அதை விட அதிகமாக என்னை
படுத்தி எடுக்கிறான்” என்று சொன்னவள் அவனின் ஒரு கையை எடுத்து தன் உடையை விலக்கி
வெற்று வயிற்றில் வைத்தாள்.
உள்ளே துடித்த உயிர்
அவனையும் உணரவைத்ததோ என்னவோ மெல்ல அவனின் கையில் லேசான நடுக்கம். அதை
உணர்ந்தவளுக்கு விழிகளில் நீர் ஊற்றெடுத்தது... அவனது அசைவை மன்ப்பூர்வமாக
உணர்ந்து அதிர்ந்தவள் “டாக்டர்” என்று அலறினாள்.
“என்னம்மா?” என்று
அவர் பதறிப் போய் அவளின் அருகில் வந்து கேட்க,
அவனது கையை
பேச்சுகலற்று சுட்டிக் காட்ட, அவரின் விழிகளில் வியப்பு முகிழ்த்தது.
“அமேசிங்
ஏந்திழையாள்” என்றவருக்கு குரல் கரகரத்துக் கொண்டு வந்தது.
“டேய் சிங்கா” என்று
அவர் அவனிடம் பேச எந்த ரியாக்ஷனும் அதன் பிறகு குடுக்கவே இல்லை. ஏந்திழையாளும்
அன்று இரவு முழுவதும் எவ்வளவோ மூச்சு போட்டும் ராசசிங்கனிடம் வேறு எந்த
ரியாக்ஷனும் எழவே இல்லை.
மரக்கட்டை போல
போட்டது போட்டபடியே இருந்தான். அவனது கையை எடுத்து ஆயிரம் முறை அவளின் வயிற்றில்
வைத்து இருப்பாள் அவனின் மனைவி. ம்ஹும் அவனிடம் நோ ரியாக்ஷன்.
“உங்க மகன் என்னை
படுத்துறான்... நீங்க என்னன்னு கேளுங்க” என்று சொன்ன வாசகத்தையே ஐநூறு முறை சொல்லி
இருப்பாள். ஆனால் ராசசிங்கனிடம் எந்த உணர்வுமே வெளிப்படவே இல்லை.
மிகவும் ஏமாந்துப்
போனாள்.
“டாக்டர் அவரை
எழுந்துக்க சொல்லுங்க... எனக்கு அவரு வேணும். எனக்கும் என் பிள்ளைக்கும் அவரை
விட்டா வேறு யார் இருக்கா? அவரு தானே எங்களுக்கு எல்லாம்... அவரு தானே எங்களை
பார்த்துக்கணும். எங்களை சுத்தி என்ன ஆபத்து இருக்குன்னு தெரிஞ்சும் இப்படி வந்து
படுத்துக்கிட்டாரு பாருங்க... அவரை எழுந்து என்னை முறைச்சு பார்க்க சொல்லுங்க
டாக்டர்” என்று அவரை கட்டிக் கொண்டு அழுதவளை பார்த்து அதிர்ந்துப் போனார்.
மிகப்பெரிய கூட்டுக்
குடும்பத்தை உறவாக வைத்துக் கொண்டு யாருமே இல்லை என்று சொன்னவளை கண்டவருக்கு திருமணத்துக்கு
சில நாள்கள் இருக்க ராசசிங்கன் முதல் முறை இவளை பத்தி அவரிடம் சொன்ன சொல் கண் முன்
வந்தது.
“என் காதல் அவளுக்கு
மட்டும் தான் டாக்டர். என் வறண்டுப் போன வாழ்க்கையை மாத்த அவளால மட்டும் தான்
முடியும். அவ என்னோட உயிர்.. அது உங்களுக்கு இப்போ புரியாது... போக போக நாங்க
வாழ்கிற வாழ்க்கையை பார்த்து நீங்களே புருஞ்சுக்குவீங்க. அவ அன்பு எனக்கு மட்டும்
தான். ஒட்டு மொத்தமா என்னை மட்டும் தான் உறவா நினைப்பா. நான் மட்டும் தான் அவ
உலகமா நினைச்சு வாழுவா. என் அன்புக்கு தகுதியான ஒரே ஒருத்தி அவ மட்டும் தான்
டாக்டர். சோ எங்க கல்யாண வாழ்க்கை நல்லபடியா தான் அமையும்” என்று அன்றைக்கே சொல்லி
சொன்னான் அவரிடம்.
அதை கண் முன்
இப்பொழுது மெய்பித்துக் கொண்டு இருந்தாள் ஏந்திழையாள். இத்தனைக்கும் ராசசிங்கனின்
காதல் அவளுக்கு கிடைக்க கூட இல்லை. ஆனாலும் அவன் மீது அவள் கொண்டுள்ள காதலின்
வீரியத்தை நன்றாக உணரமுடிந்தது அவரால்.
“நீ சொன்னது தான் சரி
தான் சிங்கன். ஆனா அவளோட முழு காதலை அனுபவிக்க அனுபவிக்காம இப்படி படுத்து கிடந்தா
எப்படிடா... அவ உன்னை நினைச்சே தேய்ந்து போயிடுவா போல... நீ மீண்டு வரணும் சிங்கா”
என்று தன்னை மீறி வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு அவர்களுக்கு தனிமை கொடுத்து
விட்டு போய் விட்டார். அதன் பிறகு யாருமே அங்கு வந்து அவளை தொந்தரவு செய்யவில்லை.
விடியும் வரை அவளின்
கணவன் அருகில் தான் அவள் இருந்தாள். பேசாத பேச்செல்லாம் பேசி ஆழ்மயக்கத்தில்
இருந்தவனை தன்னால் முயன்றவரை எழுப்ப முயற்சித்துக்கொண்டு இருந்தாள். அவள் அவனிடம்
யாசித்த நெற்றி முத்தத்தை இவள் தாராளமாக வாரி வழங்க அதற்கும் எந்த உணர்வையும்
வெளிப்படுத்தவே இல்லை அவன்.
போட்டது போட்டபடி
அப்படியே கிடந்தான். அவனை அப்படி பார்க்க பார்க்க நெஞ்சு கதறிப் போனது.
“ஒரு நாள் ஒரு பொழுது
கூட இப்படி ஓய்ந்து போய் நான் பார்த்தது இல்லையே... இப்போ இபப்டி வந்து
படுதுக்கிட்டீங்களே.. ஊருக்கே ஆலமரமா நின்ன உங்களுக்கா இப்படி ஒரு நிலை வரணும்..”
என்று கலங்கியவளுக்கு மயக்கம் வருவது போல இருந்தது.
முயன்று கண்களை தட்டி
தட்டி தன்னை சமாளித்துக் கொண்டவள் ஒரு கட்டத்துக்கு மேல் முடியாமல் கர்பகாலத்து
மயக்கம் அவளை சுழட்டி எடுக்க ஆரம்பித்தது.
“சீக்கிரம் எழுந்து
வாங்க ங்க... என்னால முடியல... என்னை ஏந்த நீங்க வேணும்” என்றவள் அவனின் காய்ந்து
போன இதழ்களில் தன் இதழ்களை புதைத்தவள் வலிக்க வலிக்க அவனது இதழ்களை கவ்வி கடித்து
தன் உள்ளத்து வேதனையை கொட்டியவள் அப்படியே அவனது முகத்தோடு முகம் வைத்து மயங்கிப்
போனாள்.
அதிகாலை வேலை வந்த
மருத்துவர் அவளின் நிலையை கண்டும் மனம் நொந்தவர் அவளை ஸ்ட்ரக்சரில் வைத்து அவளுடிய
அறைக்கு அவளை மற்றவர் பார்க்கும் முன்பு கூட்டிக்கொண்டு செல்ல பணித்தார்.
எட்டு மணி போல வீட்டு
ஆட்கள் ஏந்திழையாளை பார்க்க வர அவள் மயக்கத்தில் இருப்பதாக சொல்லி இரவு தூங்காத
தூக்கத்தை எல்லாம் சேர்த்து வைத்து தூங்க அவளை பூரண ஓய்வு எடுக்க விட்டார்
கீர்த்தியின் அம்மா.
“என்ன ஆச்சு டாக்டர்”
என்று யுகேஷ் பதற,
“ஒன்னும் இல்ல...
அவங்களுக்கு அந்த கட்டினால நேத்திக்கு ஹெவியா ப்ளட் லாஸ் ஆனது இல்லையா அதனால வந்த
சின்ன மயக்கம் தன். அதோட புது இடம்ன்றதுனால மேபி நைட் தூங்காம இருந்து இருக்கலாம்.
இப்போ தூங்குறாங்க. சோ அவங்களை டிஸ்ட்ரப் செய்யாதீங்க. நர்ஸ் பேஷன்ட் முழித்ததும்
உங்களுக்கு சொல்லுவாங்க. நீங்க பிறகு போய் பார்க்கலாம்” என்று சொல்லி விட்டு
வீட்டுக்கு போய் விட்டார்.
அவருக்கு பதிலாக தன்
தோழியை பார்த்துக்க சொல்லி சொல்லி விட்டு வீட்டுக்கு போய் விட்டார்.
நேற்றிலிருந்து அவர் வீட்டுக்கே போகவில்லை. ஏந்திழை என்ன செய்வாள் என்று தெரியாமல்
அதோடு அவளை அப்படியே விட மனமில்லாமல் அங்கேயே இருந்தார்.
இப்பொழுது தான்
வீட்டுக்கு கிளம்பி இருந்தார்.
வீட்டுக்கு வந்தவர்
இரண்டு மணி நேரம் நன்றாக தூங்கி எழுந்து மருத்துவமனைக்கு விரைந்தார். எந்த
அசம்பாவிதமும் இல்லாமல் அவரவர் இடத்தில் அவரவர் இருந்தார்கள். குறிப்பாக
ஏந்திழையாள் மற்றும் அவளின் குடும்பமும்.
அவளின் நிலை
யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டார் அந்த மருத்துவரும்.
ப்ளீடிங் ஓரளவு
ஸ்டாப் ஆனது என்றாலும் இயற்கை உபாதை வரும் பொழுது மட்டும் சில ட்ராப்ஸ் வர அதை
கீர்த்தி அம்மா மத்தியம் வந்த உடன் சொன்னாள்.
“நீ கொஞ்சம் ரெஸ்ட்
எடு. அப்ப தான் இந்த சிக்கல் எல்லாம் தீரும். உன் புருசனை விட இப்போ நீ தான் க்ரிட்டிக்கலா
இருக்க இழை” என்றார்.
“தெரியுது டாக்டர்
ஆனா அவரை சுத்தி இருக்கும் ஆபத்தை நினைச்சா தான் அடிவயிறு கலங்குது... அதுக்குள்ள
அவரை மயக்கத்துல இருந்து எழுப்பனும்” என்றாள்.
---
“மாத்து மருந்து
குடுத்து பார்த்துட்டோம். வேல்ட் பேமஸ் டாக்டர்ஸ் கிட்ட எல்லோரிடமும்
கேட்டுட்டோம். அவங்களும் சில சஜஷன் குடுத்து இருக்காங்க... ஆனா நோ யூஸ்... இதுக்கு
மேல என்ன பண்றதுன்னு தெரியல. ஆனா ஒரு வழி இருக்கு” என்றார்.
“என்ன டாக்டர்” இவள்
ஆர்வமாக கேட்க,
“ஒரு மருந்து
வெளிநாட்டுல இருக்கு. ரொம்ப எமர்ஜென்சின்னா மட்டும் தான் அதை யூஸ் பண்ண முடியும்.
அதுவும் அது நூறு சதவீதம் ரிசல்ட் குடுக்குமான்னு தெரியல” என்றார்.
“எவ்வளவு செலவு
ஆனாலும் பரவாயில்லை டாக்டர்... அவரை எப்படியாவது காப்பாத்துங்க. அதன் மருந்தை இங்க
வரவைங்க ப்ளீஸ்” என்று அவள் கெஞ்சி கதற,
“எனக்கு பைசா எல்லாம்
ஒரு பொருட்டு இல்லை இழை” என்றார்.
“வேற எதுக்கு டாக்டர்
தயங்குறீங்க” என்றாள்.
“எல்லாம் உன் வீட்டு
ஆட்களுக்கு பயந்து தான்” என்றார்.
“நீங்க என்ன
சொல்றீங்க?” என்று அவள் அதிர,
“ம்ம் இந்த மருந்தை
வரவழைச்சா எப்படியும் உங்க வீட்டு ஆட்களுக்கு தெரிஞ்சிடும். அதோட நாமலே சிங்கனை
காட்டி குடுத்த மாதிரி ஆகிடும். அதுக்கு தான் யோசிக்கிறோம்” என்றார்.
“டாக்டர் அப்போ அவரை
காப்பாத்த முடியாதா?” விழிகளில் உயிரை தேக்கி வைத்து கேட்டவளை கண்டு பெருமூச்சு
விட்டவர்,
“வேற வழியில்லை..
ரிஸ்க் எடுத்து தான் ஆகணும்” என்றார் அவர்.
“அய்யயோ” என்று அவள்
கதற,
“ப்ச்
எல்லாத்துக்கும் பயப்படக் கூடாது இழை... வாழ்வோ சாவோ முயற்சி பண்ணாம பின் வாங்கக்
கூடாது” என்றார்.
“புரியுது டாக்டர்”
என்றவள் கண்ணீரை துடைத்துக் கொண்டு தீர்கமாக அவரை பார்த்து,
“நீங்க ஏற்பாடு
பண்ணுங்க டாக்டர்.. என்ன இடர் வந்தாலும் பார்த்துக்கலாம். இன்னும் எத்தனை நாளுக்கு
தான் அவங்களுக்கு பயந்துக்கிட்டு இவரை இப்படியே வச்சுட்டு இருக்கிறது.. நீங்க
சொல்ற மாதிரி வாழ்ந்தா நாங்க மூணு பேரும் ஒண்ணா வாழுறோம்... இல்லன்னா போற உயிர்
என் புருசனோடவே போகட்டும்.. நாங்க இல்லாத உலகத்துல எங்க பிள்ளையும் வாழவேண்டாம்” என்றாள்.
“ஹேய் பொண்ணே” என்று
அவர் அதிர,
“இது தான் என் முடிவு
டாக்டர்... வாழ்ந்தா ஒண்ணா வாழுறோம். இல்லன்னா அவரோடவே என் உயிரும் போகட்டும்.
நீங்க மேற்கொண்டு ஆகவேண்டிய வேலையை பாருங்க..” என்று கம்பீரமாக சொன்னவளை பார்த்து
அயர்ந்துப் போனார்.
“ரொம்ப தெளிவா முடிவு
எடுக்குற இழை. ஆனா ராசசிங்கனை தாண்டி உனக்கு வாழ்க்கை இருக்கு. குருட்டாம் போக்குல
விட்டத்துல பாய்ஞ்ச மாதிரி இருக்கக் கூடாது. அவனே இல்லன்னாலும் நீ வாழனும்” என்று
அவர் அழுத்திச் சொன்னார்.
Comments
Post a Comment