அத்தியாயம் 2


 

அத்தியாயம் 2

 

அலுவலக நேரம் கலகலப்புடன் முடிய வீடு வந்து சேர்ந்தாள். வீட்டில் நுழைந்த உடன் தனிமை மனதை அரைய சோர்வுடன் குளித்து விட்டு டிவியின் முன் வந்து அமர்ந்தாள். அமர்ந்தவளின் மூக்கில் முட்டை ப்ரெட்டின் வாசம் வர கடுப்பானது அவளுக்கு. அதிலும் கவனம் இல்லாமல் போக பால்கனியில் சென்று உலாவினாள்.

எப்போ தான் இந்த தனிமை மாறுமோ... ஒன்டியாவே இத்தனை வருசமும் ஓட்டியாச்சு... கல்லூரியில் கூட வீட்டு ஆட்களின் கெடுபிடியில் தனி அறைதான்.. இவள் எவ்வளவு சொல்லியும் யாரும் காது குடுத்து கேட்டது கிடையாது..

நட்பு வட்டம் இருந்தும் எல்லாமே ஆறு மணியோடு இல்லை என்றால் இரவு ஒன்பது மணியோடு சரி...

அவளை போல எல்லோரும் குடும்பத்தை விட்டு தனியாவா இருக்கிறார்கள். பொழுதுக்கும் இவளோடு இருக்க.. அவர்களுக்கு தான் அழகான கூடு இருக்கே...

சனி ஞாயிறு வெளியில் அலுப்பு தீர சுத்தினாலும் ஏண்டா இரவு பொழுது வருகிறது என்று அலுத்து போவாள். அந்த அளவுக்கு தனிமை அவளை வாட்டி வதைக்கும்..

ஒருவருக்கு தனிமை சுகம்.. சிலருக்கு தனிமை வரம்.. இன்னும் பலருக்கு தனிமை அதாவது அவர்களுடைய விருப்பம் இல்லாமல் கொடுக்க படும் தனிமை நரகம்.. இப்போது மஹி அனுபவிப்பது அந்த நரகத்தை தான்..

சில நிமிடம் சிந்தனையில் இருந்தவள்ம்ஹும் இதுக்கு மேல முடியாது.. பேச கூட ஆளில்லாம இதென்ன கொடுமைடா சாமி..” என்று சிலிர்த்து எழுந்தவள் வீட்டில் இருந்த இன்னொரு அறையின் கதவை உடைத்து விடுவது போல படபடவென தட்டினாள்.

மூடி இருந்த கதவு திறக்கவே இல்லை. தட்டிய படியே.. “இவன் மனசுல என்ன தான் நினைச்சுக்கிட்டு இருக்கான் நானும் போனா போவுதேன்னு விட்டா ரொம்ப தான் பண்ணிக்கிட்டு இருக்கான். ராஸ்கல் கதவு மட்டும் திறக்காம இருக்கட்டும் அப்புறம் இருக்கு இவனுக்கு கச்சேரிமுணுமுணுக்க

நான் என்ன நினைச்சா உனக்கு என்ன, நீ என்ன என்னை போனா போகுதேன்னு விடுறது.. நெஞ்ஜுரம் உனக்கு ஜாஸ்தி தான்..” என்ற சத்தம் வர,

வேகமாய் நிமிர்ந்து பார்த்தாள். பார்த்தவள் அப்படியே ஸ்தம்பித்து நின்றாள்.. எல்லாம் ஒரு நொடி தான் இருக்கும்.

யூ யூ நீ சரியான பிராடுடா.. ச்ச என்னை எப்படி ஏமாத்திட்ட, பாவி எவ்வளவு புலம்பி இருப்பேன். நீ என் மூஞ்சிலையே முழிக்காதடா..” என்று கோவமாய் அவனது வெற்று மார்பில் குத்தி குதித்தாள்.

ஹேய் என்னடி நினைச்சுக்கிட்டு இருக்க நீ... ‘டானெல்லாம் சொல்ற திமுரா..”

ஆமாண்டா திமுரு தான்.. அப்படி தான்டாடாபோடுவேன்.. இது ஒன்னும் அலுவலகம் இல்ல டா உன் கிட்ட பயபடுவதர்க்கு.. இது நான் தங்கி இருக்கும் வீடுடா..” என்றாள் சட்டமாய்.

நீ மட்டும் இல்லடி.. நானும் இங்க தான் இருக்கேன்என்று கோவமாய் பொங்கினான் ரிஷி..

அப்படியா எனக்கு தெரியாதே நீங்க இங்க இருந்தது... நீங்க மாத்தி வந்துட்டீங்கன்னு நினைக்கிறேன்... இது நான் மட்டும் குடியிருக்கிற வீடு.. அதனால நீ வெளியே போடாஎன்று பவ்யமாய் ஆரம்பித்து கோவமாய் முடித்தாள்.

கொழுப்புடி உனக்கெல்லாம்... உன் மூஞ்சில முழிக்க கூடாதுன்னு தானே நான் உன் வழிக்கே வரல பின்ன எதுக்குடி இப்போ வரிஞ்சி கட்டிக்கிட்டு சண்டைக்கு வரஎன்று ரிஷி அவளை காயபடுத்த, சட்டென்று தன்னிலை உணர்ந்தவள் வேகமாய் தன் அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக்கொண்டாள்.

முகத்துக்கு நேரான அவமானம்.. அவளால் தாங்க முடியவில்லை.. ‘இப்படி பேசுவதற்கு அவன் பேசாமலே இருந்திருக்கலாம்.. அவன் ஒதுங்கி தானே போனான் நான் தானே வலுகட்டாயமா அவனை தொந்தரவு செய்தேன்.. அப்போ இப்படியா பட்ட பேச்சை நான் கேட்டு தானே ஆகணும்..’

அலுவலகத்தில் திட்டுவதை இயல்பாக ஏற்றுக்கொண்டவளால் வீட்டில் இவன் திட்டுவதை அதுவும் அவளை ஒதுக்குவது போல பேசியதை அவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

விழிகளில் நீர் நிறைந்து போனது.. ‘ச்ச என்ன மாதிரியான வாழ்க்கை என்னோடது...’ என்று என்னும் போதே அவள் இருந்த அறையின் கதவு தட்டப்பட்டது.

அது யார் என்று தெரிந்தும் அவள் திறக்கவில்லை. தன்னுடைய எண்ணங்களிலே கிடந்தாள்.

மஹி கதவை திறடி...” என்ற அவனது குரல் செவியில் விழ.. அப்போது தான் அவன் டி என்று அழைப்பதே அவளுக்கு தெரிந்தது..

எந்த உரிமையில் இவன்டின்னு சொல்றான்.. நண்பனா இருக்க கூட இவனுக்கு தகுதி இல்லை.. என்று ஆவேசத்துடன் எழுந்தவள் கதவை திறந்து

இப்போ எதுக்கு கதவை தட்றீங்க.. அதுவும்.. ‘டின்னு வேற சொல்றீங்க.. நான் என்ன நீங்க வச்ச ஆளா..” கடுகாய் பொறிந்தவளை கண்டு

சும்மா உன்னை சீண்டி பார்த்தேன்டா..” என்று அவளிடம் சொல்ல, சொல்லிய மறு கணம்

எது டா சும்மா.. இல்ல எது சும்மான்னு கேக்குறேன்.. உன் கிட்ட வேலை பார்த்தா நீ என்ன வேணா சொல்லுவியா... இப்போ நான் சொல்றேன் எனக்கு உன்னை பிடிக்கல போடா வெளிய..” என்று கத்தினாள்.

அவளது கத்தலை கொஞ்சமும் காதில் வாங்கி கொள்ளாதவன் போல அவன் அங்கே நிற்க

போடான்னு சொல்றேன்ல போடாஎன்று அறையில் இருந்த சின்ன சின்ன பொருட்களை தூக்கி அவனை அடிக்க, அவனோ அவளின் குறியிலிருந்து தப்பி அவளை நெருங்க

கிட்ட வந்த செத்தடா..” என்று மேலும் மேலும் பொருட்களை அவன் மீது தூக்கி எறிந்தாள்.

அதில் ஒரு பொருள் அவனை பதம் பார்க்க இதுக்கு மேல் விடமுடியாது என்று எண்ணி ஒரே தாவாய் தாவி அவளை அடக்கினான்.

அவனது பிடியில் இருந்தவளுக்கு கோவம் மறைந்து அழுகை பிறந்தது.. 

விடுடா..” என்று சொல்லவே திக்கி திணறி போனாள் மஹி..

ஹேய் என்ன மா இது.. எதுக்குடா இந்த அழுகைஎன்று அவளை தேற்ற..

உங்களுக்கு பக்கத்து வீட்டு ஆளா கூட என்னை பிடிக்கல தானே... அதனால தானே என்கிட்டே உங்களை அறிமுகங் கூட படுத்திக்கல, சாரி நான் உங்களை தொந்தரவு பண்றேன்னு நினைக்குறேன். நான் வரேன்..” என்று தலை நிமிராமலே அழுகையுடன் சொல்லி அவனிடமிருந்து விலகி செல்ல, அவளை போக விடாமல் தடுத்து,

அலுவலகத்துல திட்டி திட்டி உன்னை எரிச்சல் பண்றதுனால நீ என்கிட்டே தோழமையா மூவ் பண்ண மாட்டன்னு நினைச்சேன்டா... அதனால தான் சாரிஎன்றான் வருத்தமாய்.

இல்ல நீங்க பொய் சொல்றீங்க... மூணு மாசம் ஒருத்தரை ஒருத்தர் தெருஞ்சுக்காம பேச்சு துணைக்கு கூட ஆளில்லாம போங்க ரிஷி..” என்று அழுதவளின் கைகளை பிடித்து என்ன சமாதானம் செய்வது என்று யோசிக்கும் போதே

தனிமைனா உங்களுக்கு என்னன்னு தெரியுமா ரிஷி.. இந்த பதினைந்து வருடமா நான் அனுபவிச்சுக்கிட்டு இருக்கேன்.. யாராவது தோழமையா என்னை பார்த்து சிரிக்க மாட்டாங்களா, பேச மாட்டாங்களான்னு ஏங்கிட்டு இருக்கேன். ஆனா நீங்க மூணு மாசம் ப்ச்.. ரொம்ப கஷ்டமா இருக்கு ரிஷி.. எத்தனை நாள் உங்க அறை கதவு திறக்காதான்னு பார்த்துக்கிட்டு இருப்பேன் தெரியுமா..

சத்தியமா எனக்கு இங்க தனியா உங்களோட இருக்குறதுல பயமே இல்ல, அப்பாடா துணைக்கு ஒரு ஜீவனாவது இருக்கேன்னு தான் எனக்கு தோணினது ஆனா நீங்க நான் யாருன்னு தெருஞ்சும் என்னை ஒதுக்கி வச்சது வேதனையா இருக்கு..

உங்க பொஷிசனுக்கும் என்னோட பொஷிஷனுக்கும் ஒத்து வராதுதான்.. ஆனா ஒரு சக மனுசியா நீங்க என்னை ட்ரீட் பண்ணி இருந்திருக்கலாம்.” என்றாள் வேதனையாக..

சாரிம்மா நீ இன்னைக்கு தட்டியது போல வந்த முதல் நாளே தட்டுவன்னு நினைச்சேன். அது தான் உன் குணமும் கூட.. ஆனா நீ தட்டவே இல்ல... உனக்கு ஒன்னு தெரியுமா நீ இன்னைக்கு தட்டுவ நாளைக்கு தட்டுவன்னு நினைச்சு நினைச்சு மூணு மாசம் உன் வருகைக்காக உன் நட்புக்காக நான் காத்திருந்தேன்என்றவனை நிமர்ந்து பார்த்தாள் வியப்பாய்..

நிஜமாவாஎன்றாள் கேள்வியுடன் பார்வையை கோர்த்து

என்ன பார்க்குற... எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்.. நீ பண்ற குறும்பு எனக்கு அவ்வளவு பிடிக்கும்.. ஆனா நீ தான் என் கிட்ட வர ரொம்ப தமாதமாக்கிட்டஎன்று அவளை குறித்து கை நீட்ட அவனின் கைகளை தட்டிவிட்டு

அது எனக்கு தயக்கமாய் இருந்துச்சு..” என்றாள் குனிந்த தலையுடன்.

எது உனக்கு தயக்கமா சரி தான் நான் நம்பிட்டேன்என்றான் கிண்டலாய்..

ப்ச் கிண்டல் பண்ணாதீங்க ரிஷி.. நிஜமாவே எனக்கு தயக்கமாய் இருந்துச்சுஅதை கேட்டு அவன் சிரிக்க

ஏய் என்ன ரொம்ப தான் சிரிப்பு... நானும் பெண் தான்.. எனக்கும் அச்சம் மடம் நாணம் அப்பறம் என்னவோ வருமே... பருப்பா... ச்சீச்சீ அது இல்ல, பயிறு ம்ஹும் அதுவும் இல்ல.. ரெண்டு சேர்த்தா போல வருமே... ஆங் ஞாயபகம் வந்திடுச்சு பயிர்ப்பு, பயிர்ப்பு எங்களுக்கும் இருக்குஎன்று சிலிர்த்து எழுந்தவளை கண்டு ரிஷிக்கு அப்படி ஒரு சிரிப்பு வந்தது. அவன் வாய் விட்டு சிரிக்க அதில் மூஞ்சை தூக்கி வைத்துக்கொண்டாள் மஹி..

அவளது அந்த செல்ல கோவத்தை இரசித்தவன் அவளின் மூக்கை பிடித்து ஆட்டிநீ ரொம்ப ஸ்வீட் மஹிஎன்றான்.

ஆமா... ரொம்ப ரொம்பஎன்றாள் அவனது வார்த்தையில் மகிழ்ந்து..

ம்ம் இப்படி சிருச்ச முகமா இரு..” என்றான் கனிவாய்..

ம்ம் சரிஎன்று மண்டையை ஆட்டியவள்

நீங்களும் இப்படி இயல்பா இருங்க.. எப்போ பாரு முல்லை மூஞ்சில கட்டுன மாதிரி இருக்காதீங்கஎன்றாள்.

அதில் அவன் முறைக்க

என்ன முறைப்பு.. இல்ல என்ன முறைப்புன்னு கேக்குறேன்.. பாருங்க ரிஷி.. இது வீடு. இங்க நீங்க ஜஸ்ட் பக்கத்து வீட்டுகாரவுங்க,  அப்போ என்ன பண்ணனும் நாம ஜாலியா சிருச்சு பேசணும் சரியா.. முக்கியமா இங்கவும் நான் மேனேஜெரா தான் இருப்பேன் அப்படின்னு கெத்து காட்ட கூடாது.. காட்டவே கூடாது சரியா..

அதுவும் இல்லாம இங்க அலுவலகத்தை பத்தி நினைக்க கூடாது.. அங்க நடந்ததுக்கு இங்க வந்து என்னை பழிவாங்க கூடாது.. அலுவலகம்னா அங்கனவே எல்லாத்தையும் மறந்துட்டு வந்துடனும்.. அதே போல அலுவலகத்தில் வீட்டை பத்தி நினைக்க கூடாது.” என்று கண்டிசன் போட்டவளை பார்த்து சிரித்து

ஆக மொத்தத்துல உன்னை எங்க வச்சும் நான் திட்ட கூடாது அதானே...” என்றான்.

அவனது தெளிவை கண்டு அசடு வழிந்தவள்ஆமா பாஸ்..” என்றாள் குழந்தை தனமான புன்னகையுடன்..

அவளது புன்னகை மனதை நிறைக்க

அப்போ நீ அலுவலகத்துல குறும்பு பண்ணாம இருக்கணும் சரியா..” என்றான் விடா காண்டனாய்..

அச்சோ அது என்னால முடியாதே..” என்றாள் சோகமாய்.

அவன் முறைக்கம்ம் வேணா கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணிக்கிறேன்என்றாள் பெரிய மனதுடன்.

உன்னை எல்லாம் திருத்தவே முடியாது மஹி..”

ஹிஹிஹி டேங்க்ஸ் ரிஷி..” என்று வழிந்தவளை கண்டு தலையில் அடித்துக்கொண்டு அவனது அறைக்கு திரும்ப மஹி வேகமாய் அவனது அறைக்குள் நுழைந்து சற்று நேரத்திற்கு முன் தன் மூக்கில் நுழைந்து இம்சை செய்த, அவன் செய்து வைத்திருந்த இரவு உணவான ப்ரெட் ஆம்லெட்டை எடுத்து மேசையின் மீது தாவி உட்கார்ந்து காலை ஆட்டியபடி சாப்பிட்டவளை கண்டு மனது நிறைந்து போனது ரிஷிக்கு..

ஏய் எனக்கும் கொஞ்சம் வைடி

ஐ அசுக்கு புசுக்கு அதெல்லாம் வைக்க முடியாதுஎன்று முழுவதும் சாப்பிட தொடர்ந்தவளை கண்டு சுத்தமாய் கோவம் வரவில்லை அவனுக்கு.

சரி தின்னு, ஆனா நான் சாப்பிட காயாவது வந்து வெட்டி குடு..”

அதெல்லாம் எனக்கு செய்ய வராதுஎன்றாள்.

சாப்புட தெரியுமாஎன்று பல்லை கடித்தான்.

அது தான் நேர்லயே பார்த்துக்கிட்டு இருக்கியே... இது கூடவா தெரியல உனக்குஎன்று அவனுக்கே அவள் பல்ப் கொடுக்க, ஆஆ என்று வந்தது ரிஷிக்கு.

இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல உனக்கு

எது ஓவரு இல்ல எது ஓவருங்குறேன்... இத்தனை நாள், இல்லல்ல இத்தனை மாசமா  என்னை விட்டுட்டு நீ மட்டும் வித விதமா சமைச்சி சாப்பிடியே அதுக்கு பேரு என்னங்க மேனேஜெர் மோரு(சாரு)....”

உண்மையா சொல்ட்டா நீ இந்த சாப்பாட்டுக்காகவாது வந்து கதவை தட்டுவன்னு நினைச்சேன் மஹிஎன்றான் உள்ளுர வருத்தத்தோடு..

அதை கேட்ட மஹி சட்டென்று மேசையில் இருந்து குதித்து கீழே இறங்கியவள் அவனை ஆழ பார்த்து

என்ன ஒன் சைட் லவ்வா..” நக்கலாய்

ஏன் இருக்க கூடாதா..” என்றான் அவளை விட அதிக கூரான பார்வையோடு

டேய் என்னை எல்லாம் கல்யாணம் பண்ணன்னு வை நீ உருபிட்ட மாதிரி தான்.. வெளங்கவே மாட்ட பார்த்துக்கஎன்று சிரிக்க

அவளது சிரிப்பை வலியுடன் பார்த்தவன் அவள் கவனிக்கும் முன் தன்னை சரி செய்துக்கொண்டு

அதை நான் பார்த்துக்குறேன்.. நீ ரொம்ப கவலை படதா..” என்றான்.

தோடா.. நல்லது சொன்ன யாருப்பா இந்த காலத்துல கேக்குறா.. நீ படனும்னு இருக்கு... பெறகு உன் தலை எழுத்து

அப்போ உனக்கு சம்மதம் இல்லயா..“

அட பாவி நான் எங்கடா சம்மதம் சொன்னேன்.. உன் வருங்காலம் எப்படி இருக்கும்னு ஜோசியம் தாண்டா சொன்னேன் ரிஷிபதறி போய்

அந்த வேலையெல்லாம் உனக்கு வேணாம். சரி சொல்லு எஸ் ஆர் நோ

ம்ம் நீ நல்ல புள்ள தான். அதுக்காக மட்டும் ஓகே சொல்ல முடியாது.. நல்லா சமைக்குற மூணு நேரம் சுட சுட ஆக்கி வேற போடுவ அதுக்காகவாது உனக்கு சம்மதம் சொல்லலாம் தான்.. ஆனா பாரு எனக்குன்னு ஒரு கொள்கை இருக்குஎன்று என்றவளை பார்த்து பல்லை கடித்தவன்

சரி சொல்லு அப்படி என்னங்க மேடம் உங்க கொள்கை..” என்றான் கடுப்புடன்..

அது என்னன்னா

ம்ம்

கல்யாணமே செஞ்சுக்க கூடாதுன்னு எனக்குள்ள ஒரு கொள்கை வச்சு இருக்கேன்என்றாள் குறும்பாய்.

அவளது குரும்பை உணர்ந்தவன்ஏன் அப்படி ஒரு கொள்கை

எல்லாம் ஒரு நல்லா எண்ணம் தான். என்னால ஒரு நல்லவன் வாழ்க்கைய கெட்டுட கூடாதேன்னுஎன்று சொல்ல

அடேயப்பா பாரேன் உனக்குள்ள கூட கொஞ்சம் நல்ல பொண்ணு ஒழுஞ்சு இருக்கா பாரேன் அதிசயம் தான்என்று அவள வார

ரிஷிஷி....” அவள் பல்லை கடிக்க

ஹஹஹாஎன்று சிரித்து அவளை மேலும் கடுப்பாக்க

டேய் எரும

எஸ் கொரங்கேஎன்றான் இவன்.

டேய் என்னை பார்த்தா கொரங்கு போலவா இருக்குஅங்கிருந்த கண்ணாடியில் தன் பின் பக்கத்தை பார்க்க

என்ன வாலை காணமேன்னு பார்க்குறியாஎன்று அவன் கண்டு பிடிக்க

ச்சீச்சீ அப்படியெல்லாம் எதுவும் இல்லையேஈஈஈ என்று பல்லை காட்ட, ரிஷி மனம் விடு சிரித்தான். அதில் மஹியின் மனது வாஞ்சையாய் அவனது புன்னகையை பதிவு செய்துக்கொண்டது..


தொடரும்...

Comments

உயிருருக உன் வசமானேன்..