அத்தியாயம் 7

அத்தியாயம் 7

 

காமினியை அழைத்தவன் அவளுக்கு சில வேலைகளை சொல்லி அதை செய்ய வைத்தான். எல்லா விவரங்களையும் தொகுத்து முடித்தவன் இதெல்லாம் கணிணியில் ஏற்றி சேமித்த தகவல்கள் அடுத்தடுத்து வரும்படி மஹியை செய்ய சொன்னான்.

காமினியை அழைத்து சர்குலர் ஒன்றை ரெடி பண்ண சொல்லி அதை அனைவருக்கும் அனுப்பிவிட சொன்னவன் முக்கிய பொறுப்பாளர்களுக்கு அவனே ஈமெயில் அனுப்பினான்.

மெயில் அனுப்பி சிறிது நேரத்திலே மஹி மட்டும் ரிஷியுடன் அமர்ந்து இருந்த வேலையில் புயல் போல அந்த அறைக்குள் கதிரும் அவனுக்கு உதவியவர்களும் வந்தார்கள் பெருகிய கோவத்தோடு.

ரிஷி உன் மனசுல நீ என்ன நினைச்சுக்கிட்டு இருக்குற.. நீ இன்னைக்கு வந்தவன் ஆனா நான் பல வருசமா இந்த நிறுவனத்துல வேலை பார்த்துக்கிட்டு வரேன். நீ என் மேலேயே புகார் குடுத்து இருக்க.. இதெல்லாம் நல்லதுக்கு இல்ல.. யுனியன் வைஸ் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும் பார்த்துக்க..” என்றான் மிரட்டலாய்.

உனக்கு இருக்கிற அதே பவர் எனக்கும் இருக்கு மிஸ்டர். நீ பல வருசமா இங்க இருக்கலாம். ஆனா நிறைய தவறு செஞ்சு இருக்கியே.. அதை யுனியன்ல சொன்னேன்னா உனக்கு தான் பிரச்சனை. எது வந்தாலும் நான் சந்திக்க தயார். அதனால உன் மிரட்டலை என் கிட்ட காட்டாத.. முக்கியமா என் முன்னாடி குரலை உயர்த்தி பேசாத.. பின் விளைவுகள் ரொம்ப பயங்கரமா இருக்கும்..” என்று எச்சரித்தான் ரிஷி..

அப்படி என்ன தவறு செஞ்சேன்னு நீ இந்த அளவு ஆடிக்கிட்டு இருக்கஎன்று ஆணவமாய் கேட்டவனின் முன் விற்பனை பிரிவு சம்மந்த பட்ட கோப்புகளை வீசினான். அவன் வீசியதில் கதிரின் முகம் கருத்து போனது.

ஆனாலும் காட்டிக்கொள்ளாமல் அதை எடுத்து பார்த்தவன்இதுல எந்த தவறும் நடந்த மாதிரி எனக்கு தெரியலையேஎன்க

உனக்கு எப்படி தெரியும்... நானே காமிக்கிறேன்என்றவன்

பிஎம் நிறுவனத்துல இருந்து ஏற்கனவே குடுத்த சரக்குக்கு இன்னும் பணம் வரவில்லை. அதனால அந்த நிறுவனத்துக்கு சரக்கு குடுக்க கூடாதுன்னு நிறுத்தி வச்சதை நீ உன் சுயநலத்துக்காக அவங்க கிட்ட கமிசனை வாங்கிகிட்டு வாரகடனை இன்னும் மேல மேல ஏத்தி வச்சிருக்க. அப்போ இதெல்லாம் உனக்கு தவறா தெரியலையா...”

நான் அப்படிதான் செய்வேன் உன்னால முடுஞ்சா நீ என்னை என்ன வேணா செஞ்சுக்கோ... நீ நேத்து பேஞ்ச மழையில முளைச்ச காலான்.. ஆனா நான் அப்படி இல்லஎன்றான் திமிராக.

ம்ஹும்.. அதையும் பார்க்கலாம்... யாரு ஆலமரம்... யாரு காலான் என்றுஎன்றவன்இன்னும் கொஞ்ச நேரத்துல அழைப்பு வரும் கூட்டத்துக்கு வந்து சேருங்கஎன்று எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தவன்

ரிஷி...” கதிர் கத்த

இங்க உன் கத்தலை வச்சுக்காத... இன்னும் அரை மணிநேரத்துல பஞ்சாயத்துக்கு ரெடி பண்ணியிருக்கேன் அங்க வந்து உன் சமத்தை காட்டு.. இப்போ இடத்தை காலி பண்ணுஎன்று மேலும் நக்கல் பண்ண

கதிருக்கு ஆத்திரம் எல்லை கடந்து போனது. பட்டென்று தாவி வந்து ரிஷியின் சட்டையை பிடிக்க வர அவனது அசைவுகளை கூர்மையுடன் கவனித்துக்கொண்டு இருந்த ரிஷிக்கு அவனது எண்ணம் புரிந்து போக சட்டென்று கதிரின் இலக்கிலிருந்து விலகியவன் நக்கலாய் அவனை பார்த்து சிரித்தவன்

கதிர் இது ஆபிஸ்.. அதனால தான் நான் இவ்வளவு பொறுமையா போறேன். ஆளுங்களை கூட்டிட்டு வந்து மிரட்டுறது, அடுச்சு விளையாடுறது இப்படி எந்த வேலை எல்லாம் என்னிடம் வேண்டாம். நீ இவ்வளவு நாள் செஞ்ச வேலைக்கெல்லாம் பலன் விரைவா கிடைக்க இருக்கு. சூதானமா வந்து வாங்கிட்டு போ. இப்போ இங்க நிற்க கூட உனக்கு நான் அனுமதி குடுக்கவில்லைஎன்றவன் பியூனை அழைத்து

கிளியர் பண்ணுங்க ராமு..” என்று விட்டு தன் இருக்கையில் அமர்ந்து மும்மரமாய் வேலை பார்க்க ஆரம்பித்தவனை கண்டு வஞ்சனை அளவில்லாமல் பெருகியது கதிருக்கு.

மஹிக்கோ கதிரின் பழிவாங்கும் பார்வை அடிவயிற்றில் பிரளயத்தை கொடுத்தது. பயத்தில் உடலெல்லாம் நடுங்கியது.

ராமு சுமுகமாய் அவர்களை பேசி அனுப்பி வைத்துவிட்டுரிஷி சார் கதிர் பயங்கர ஆபத்தானவன் அவனோட போய் எதுக்கு வம்பு வச்சுக்குறீங்க... எத்தனை பேரை அவன் வேண்டும் என்றே வீண் பழி போட்டு இந்த அலுவலகத்தை விட்டே துரத்தி இருக்கான் தெரியுமா..

வந்த மூணு மாசத்துல உங்களுக்கு எதுக்கு சார் இந்த பொல்லாப்பு.. எல்லோரும் போல கண்டுக்காம இருக்க வேண்டியது தானே.. அவன் அவங்க ஏரியால ரவுடி வேற சார்... பார்த்து கவனமா இருங்க..” என்று ராமு வேறு எச்சரிக்க மஹியின் பயம் நொடிக்கு நொடி ஏறிக்கொண்டே போனது.

ஆனால் அதற்க்கு நேர்மாறாய் ரிஷி பயங்கர அழுத்தமாய் இருந்தான். ராமு எச்சரிக்கைக்கு ஒரு புன்னக்கயை மட்டுமே பதிலாக கொடுத்தவன் மேற்கொண்டு செய்ய வேண்டிய வேளைகளில் முழுமையாக ஈடுபட்டவன் மஹியை  அடி கண்களால் நோட்டம் விட்டான்.

அவளது முகத்தில் தெரிந்த கவலையும் பயமும் அவனுக்கு சிரிப்பை கொடுத்தது. ஆனால் காட்டிக்கொள்ளவில்லை. எவ்வளவு பெரிய ஆளையும் சமாளிக்கும் திறமை தன்னிடம் இருக்கிறது என்பதை  இவள் புரிந்து கொள்ளும் நாள் வெகுவிரைவில் வரவேண்டும்...” என்று எண்ணியவனுக்கு தெரியவில்லை. அவனும் தன் வாழ் நாளில் ஒரு ஜீவனை சமாளிக்க முடியாமல், தன் கருத்தை ஏற்றுக்கொள்ள வைக்க முடியாது கலங்கி நிற்க போகிறான் என்று...

காலம் எப்போதும் ஒன்று போலவே இருக்காதே.. ஏற்றம் இறக்கம் எல்லாம் கலந்து இருந்து பெரும் சோதனைக்கு உள்ளாக்கி கலங்க வைத்து, வேடிக்கை பார்க்கும் மிக மோசமான பார்வையாளன் என்பதை பலர் மறந்து விடுகிறார்கள்.

மஹி கலங்கிய கண்களுடன் ரிஷியை பார்த்தாள். “நான் இந்த தவறை கண்டு பிடுச்சு இருந்திருக்கவே வேணாம்னு இப்போ தோணுது ரிஷிஎன்று சொன்னவளை கட்டிப்பிடிக்க தோணாமல்

அப்போ எவ்வளவு பெரிய தவருன்னாலும் அப்படியே விட்டுட்டு போகலாம்னு சொல்றியா..” என்று எரிந்து விழுந்தான்.

.. அப்படி சொல்லலங்க..” திக்கி திணறினாள்.

பின்ன நீ சொன்னதுக்கு அர்த்தம் வேற என்னன்னு நீங்களே சொல்லுங்க மேடம்என்று கடுப்படித்தான்.

ஏங்க இப்போ இப்படி கோவபடுறீங்க.. தவறை நான் தானே கண்டு பிடிச்சேன். அப்போ என்னை தானே கதிர் மிரட்டி இருக்கணும். தேவை இல்லாம உங்களை இதுல இழுத்து விட்டுட்டனேன்னு கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கேன். இதுல நீங்க வேற இப்படி பேசுறீங்க..” கண்ணீர் சிந்தியவளை

ஆழ்ந்து பார்த்தவன்ஆக உன்னை அவன் கிட்ட கோத்துவிட்டுட்டு என்னை புடவை கட்டிக்க சொல்ற அப்படி தானே..” என்று கேட்டவனை கண்டு இன்னும் கலங்கி போனாள்.

ரிஷிஎன்றாள் கதறலாக

என்னடி ரிஷி...  பதினைந்து வயது விடலை பையன் முதற்கொண்டு நாளை கட்டையில் போகிற கிழவன் வரை அவர்களோட இணையை யாரிடமும் விட்டு குடுக்க மாட்டாங்க... ஆனா நீ என்னை என்னன்னு நினைத்த... ஆபத்துக்கு பயந்து உன்னை அவன் கிட்ட விட்டுட்டு போவேன்னு நினைச்சியா...” என்று கோவத்தில் கண்கள் சிவந்தது அவனுக்கு.

கதிரிடம் கூட அவன் கோவபடவில்லை. நிதானமாக தான் பேசினான். ஆனால் தன் காதலி பேசிய பேச்சில் உள்ளும் புறமும் எரிந்தது அவனுக்கு. அவளுக்காக உலகத்தையே எதிர்த்து நிற்க துணிந்தவன் அவளது பேச்சில் அடிபட்டு போனான்.

உனக்காகசாகுறதுன்னா கூட சுகமா செத்து போவேண்டி. அப்பாடியாப்பட்டவன பார்த்து தேவை இல்லாம உங்களை இதுல கோத்துவிட்டுட்டனேன்னு சொல்ற... இப்படி சொல்ல உனக்கு எப்படி மனசு வந்தது. எனக்கு ஏதாவதுன்னா கூட நான் தாங்கிடுவேன்.. ஆனா உனக்கு ஒண்ணுன்னா சத்தியமா என்னால தாங்கிக்க முடியாதுடி...

லவ் பண்றேன்னு ரொம்ப சாதரணமா சொன்னதுனால என் காதலோட ஆழம் உனக்கு புரியலையா மஹி..” என்றான் வேதனையாக

ஐயோ நான் அப்படி சொல்லல ரிஷி..” என்றவளின் பேச்சுக்கள் அவனது காதில் வாங்கினால் தானே.

எனக்கு லவ்வ ஆடம்பரமா வெளிபடுத்த தெரியாது.. லவ் அப்படின்னா வாழ்ந்து காட்டனும் அது தான் லவ்வுன்னு நினைச்சேன். என்னோட செயல்கள் மூலமா தான் நீ என்னோட அன்பை லவ் அப்படின்னு உணரனும்னு நினைச்சேன். ஆனா நீ இப்படி உன்னையும் என்னையும் பிரிச்சி வச்சி என்னை கஷ்டபடுத்துவன்னு தெரியாதுடி.

உன்னை என் உயிருக்கு மேலா காதலிச்சுக்கிட்டு இருக்கேன். ரிஷிய வெட்டி பார்த்தின்னா அதுல நீ தான் முழுசா நிறைந்து போய் இருப்ப. ‘நான்அப்படின்றத என்னைக்கோ தூக்கி போட்டுட்டேன் மஹி.. ‘நாமாகிபோய் ரொம்ப காலம் ஆச்சு.. என் எண்ணம் சிந்தனை எல்லாமே உன்னை சுத்தி மட்டும் தான் இருக்கு.. அது உனக்கு இப்போ புரியலன்னா கூட கண்டிப்பா ஒரு நாள் உனக்கு புரியும்...” என்று மேலும் மேலும் அவன் புலம்ப ஆரம்பிக்க அவனது வார்த்தைகளில் இருந்த வலி அவளுக்கு புரிந்துபோனது.

இவ்வளவு நாள் அவனது அன்புவெரும் வறண்ட நிலத்துக்கு பாய்ந்த நீர் போலஎண்ணி இருந்தவள் இன்று அவனது கண்ணீர் மின்ன அவன் தன் வார்த்தையால் வெளியிட்ட காதலை உணர்ந்துதன் உயிருக்கும் மேலாகஅவனை அந்த நொடி முதல் நேசிக்க தொடங்கினாள்.

அதை அவனிடம் வெளிபடுத்த தயங்கியவள் அவன் மேலும் மேலும் ஏதேதோ சொல்லி புலம்ப, அவனது அந்த உளறல் கூட அவளுக்கு அவன் அவள் மீது வைத்திருந்த அதித அன்பை பறைசாற்றி சொல்ல ஒரு நிலைக்கு மேல் அவனை அப்படியே விட மனம் இல்லாமல் முதல் முறை அவனை நாடி வந்து தானே அவனது இதழ்களை தன் இதழால் மூடி அவனது புலம்பல்களுக்கு விடுப்பு கொடுத்தாள்.

மஹியிடமிருந்து இந்த செய்கையை எதிர் பாராதவன் திகைத்து போனான். சட்டென்று அவளிடமிருந்து விலகியவன்

என்ன ஆச்சு இப்போ எதுக்கு முத்தம் குடுத்தஎன்று கேட்டவனை கண்டு பட்டென்று சிரிப்பு வந்தது.

லூசு லூசு.. முத்தம் குடுத்தா அனுபவிக்கிறத விட்டுட்டு ஏன் எதுக்கு எப்படி என்னன்னு ஆராய்ந்து கேள்வி கேட்டுக்கிட்டு.. நீர் சரியான மாங்கா மடையார் ரிஷி..” என்று சொன்னவளை ரசனையுடன் பார்த்தவன்

நான் அப்படியே இருந்துட்டு போறேன்... ஆனா நீ என்னை ஏய்க்காம காரணத்தை சொல்லு..” என்றான் விடாபிடியாக

நானும் காதலிக்கிறேன் ரிஷி..” என்றாள் உருக்கமாக

யாரைஎன்று இவன் எகத்தாளம் பண்ண..

ம்ம் ரோட்டுல போறவன..” என்று கடுப்படித்தவள்

போடா டேய் உனக்கு போய் முத்தம் குடுக்கனும்னு வந்தேன் பத்தியா என்னை சொல்லணும்டா..” தலையில் அடித்துக்கொண்டவள் அந்த அறையிலிருந்து வேகமாய் வெளியேற போக

அவளை போகவிடாமல் கைபிடித்து நிறுத்தி அவளை ஆழ்ந்து பார்க்க அவனது பார்வையில் இருந்த காதலை உணர்ந்தவள் அதே காதலுடன் அவனை ஏறிட்டாள்.

அவளது பார்வையில் தெரிந்த உணர்வை படித்தவனின் உள்ளத்தில் இதை தான் கண்ணம்மா உன் கிட்ட இருந்து எதிர் பார்த்தேன்.. என் அன்புக்கு நிகரா நீயும் என்னை காதலிக்கனும்னு உள்ளுக்குள்ள மாமாங்கம் ஆசை இருக்கு.. இன்னைக்கு அது நிறைவேறி போச்சு.. எண்ணியவன் அவளது கைகளை சுண்டி இழுத்து தன்னோடு நெருக்கியவன்

ம்ம்... முத்தமிடுஎன்றான் தன் இதழ்களை காட்டி..

அது வரை அவனது பார்வையில் கட்டுண்டு இருந்தவள் அவனது பேச்சில் உணர்வு வந்து அவனை நக்கலாய் பார்த்தவள் 

ஆபர் எல்லாம் ஒரு முறை தான் மிஸ்டர் ரிஷி...” என்க

ம்ம்.. அப்படியா..” விஷமமாய் அவன் கேட்க

அப்படி தான்..” என்றவள் அவனிடமிருந்து விலக பார்க்க அதை முறியடித்தவன்இப்போவே காமினிக்கு போன் பண்ணி நம்மோட காதலை பத்தி சொல்றேன்என்றவன் அவளை ஒரு கையால் பற்றியபடி இன்னொரு கையில் போனை எடுத்து எண்களை போட வேகமாய் அதை வாங்கி அனைத்து வைத்தாள் மஹி..

அப்போ முத்தம் குடு

இப்படி மிரட்டி முத்தம் வாங்குறீங்களே உங்களுக்கே இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல..”

இல்ல

ரிஷி நான் குடுக்கும்போது வேணான்னு சொல்லிட்டு இப்போ இப்படி வம்பு பண்ணா என்ன அர்த்தம்.. முடியாதுஎன்று திட்ட வட்டமாய் மறுத்தவளை கண்டுசரி போஎன்று விட்டுவிட்டான்.

அவன் விடவும் அவளுக்கு சந்தேகம் வந்தது...

என்ன பண்ண போறீங்க..” என்றாள் ஆராய்ச்சியாய்.

அதை பண்ணும் போது பார்த்துக்கோங்க செல்லம்என்று கண்ணடித்தவன் கதிரை பற்றிய தகவல்களை முறையாக நிறுவனத்தின் உரிமையாளருக்கு தெரிவித்தான்.

மஹியின் எண்ணங்கள்என்ன செய்ய போறானோ..” என்று கூட்டத்தை பத்தியும், தனக்கு எந்த அளவில் சோதனைகள் வைக்க போகிறானோ என்பதிலும் உழன்று கொண்டு இருந்தாள்.

அடுத்த அரை மணிநேரத்தில் கூட்டமும் தொடங்கியது.

 

Comments

உயிருருக உன் வசமானேன்..