அத்தியாயம் 50
“ரொம்ப பயமா இருக்கு ங்க... உங்க நெஞ்சுல என்னை வச்சுக்கோங்க ப்பா.. எனக்கு எந்த பயமும் இருக்காது... என் தனிமையை பார்த்து தானே முன்னாடி ஊட்டிக்கு என்னை தேடி வந்தீங்க. இப்பவும் நான் தனியா தான் இருக்கேன். எழுந்து வாங்கங்க.. என்னவோ பாதுகாப்பு இல்லாத மாதிரியே இருக்கு” என்றவளின் கண்ணீர் அவனது முகத்தில் தெரித்தது. “எப்போ கண் முழிச்சு என்னை பார்ப்பீங்க சிங்கன். ஏற்கனவே என் அப்பாவுக்கும் பெரியப்பாவுக்கும் சந்தேகம் வந்திடுச்சு போலங்க.” “டாக்டர் கிட்ட இன்னைக்கு கூட என் வயித்துல பேபி இருக்கான்னு அழுத்தமா கேட்டு இருங்காங்க. இத்தனைக்கும் நான் வாந்தி மயக்கம் எதுவும் எடுக்கல. இன்னும் எத்தனை நாளுக்கு இப்படியே போகும்னு தெரியலங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு.” “வயித்து பிள்ளையை இவங்க கிட்ட இருந்து என்னால மறைக்க முடியுமான்னு தெரியல. அதனால நாளைக்கு மருந்து வந்து நீங்க குணம் ஆனா ஓகே. அப்படி இல்லன்னா உங்களை தூக்கிக்கிட்டு நான் இந்த நாட்டை விட்டே போகப்போறேன். எனக்கு வேற வழி இல்லங்க. உங்களையும் உங்க மகனையும் காப்பத்தணும். எங்க வீட்டு ஆட்கள் ஏங்க அப்பாவை மீறி யாரும் உதவிக்கு வர மாட்டாங்க. அதனால யாருக்கி...